சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ அலுவலர்கள் உண்ணாவிரதம்

Added : மே 14, 2018
Share
Advertisement
சென்னை: அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு, சிறப்பு மதிப்பெண் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மத்திய - மாநில அரசுகள் மற்றும் எம்.சி.ஐ.,யின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று, சென்னையில் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு, சிறப்பு மதிப்பெண் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மத்திய - மாநில அரசுகள் மற்றும் எம்.சி.ஐ.,யின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அதில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்கள், அதிகம் பயனடையும் வகையில், இந்த ஆண்டில், சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.மேலும், நிரந்தர தீர்வாக, அரசு மருத்துவர்களுக்கு, இட ஒதுக்கீட்டில், ௫௦ சதவீத இடங்களை ஒதுக்கும் வகையில், தமிழக அரசு, தனி சட்டம் இயற்ற வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி, ஈட்டிய விடுப்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும், மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில், சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும்.'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X