கூலிபடையை வைத்து என்னை கொல்ல சதி: திகில் கிளப்பும் மம்தா

Added : மே 12, 2018 | கருத்துகள் (51)
Advertisement
மம்தா பானர்ஜி, கூலிப்படை உளவு, மம்தா அரசியல் ,என்னை கொல்ல சதி திட்டம் ,  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ,மம்தாவை கொல்ல சதி, 
Mamata Banerjee, Mercenary spy,,  West Bengal chief minister Mamata Banerjee, Mamata politics, conspiracy to kill Mamata,

கோல்கட்டா: கூலிப்படையை வைத்து என்ன கொல்ல சதி திட்டம் நடக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வங்காள செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி,என்னை கொலை செய்ய கூலிபடையினர் மூலம் ஏற்கனவே சதி திட்டம் தீட்டப்பட்டது. முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது. அந்த வகையில் அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டி உள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்ய என்னுடைய வீடு, அலுவலகம் என எல்லாவற்றையும் கூலிப்படையினர் உளவு பார்த்துவிட்டார்கள். சாவுக்கு நான் அஞ்சுபவள் கிடையாது.
வீட்டை மாற்றுமாறு எனக்கு போலீஸ் மற்றும் உளவுத்துறை, அறிவுரை வழங்கினர். உயிருக்கு பயந்து நான் வீட்டை மாற்றமாட்டேன். மேற்குவங்க மக்களை நான் விரும்புகிறேன் அவர்களின் வளர்ச்சிக்காக என்றும் பணியாற்றுவேன். என்னை யாரும் மிரட்டவும் முடியாது. மக்களுக்கான எனது பணியை தடுக்கவும் முடியாது. அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயார். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேங்கையன் - Tamilar naadu ,இந்தியா
12-மே-201819:53:27 IST Report Abuse
வேங்கையன் உண்மையே இந்த மதவாத மக்கள் விரோத முதலாளித்துவ ஆட்சியில் மக்களுக்கான அரசியல் செய்பவர்கள் அவர்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் அம்மா ஜெயலலிதாவும் அதில் அடக்கம். ஆகவே உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பார்கள் அவர்களுக்கு அதை தவிர வேறு மக்களாட்சி அரசியல் தெரியாது. நீங்கள் இருக்கும்வரை அங்கு வாக்கு இயந்திரத்தில் தில்லு முள்ளு செய்து வரலாம் நீங்கள் வாக்கு இயந்திரத்தை எதிர்ப்பதால் உங்களை போட்டுத்தள்ளுவார்களே தவிர அரசியல் செய்ய தெரியாது
Rate this:
Share this comment
Cancel
12-மே-201817:04:16 IST Report Abuse
சிவம் மம்தாவிற்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை - இருவரும் மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தின் ஓட்டுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள். இருவருக்கும் உள்ள வித்தியாசம் மம்தா எளிமையான வாழ்க்கை. கலைஞர் .....உங்களுக்கே தெரியும். ஆனால் ஒன்று, இருவருக்கும் உள்ள ஒற்றுமையால் நாட்டுக்கு கேடு.
Rate this:
Share this comment
Cancel
Kansami Ponsami - Thoothukudi,இந்தியா
12-மே-201816:40:50 IST Report Abuse
Kansami Ponsami முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது//ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் மாபெரும் செம்புத்தூக்கி பிஜேபியின் திட்டமாக மட்டுமே இருக்க முடியும்... அரசியல் கொலைகள் வெளியே கொலையாக தெரியாத அளவு தென்னகத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் பிஜேபியால் ஆரமித்து வைக்கப்பட்டு விட்டது.. இப்போது இந்தியா முழுதும் தங்கள் அரசியல் எதிரிகளை இந்துத்துவா கொள்கைகளுக்காக நாடு முழுதும் செயல்படுத்த மும்முரமாக இறங்கி விட்டார்கள்... இவர்கள் நாட்டை சூறையாட எந்த லெவலுக்கு செல்லுவார்கள்.. இவர்களை அழிக்கவேண்டிய கட்டாயம் இந்தியர்களுக்கு உண்டு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X