சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பில்லை

'மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது; உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதன் மூலம், நடப்பாண்டு ஜூன், 12ல், அணையிலிருந்து நீர்திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், டெல்டாவில், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா, நீர் திறப்பு


மேட்டூர் அணையிலிருந்து, ஆண்டுதோறும், ஜூன், 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும்.

அதற்கு, அணையில் நீர் இருப்பு குறைந்தபட்சம், 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். 12ல் திறக்கப்படும் நீரின் மூலம், டெல்டாவில், நான்கு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி, தொடர்ந்து, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிதுவங்கும்.கடந்த, 2011ல் அணை நீர்மட்டம், 115 அடியாக இருந்ததால், ஆறு நாட்களுக்கு முன், ஜூன், 6ல், டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. பின், ஆறு ஆண்டுகளாக, நீர்மட்டம் குறைவாக இருந்ததால், மேட்டூர் அணையில், ஜூன், 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. மாறாக, தாமதமாக திறந்ததால், ஆறு ஆண்டுகளில், டெல்டாவில், 24 லட்சம் ஏக்கரில், குறுவை நெல் சாகுபடி பாதித்தது. நேற்று, அணை நீர்மட்டம், 34.87 அடி, நீர் இருப்பு, 9.6 டி.எம்.சி., இருந்தது. வினாடிக்கு, 2,000 கனஅடி நீர், குடிநீருக்கு வெளியேற்றுவதால், நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.இருப்பு குறைவாக இருப்பதால், வரும், 12ல், அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு நீர்திறக்க வாய்ப்பு குறைவு. அதற்கேற்ப, ஏற்காட்டு கோடைவிழாவை துவங்கிவைத்த, தமிழக முதல்வர் பழனிசாமி, 'மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது'

Advertisement

என கூறியுள்ளதன் மூலம், சூசகமாக, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.இதனால், டெல்டா மாவட்டங்களில், தொடர்ந்து, ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-மே-201800:46:55 IST Report Abuse

Mani . Vகாவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கு தண்ணீரை கேட்டு வாங்க துப்பில்லை. "மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது" என்று சொல்ல வெட்கமாக இருக்காதா? அப்புறம் எதற்கு அரசு பதவி?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-மே-201814:42:54 IST Report Abuse

Pugazh Vசுயமரியாதை, தன்மானம் இவை எதுவுமே இல்லாத 3 பேர் இருக்கிறார்கள். ஆரூராங், காசமணி கைபுள்ள - எப்ப பார்த்தாலும் சுய மாநிலம் தமிழகத்தையும், சுய இனத்தவர் தமிழர்களையும் தரக்குறைவாக எழுதுவது இவர்கள் மட்டுமே. சொந்த க்காரர்கள பேரப்பிள்ளைகளையும் கூட இப்படி தரக்குறைவாக தான் பேசுவார்கள் போல.

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
13-மே-201812:27:26 IST Report Abuse

pattikkaattaan எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், காடுகளை அழிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது ... நான் சிறுவனாக இருக்கும்போது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காடுகள் மிக அடர்ந்து இருக்கும் ... உள்ளே நடந்து செல்ல கூட முடியாது ... மரங்களை திருடுபவர்கள், வனத்துறை அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு பயன்தரும் நல்ல மரங்களை எல்லாம் வெட்டி கடத்திவிட்டனர் ... இப்போது கூகுள் மேப்பில் ஜூம் செய்து பார்த்தால் வெறும் புதர்ச்செடிகள் மட்டுமே காட்சி தருகின்றன ... பக்கத்து மாநிலமான கேரளா இன்னும் உறுதியாக காடுகளை பாதுகாக்கிறது ... நமக்கு இன்னும் மரங்களைப் பற்றி போதிய அக்கறை இல்லை ... வீடுகளில் மரம் வளர்க்கக்கூட பக்கத்து வீட்டினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .. குப்பை விழுகின்றது என புலம்புகின்றனர் ... மரம் நமக்கு பிராணவாயுவை தருகிறது என்ற அடிப்படையைக்கூட ஏற்க மறுக்கின்றனர் ... நம்மால் முடிந்த அளவு மரங்களை வளர்த்து , நம் பிள்ளைபோல் காப்போம் ... என் வீட்டில் (கோவையில் ) பத்து மரங்களுக்குமேல் வளர்த்து வருகிறோம் ... என் குழந்தைகளும் அவற்றை பாதுகாக்கின்றனர் .. ஒவ்வொருவரும் மரம் வளர்ப்போம் , வருங்கால சந்ததியை காப்போம் .. நன்றி

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X