ராமாயண காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி : பஞ்சாப் கவர்னரின் சர்ச்சை பேச்சு

Added : மே 12, 2018 | கருத்துகள் (124)
Advertisement
பஞ்சாப் கவர்னர் சர்ச்சை பேச்சு, சேது பாலம், ராமாணயம் காலம், தொழில்நுட்ப வளர்ச்சி, மகாபாரத காலம், திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், பஞ்சாப் கவர்னர் வி.பி.சிங் பத்நூர் , 
Punjab Governor Controversy Talks, Sethu Bridge, Ramayana Period, Technology Development, Mahabharata Period, Tripura Chief Minister Biblab Teb, Punjab Governor VP Singh Padron,

சண்டிகர் : மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், தொலைத்தொடர்பு வசதிகள் இருந்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன் திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராமாயண காலத்திலேயே இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்ததாக கூறி பஞ்சாப் கவர்னரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு மொகாலியில் நடந்த விழாவில் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களிடையே பஞ்சாப் கவர்னர் வி.பி.சிங் பத்நூர் உரையாற்றினார். அப்போது அவர், கடலில் ராமர் கட்டிய சேது பாலம் ராமாயண காலத்திலேயே இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்ததற்கான சான்றாகும். அனுமன், லட்சுமணனுக்காக சஞ்சீவி மலையை கொண்டு வந்ததும் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அந்த காலத்திலேயே அதி நவீன ஆயுதங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

மேலும் பண்டைய காலத்திலேயே இந்தியாவில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு நமது இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் சான்று. இன்று இந்தியா அதிநவீன நாடாக திகழ்கிறது. தொழில்நுட்பத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-மே-201816:32:08 IST Report Abuse
arabuthamilan VBS . Manian அவர்களே நீங்கள் சொல்வது போல் தனுஷ்கோடியில் நீங்கள் பார்த்தது மிதக்கும் கல் அல்ல. அது நம்ம செல்லூர் ராஜு விட்ட தெர்மாகோல் .ஹி...ஹி..
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-மே-201809:27:25 IST Report Abuse
vbs manian பழங்காலத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லாதீர்கள். கட்டுமான துறையை பார்க்கலாம். ஆண்ட காலத்தில் அரசர்கள் கட்டிய கோட்டைகளையும் கோவில்களையும் பாருங்கள் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு நிற்கும்.இன்றைய என்ஜினீர்களுக்கு இந்த கட்டட நுணுக்கங்கள் தெரியுமா. கல்லணை இன்றும் இருக்கிறது. நமது வல்லுநர்கள் கட்டிய ஆணை ஒரு வெள்ளம் வண்டல் காணாமல் போகிறது. சோழர்கள் காலத்தில் நீர் பாசன வசதிகள் மிக அருமையாக இருந்தன இன்றும் அந்த கால்வாய்கள் உருமாறி கிடப்பதை பார்க்கலாம். சீனாவிலிருந்து வந்த யாத்திரிகர்கள் நம் நாட்டை பற்றி பெருமையாக எழுதியிருக்கிறார்கள்.இன்று நமக்கு சவால்கள் பூதகரமா ய் பெருகும் ஜனத்தொகை மாசு கட்டுப்பாடு வறுமை பஞ்சம் இவைகளை எதிர் கொள்ள ஆவண செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-மே-201823:28:43 IST Report Abuse
Pugazh V @Subramanian Arunachalam - பெருமாள் முருகன் ஒரு சாதாரண சிட்டிசன் ஆனால் கவர்னர் அப்படியா? ஒரு மாநில முதல்வரை விட பவர் இருக்கிற.அரசு அதிகாரி. அதனால் கவனமாகத்தான் பேச வேண்டும். ஒரு சாதாரண இந்தியன் வாய்க்கு வந்ததை பேசலாம் எழுதலாம் ஆனால் பொறுப்புள்ள அதிகாரிகள் கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X