பதிவு செய்த நாள் :
சுப்ரீம் கோர்ட், நாளை காவிரி வரைவு திட்டம் : நம்பிக்கை

உச்ச நீதிமன்றத்தில் நாளை, காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில், தமிழக அரசு உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால், இனியும் இவ்விவகாரத்தில், மத்திய அரசு காலம் கடத்தாது என்ற எதிர்பார்ப்பு, எல்லா தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட், நாளை காவிரி வரைவு திட்டம் : நம்பிக்கை

நாளைய விசாரணையின் போது, தமிழகத்திற்கு, காவிரியில் உரிய தண்ணீர் திறக்க,உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக, தமிழக அரசு, மத்திய அரசு, புதுச்சேரி மற்றும் கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர்,சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், ஏப்., 9ல், விசாரணைக்கு வந்தன.அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சேகர் நாப்டே, 'உச்ச நீதிமன்றம், பிப்., 16ல் அளித்த தீர்ப்பு தெளிவாக உள்ளது. செயல் திட்டம் என்பது, காவிரி

மேலாண்மைவாரியத்தை மடடுமே குறிப்பிடுகிறது.'எனினும், தீர்ப்பு தெளிவாக இல்லை என, மத்திய அரசு கூறுவதை ஏற்கக் கூடாது' என்றார்.

குழப்பம் :


மத்திய அரசு தரப்பில் ஆஜரான, தலைமை வழக்கறிஞர், வேணுகோபால், 'சில குழப்பங்கள் உள்ளதால், தீர்ப்பை அமல்படுத்த, மூன்று மாதம் அவகாசம் வேண்டும்; விரிவான செயல் திட்டம் என்பது,காவிரி நடுவர்மன்ற உத்தரவில் தெரிவித்த படி, அமைக்க வேண்டுமா என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்' என்றார்.அதைத் தொடர்ந்து நீதிபதிகள், 'காவிரி இறுதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள, விரிவான செயல் திட்டம் தொடர்பான வரைவை, நீதிமன்றத்தில், மே, 3க்குள், மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். 'மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின், செயல் திட்ட வரைவில் மாற்றம் செய்வது குறித்து, நீதிமன்றம் முடிவு செய்யும்' என, தெரிவித்தனர். மே, 3ம் தேதியும், வரைவு திட்டத்தை, மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை; மத்திய அரசு சார்பில், மேலும், 10 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'மே, 14ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம்,

Advertisement

மத்திய நீர்வளத்துறை செயலர், யு.பி.சிங், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டனர். கர்நாடகா தேர்தல் காரணமாகவே, மத்திய அரசு,காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யாமல், அவகாசம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தது.

வரைவு திட்டம் :


எனவே, நாளை, காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் என, தமிழக அரசு நம்பிக்கையுடன் உள்ளது. முதல்வர், பழனிசாமியும் இதை கூறியுள்ளார்.அதை உறுதி செய்யும் வகையில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, மே, 14ல், காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும். மேலும், கால அவகாசம் கேட்கப்படாது' என, மத்திய நீர்வளத் துறை செயலர், யு.பி.சிங் தெரிவித்துள்ளார். நாளை, மத்திய அரசு, காவிரி வரைவு செயல் திட்டத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், அதன் அடிப்படையில், தமிழகத்திற்கு, காவிரியில் தண்ணீர் திறக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்ற, எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, வரைவு செயல் திட்டத்தில் உள்ள சாதக, பாதக அம்சங்களை அறிந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி பிரச்னை, தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையாக இருப்பதால், மத்திய அரசின் வரைவு திட்டத்தை, அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த படி உள்ளனர். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-201822:48:48 IST Report Abuse

ஆப்புமேலாண்மை வாரியம் போய் வரைவுத் திட்டம் வந்தது டும்..டும்..டும்... அதைத் தூக்கி குப்பையில் போடுவாங்க டும்..டும்..டும்...

Rate this:
n.palaniyappan - karaikal ,இந்தியா
13-மே-201822:46:45 IST Report Abuse

n.palaniyappanபழனியப்பன் காரைக்கால் நீதி வெல்லட்டும். நியாயம் கிடைக்கட்டும்.. நடுவர் மன்ற தீர்ப்பில் உள்ளது போல் எல்லா அதிகாரம் கொண்ட வாரியாக அமைந்து. அதை செயல்படுத்தும் குழுவிற்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக அமைந்து எங்களின் துயர் நிரந்தரமாக தீர இறைவனிடம் வேண்டுகிறோம்.

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-மே-201822:38:08 IST Report Abuse

Vijay D Ratnamகாவிரி மேலாண்மை வாரியத்துக்கான காவிரி வரைவு திட்டம் நாளைக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தே ஆகவேண்டும். 44 ஆண்டுகளாக நடக்கும் அநியாயத்துக்கு, அக்கிரமத்துக்கு, அயோக்கியத்தனத்துக்கு சட்டப்போராட்டம் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஒரு முடிவுநிச்சயம் கிடைக்கும் என்று தஞ்சை டெல்டா விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் நல்ல முடிவுக்காக நாளைய விடியலுக்காக காத்திருக்கிறது. அதற்குள் வராது, நடக்காது, கெடைக்காது, என்று தரித்திரம் புடிச்சா மாதிரி கருத்தெழுதும் ஜென்மங்களை என்ன செய்வது. இதுல யுஎஸ்ஏ இருக்குற அகதிகள்லாம் கருத்து எழுதுறாய்ங்க.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X