பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா இனி, முன்னாள் சகோதரி
புது, 'பட்டம்' சூட்டிய திவாகரன்

திருவாரூர்: ''சசிகலா பற்றி, இனி பேசமாட்டேன். அவர், என் சகோதரி அல்ல; முன்னாள் சகோதரி. இனிமேல், மன்னார்குடி மாபியா குடும்பம் என்ற பெயர் எனக்கு இருக்காது,'' என, திவாகரன் காட்டமாக கூறினார்.

சசிகலா முன்னாள் சகோதரி,  திவாகரன், மன்னார்குடி மாபியா குடும்பம் , சசிகலா தம்பி திவாகரன் , அதிமுக, சசிகலா குடும்பம் ,  TTV தினகரன், Sasikala former sister, Divakaran, Mannargudi Mafia family, Sasikala brother Divakaran, AIADMK, Sasikala family, TTV Dinakaran,தெரியவில்லை :


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், நேற்று, சசிகலாவின் தம்பி திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சசிகலா தரப்பில் இருந்து வந்த, நோட்டீசில் குழப்பங்கள் உள்ளன. அவர், அ.தி.மு.க.,வுக்கு பொதுச்செயலரா அல்லது அ.ம.மு.க.,வுக்கு பொதுச்செயலரா என, தெரியவில்லை. நான், சசிகலா படத்தை பயன்படுத்த வேண்டாம் என, கூறியிருந்தேன். ஆர்வ கோளாறால், அவர் படத்தை தொண்டர்கள் பயன்படுத்தினர். இனிமேல், சசிகலா படத்தையோ, பெயரையோ பயன்படுத்த மாட்டோம்.

அ.தி.மு.க., வில் இருந்து பிரிந்து போனவர்களை இணைத்து, ஒரு அணியாக செயல்பட முயற்சி எடுப்போம். சசிகலாவை

வெளியில் கொண்டு வர, நான் எடுத்த முயற்சியை சிலர் முறியடித்து விட்டனர். பன்னீர்செல்வம், பழனிச்சாமியை எப்படி சசிகலாவுக்கு எதிராக, தினகரன் திருப்பினாரோ, அதே போல், தற்போது, என்னையும் சசிகலாவுக்கு எதிராக திருப்பியுள்ளார். இதன் மூலம், நான், என் சகோதரியை கடுமையாக விமர்சிப்பேன் என, தினகரன் நினைக்கிறார்.

சிறையில் இருக்கும் சசிகலாவை, என்னை வைத்து அவமதிக்கவும், அவரது புகழை சீர் குலைக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த தவறை, நான் செய்யமாட்டேன். சசிகலா பற்றி பேசமாட்டேன். அவர், இனி என் சகோதரி அல்ல; முன்னாள் சகோதரி. என்னை, மனநிலை, உடல்நிலை சரியில்லாதவர் என, கூறுவது, அரசியல் ரீதியாக, அவர்களால் பதில் கூற முடியவில்லை என்பதை காட்டுகிறது.

நான் அளிக்கும் பேட்டியை பார்த்து, உண்மையை உடைக்கிறார் என, ஆதங்கப்படுகின்றனர். மனநிலை சரியில்லாத வருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்புகின்றனர். மன்னார்குடி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தொடர்ந்து தோற்று போனதற்கு காரணம், தினகரன் மீது போடப்பட்ட பெரா வழக்கு மற்றும் வளர்ப்பு மகன் திருமணம் தான்.

அ.தி.மு.க.,வில், எனக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. ஆனால், விமர்சனம் செய்கின்றனர். மன்னார்குடியில் பிறந்தவர் தினகரன்; 10 ஆண்டுகள், எம்.பி., ஆக

Advertisement

இருந்தவர். அவர், இங்கு வந்து கட்சியை வளர்த்து இருக்கலாம். அதை ஏன் அவர் செய்யவில்லை. 'ஆட்சி அமைப்போம்; இரட்டை இலையை மீட்போம்' என்றார்.

நடக்கவில்லை :


ஆனால், அவர் கூறியதில் எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசின் செயல்பாடு, 50 சதவீதம் நன்றாகவும், 50 சதவீதம் பாதிப்பாகவும் உள்ளது.என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சசிகலா, குடும்பம் என்ற தகுதி எனக்கு தேவை இல்லை. இனி, மன்னார்குடி மாபியா குடும்பம் என்ற பெயர் எனக்கு இருக்காது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், சிறு வயதில் இருந்து கட்சி பணியாற்றி நல்ல தலைவராக உயர்ந்துள்ளார். அவர், என் மீது நல்ல மதிப்பு வைத்து இருப்பதால், விமர்சிச்கவில்லை. இவ்வாறு, திவாகரன் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
15-மே-201816:30:20 IST Report Abuse

Ramaswamy Sundaramஇவங்க சண்டை ஒஞ்சுதா இல்லையா? ஊரெல்லாம் நாறுது?

Rate this:
ARUL - chennai,இந்தியா
15-மே-201808:27:55 IST Report Abuse

ARULமன்னார்குடி மாபியா குடும்பம் என்ற பெயர் எனக்கு இருக்காது.நீங்கள் சொல்லுவது நடக்கும் என்று வைத்துக் ,கொண்டாலும், """முன்னாள் மன்னார்குடி மாபியா குடும்பம் என்ற பெயர் """ ஒட்டிக் கொண்டிருக்குமே. அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

Rate this:
s t rajan - chennai,இந்தியா
15-மே-201808:25:53 IST Report Abuse

s t rajanகுப்பைத் தொட்டியும் செப்டிக் டேங்கும் சண்டையிட்டுக் கொள்கின்றன.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-மே-201813:37:35 IST Report Abuse

தமிழ்வேல் கக்கூஸுக்காக, குப்பைத் தொட்டியும் செப்டிக் டேங்கும் சண்டையிட்டுக் கொள்கின்றன ...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X