பதிவு செய்த நாள் :
நேபாளத்துக்கு எதிரான எந்த செயலையும் இந்தியா அனுமதிக்காது: மோடி உறுதி

காத்மாண்டு: ''இந்தியாவின் நலனில், நேபாளம் மிகவும் அக்கறை வைத்துள்ளது; இந்தியாவுக்கு எதிராக, நேபாளத்தின் எல்லைகளை பயன்படுத்த, யாரையும் அனுமதிக்க மாட்டோம்,'' என, பிரதமர் மோடியிடம், அந்த நாட்டு பிரதமர், கே.பி.சர்மா ஒலி, உறுதி அளித்தார்.

மோடி, நேபாளம்


பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக, அண்டை நாடான நேபாளத்துக்கு, நேற்று முன்தினம் சென்றார். ஜனக்பூர் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள, ஜானகி தேவி கோவிலில் வழிபட்டார்; இதன்பின், ஜனக்பூர் - அயோத்தி, நேரடி பஸ் சேவையை துவக்கி வைத்தார்.

சந்திப்பு :

இதைத் தொடர்ந்து, நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு, பிரதமர் மோடி நேற்று

காலை சென்றார். நேபாள பிரதமர், கே.பி.சர்மா ஒலி, அதிபர், பித்யா தேவி பண்டாரி ஆகியோரை சந்தித்து பேசினார்.பிரதமரின் நேபாள பயணம் குறித்து, இந்திய வெளியுறவு செயலர், விஜய் கோகலே, காத்மாண்டுவில் கூறியதாவது:பிரதமர் மோடியின் நேபாள பயணம், வெற்றிகரமாக அமைந்தது. நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன், பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகள் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதித்தார். 'இந்திய நலன்களில் நேபாளம் அக்கறை வைத்துள்ளது. நேபாளத்தின் எல்லைகளை, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த, யாரையும் அனுமதிக்கமாட்டோம்' என, பிரதமர் மோடியிடம், நேபாள பிரதமர் உறுதியளித்தார்.

நெருக்கம் :

இதற்கு பிரதமர் மோடி அளித்த பதிலில், 'இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும், எல்லைக் கட்டுப்பாடு இல்லாதது, இரு நாடுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்துக்கு எதிரான எந்த செயலையும், இந்தியா அனுமதிக்காது' என, உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.பிரதமர் மோடியை நேற்று காலை, நேபாளத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர்.நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், புஷ்ப கமல் பிரசாந்தா, நேபாள காங்., தலைவரும், முன்னாள் பிரதமருமான, ஷேக் பகதுார் தியூபா ஆகியோர் சந்தித்து பேசினர்.

Advertisement

முக்திநாத் கோவிலில் வழிபாடு :

பிரதமர் மோடி, நேபாள - சீன எல்லையில் அமைந்துள்ள, முக்திநாத் கோவிலுக்கு, நேற்று காலை சென்றார். இந்த கோவில், ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி, புத்த மதத்தினருக்கும் புனிதமான கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்ற, முதல் வெளிநாட்டு தலைவர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து, பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள, பசுபதிநாத் கோவிலுக்கும் சென்று, பிரதமர் மோடி வழிபட்டார்.முக்திநாத், பசுபதிநாத் கோவிலில் வழிபட்டது பற்றி, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்',பிரதமர் மோடி, 'முக்திநாத்தின் அருளை பெறும் பாக்கியம் கிடைத்தது. நேபாளம் ஒரு ஆன்மிக பூமி' என, தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-மே-201812:08:22 IST Report Abuse

Malick Raja2019.க்கு பிறகு இதே வேஷத்தில் மோடி வர வாய்ப்பு அதிகமாகவே உள்ளதாக உளவுத்துறை செய்தி வந்துள்ளதாம்

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-மே-201815:08:08 IST Report Abuse

Cheran Perumalஅரேபிய உளவுத்துறையா? அல்லது பாகிஸ்தானா? ...

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-மே-201809:47:28 IST Report Abuse

Agni Shivaநேபாளம் மீண்டும் தனது பாதைக்கு திரும்புகிறது. அந்த நாடு 100 சதவீத ஹிந்து நாடு என்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவும் நேபாளத்திற்கும் இடையே அனைத்து துறைகளிலும் நெருங்கிய உறவு ஏற்படவேண்டும். ஹிந்து மதத்தின் அடிப்படையில் நேபாளம் இந்தியாவின் பிரிக்கப்படமுடியாத உறவு நாடாக மலரவேண்டும்.

Rate this:
13-மே-201819:54:05 IST Report Abuse

ஆப்புகர்னாடகாவில் சிவன் கோவிலுக்குப் போனாரா?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-மே-201809:28:09 IST Report Abuse

Agni Shivaஅவரே எம்பெருமான் இறைவன் தந்த ஒரு கொடைடா..உலக மக்களே கொண்டாடும் ஒரு அற்புதம். அவரை நேரில் காண நேபாள மக்கள் கூடிய கூட்டத்தை youtube ல் சென்று பார். கண்ணிருந்தும் குருடனாக இருக்காதே. உலகமே கொண்டாடும் ஒரு மாபெரும் சகாப்தம் அவர். ...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X