அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பறந்து வந்து நடந்த கூட்டணி பேச்சு
பண பிரச்னையால் பாதியில் நின்னு போச்சு!

தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி, பண பிரச்னையால் பாதியில் நின்று விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது அணி, சந்திரசேகர ராவ், ஸ்டாலின்


பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக, தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்டோர் இணைந்து செயல்பட, வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் இருந்து, தி.மு.க., உள்ளிட்ட, சில கட்சிகளை இழுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.


சமீபத்தில், சென்னை வந்த அவர், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதை தொடர்ந்து, மூன்றாவது அணி அமைப்பது குறித்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுடன், ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சு நடத்தினார். அப்போது, தமிழகத்தில், பலமான கூட்டணி அமைப்பதற்கு, எந்தெந்த கட்சிகளைஇழுப்பது, தேர்தல் செலவுகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகள் தொடர்பாக, தி.மு.க., தரப்பில் எழுப்பிய சில கேள்விகளுக்கு, சந்திரசேகர ராவிடம் பதில் இல்லை. அதனால், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

ஸ்டாலினுடன் பேச்சு நடத்துவதற்காக, ஐதராபாத்தில் இருந்து, தனி விமானத்தில், சந்திரசேகர் ராவ், சென்னை வந்தார். கிட்டத்தட்ட, 24 மணிநேரம், சென்னையில் அவர் முகாமிட்டு இருந்தார். இதற்காக, விமான வாடகையாக மட்டும், ஒரு கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.சென்னையில் கூட்டணி பேச்சு நடப்பதற்கு முன், சந்திரசேகர ராவின் மகள் கவிதா அழைப்பில், ஸ்டாலின் மருமகன் சபரிஷன் மற்றும்

Advertisement

அண்ணாநகர் தொகுதி, எம்.எல்.ஏ., மோகன் மகன் கார்த்தி ஆகியோர், தனி விமானத்தில், ரகசியமாக ஐதராபாத் சென்றுள்ளனர். அதன்பிறகே, சந்திரசேகர் ராவ் - ஸ்டாலின் சந்திப்பு, இறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த பேச்சின் போது, தேர்தல் செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, சந்திரசேகரராவ் தெரிவித்த கருத்தில், ஸ்டாலினுக்கு திருப்தி ஏற்படவில்லை.இதனால், ஐதராபாத்திற்கு வரும்படி, சந்திரசேகர ராவ் விடுத்த அழைப்பை, ஸ்டாலின் கிடப்பில் போட்டுள்ளார். தேர்தல் செலவு விஷயத்தில், சந்திரசேகர ராவ் தரப்பில் இருந்து, நல்ல பதில் கிடைத்த பிறகே, அடுத்தகட்ட பேச்சுக்கு, தி.மு.க., தயாராகும்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
14-மே-201813:54:19 IST Report Abuse

Rajhoo Venkateshநல்ல ரீல் விட காத்துக்கிச்சு .

Rate this:
PaaviAavi - Hyderabad,இந்தியா
14-மே-201800:03:16 IST Report Abuse

PaaviAaviபுகழ் சார யாராவது பாத்தியளா?

Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-மே-201820:23:24 IST Report Abuse

elakkumananகாசு கேக்குற எவன்கொடையும் எந்த பழக்கவழக்கமும் கட்டுமரம் பரம்பரைக்கே கெடயாது. இது தெரியாம இந்த ராவ் வெட்டியா அலையிறார். வரலாறு தெரியாத அரசியல்வாதி. கட்டுமரம் குடும்பத்தின் பாரம்பரியம் சற்றேறக்குறைய நூறு ஆண்டு பெரியது. இதைக்கூட தெரிஞ்சுக்காம இந்த ராவ் அணி அமைச்சு பிணியை போக்கப்போறாரு. எல்லாம், மோடி பயம் செய்யுற வேலை. ஆந்திர பிரிவினால் முதல்வரானவர். இல்லனா, இவரு ஆந்திராவின் சுடலைதான். இலவு காத்த கிளிதான். தப்பிச்சுகிட்ட. போயி ஏதாவது நல்லது செய். ஒட்டு தன்னால விழும். கட்டுமரம் கூட தொடர்பு வேணாம் உனக்கு. கூடா நட்பு கேடாய் போகும். சந்தேகமா இருந்தா சீனா தான கிட்ட கேளு. ஆண்டிகள் மடம் கட்ட வாய்ப்பே இல்லை. கட்டுமரம் கரையேற வாய்ப்பே இல்லை. எந்த வழியில் போனாலும், முட்டு சந்துதான் கட்டுமரத்துக்கு. தமிழ் நாட்டுல நோட்டாவுக்கும் பிஜேபிக்கு போட்டி இல்லை. பல இடங்களில், நோட்டாவுடன் திருட்டு முட்டுக்கட்டைதான் நேரடி மோதலில். மக்களின் கோவம் கொலை வெறி அளவில் இருக்கு இந்த சுடலை மேல.

Rate this:
மேலும் 65 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X