தேவதானப்பட்டி:''விடுதலைச்சிறுத்தை கட்சி மீது காழ்ப்புணர்ச்சியில் விமர்சனங்கள் கூறப்படுகிறது, ''என, அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் ஏப். 25 ல் இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. 20 பேர் காயமடைந்தனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. 15 வீடுகள் சேதமடைந்தன. 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மீது விமர்சனம் எழுந்தது.நேற்று பொம்மிநாயக்கன்பட்டி வந்த திருமாவளவன் இருதரப்பினரையும் சந்தித்து பேசினார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''இருதரப்பினரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வெளி வந்த பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE