தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா

Added : மே 14, 2018 | கருத்துகள் (231)
Advertisement
தமிழக பாஜக, அமித்ஷா, கர்நாடக சட்டசபைக்குத் தேர்தல்,  பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ,  கர்நாடக தேர்தல் முடிவுகள் , தமிழகத்தில் பாஜகவை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா,  பாஜக,
Tamilnadu BJP, Amit Shah, BJP, Karnataka  Assembly election, BJP national president Amit Shah, Karnataka Election Results,

சென்னை: கர்நாடக சட்டசபைக்குத் தேர்தல் முடிந்திருக்கிறது. அடுத்ததாக, தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க, பா.ஜ., தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா பேசத் துவங்கி இருக்கிறார்.

தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகத்தில், பா.ஜ.,வை வேகமாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில், அகில இந்திய பா.ஜ., வேகமாக களம் இறங்கும் என, ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல, கர்நாடக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா களம் இறங்கி விட்டார். விரைவில் தமிழகம் வந்து, கட்சி தலைவர்கள் பலரையும் சந்தித்து, கட்சி வளர்ப்புப் பணிக்காக அசைன்மெண்ட் கொடுக்கத் தயாராகி இருக்கும் அமித்ஷா, முன்னோட்டமாக தமிழக பா.ஜ., தலைவர்களிடம் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க இதுவரை ஒவ்வொரு தலைவரும் திரட்டி வைத்திருக்கும் தகவல்களை, நேரடியாக அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அப்படி வரும் தகவல்களை வைத்து, கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்தத் தலைவர்கள் கூறினர்.

வாசகர் கருத்து (231)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHANARENGAN SRINIVASAN - Tiruchirappalli,இந்தியா
19-மே-201813:53:47 IST Report Abuse
MOHANARENGAN SRINIVASAN மாநிலத்தில் சுய ஆட்சி + மத்தியில் கூட்டாட்சி - இந்த தத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். இந்த கூற்றை யார் ஒப்புக்கொள்கிறார்களோ அவர்களுக்கு தமிழர்களின் வாக்கு நிச்சயம். தற்சமயம் இந்த வழியை கடை பிடிப்பவர்கள் தி.மு. க. மற்றும் அதன் தலைவர் திரு . ஸ்டாலின் மட்டுமே. எனவே திமுக விற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
19-மே-201811:06:37 IST Report Abuse
Ashanmugam அமித்ஷா பிஜேபியின் சாணக்கியன் என்று சொன்னால் மிகையாகாது. கர்நாடகாவில் எப்படி 104 சீட் பிடிக்க என்ன உத்தியை கையாண்டாரோ அதே உத்தியை நூதன முறையில் கையாண்டு தமிழகத்தில் உள்ள ஜாம்பவான்கள் கட்சிகளின் பலவீனத்தை ஆராய்ந்து, அந்தக்கட்சிகளை தனது அதி புத்திசாலியால் , பலவீனம் படுத்தி பிஜேபி கால் ஊன புதிய அரசியல் வியூகத்தை கையாளுவார்.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
19-மே-201809:52:49 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தமிழன் என்ன முட்டாளா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X