நேபாள கோயிலில் மோடி: காங்., புகார்

Added : மே 12, 2018 | கருத்துகள் (68)
Advertisement
பிரதமர், மோடி, காங்.,, அசோக் கெலாட்

புதுடில்லி: கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் நேரத்தில், பிரதமர் மோடி நேபாளத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு சென்றது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி பொதுச்செயலர் அசோக் கெலாட் கூறியதாவது: கர்நாடக தேர்தல் நடக்கும் நேரத்தில் நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு கோயிலுக்கு சென்றதன் மூலம், கர்நாடகாவில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப முயற்சி செய்கிறார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். ஜனநாயகத்தில், இது நல்ல செயல் அல்ல. குஜராத் தேர்தல் அன்றும், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னரும் சாலை வழியாக பேரணியாக சென்றார். தேர்தல் காரணமாக கர்நாடக கோயிலுக்கு செல்ல முடியாது என்பதால், நேபாளம் சென்று, அங்கு கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். இதன் மூலம் நான் இந்து, எவ்வளவு மதப்பற்று உள்ளது என்ற செய்தியை வாக்காளர்களுக்கு அனுப்ப நினைக்கிறார்.

இது குறித்து கேள்வி கேட்டால், பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அமித் ஷா மற்றும் தன்னை தவிர மற்றவர்கள் யாரும் இந்துக்கள் இல்லை எனக்கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-மே-201815:58:19 IST Report Abuse
Malick Raja மடியும் மனிதர்கள் அறிவிலிகளாக உழல்வதும் இயல்புதான் ..
Rate this:
Share this comment
Cancel
Vadamalai Sathyamurthy - Chennai,இந்தியா
13-மே-201813:07:10 IST Report Abuse
Vadamalai Sathyamurthy அறிது அறிது மானிடராய் பிறத்தல் அறிது . பிறப்பது ஒருமுறை தான்.பிறந்தவர் அனைவரும் ஒருநாள் சாகத்தான் போகிறார்கள். வாழவேண்டும் என்ற ஆசையினால்தான் மக்கள் கடவுளை நினைக்கின்றனர்.வழிபாடுகளுக்கெல்லாம் இறைவன் அருள்பாலித்தால் இன்று அந்த இடத்த்தில் மட்டும் தான் அனைவரும் கூடுவர். இந்த இடம் எங்குள்ளது? விடைக்கல திருமந்திரத்தில் வரும் பாடல் ஒன்று மட்டும் தான் உள்ளது. " ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலை பெற நீர் நினைந்து உய்மினே. இறைவன் படைப்பில் மனிதகுலம் ஒன்றுதான் என்பதையும் படைத்த இறைவன் மிக சக்தி வாய்ந்தவன் என்பதன் உண்மையை உலகம் உணரும் நாள் வரவேண்டும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.உலகில் ஒருவர் கூட உண்மையை உணர முன்வருவார்களா? அப்படி வருபவர்களுக்கு இறைவன் மரணமில்லா பெறுவாழ்வளிப்பான் என்பதே தெய்வ புலவர் திருமூலரின் வாக்கு.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
13-மே-201812:34:32 IST Report Abuse
bal பாத் ரூம்ல அடங்கி கிடைக்கணும் என்கிறீர்களா....ஏன் ராகுல் பப்புக்கு போகலையா. இந்த ராகுல் குஜராத் தேர்தலிலிருந்து கோவிலுக்கு போக நாடகமாட ஆரம்பித்து இருக்கிறார். அதையும் மக்கள் நம்புகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X