கும்மிடிப்பூண்டி:ஏரியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கவரைப்பேட்டை அருகே, கீழ்மேனி கிராமத்தில் உள்ள ஏரியில், மாட்டு வண்டிகளை வைத்து, மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கவரைப்பேட்டை போலீசார், அப்பகுதியில் நேற்று, சோதனை மேற்கொண்டனர். மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தோர், போலீசாரை கண்டதும், மாட்டு வண்டிகளை விட்டு சென்றனர். இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.