இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்| Dinamalar

இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்

Added : மே 13, 2018 | |
தேனி, ''பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,''என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது

தேனி, ''பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,''என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள் ளனர்.வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும், என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X