தீயாக வேலை செய்து மண்டபத்தை மீட்ட மக்கள்! 'ஹாயாக' சம்பாதித்து மண்டபம் கட்டுற 'மன்னர்'

Added : மே 15, 2018
Advertisement
எப்போதும் வெயில் கொளுத்தும் திருப்பூரில், கோடை மழை ஒரு காட்டு காட்டிக் கொண்டிருந்த மாலை வேளையில், சித்ராவும் மித்ராவும், கடை வீதிக்கு வந்து வசமாக மாட்டி கொண்டனர். இருந்தாலும், ஒரு கடையின் முன்வாசலில், ஓரமாக நின்றவாறு, மழையை ரசித்து கொண்டிருந்தனர்.''லிங்கேஸ்வரர் ஊரில், கோவில் மண்டப விவகாரத்தில், இரு துறை அதிகாரிகளுக்கிடையே ஒரே 'பனிப்போர்' நடந்தது தெரியுமா?''
தீயாக வேலை செய்து மண்டபத்தை மீட்ட மக்கள்! 'ஹாயாக' சம்பாதித்து மண்டபம் கட்டுற 'மன்னர்'

எப்போதும் வெயில் கொளுத்தும் திருப்பூரில், கோடை மழை ஒரு காட்டு காட்டிக் கொண்டிருந்த மாலை வேளையில், சித்ராவும் மித்ராவும், கடை வீதிக்கு வந்து வசமாக மாட்டி கொண்டனர். இருந்தாலும், ஒரு கடையின் முன்வாசலில், ஓரமாக நின்றவாறு, மழையை ரசித்து கொண்டிருந்தனர்.''லிங்கேஸ்வரர் ஊரில், கோவில் மண்டப விவகாரத்தில், இரு துறை அதிகாரிகளுக்கிடையே ஒரே 'பனிப்போர்' நடந்தது தெரியுமா?'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா. நானும் கேள்விப்பட்டேன். பல ஆண்டுகளாகவே, மண்டப குரூப்புக்கு ஆதரவாகவே அதிகாரிகள் இருக்காங்களாம். இப்பத்தான் ஏதோ ஒரு வகையில், விழித்துக்ெகாண்ட அதிகாரிகள் அதை மீட்க படாதபாடுபட்டு, கோர்ட்டில் உத்தரவு வாங்கிட்டாங்க. ஆனால், அதை செயல்படுத்த பல நெருக்கடியாம்,'' என்று தனக்கு தெரிந்ததை சொன்னாள் மித்ரா. ''நீ.. சொல்றது கரெக்ட்தான். கோர்ட் உத்தரவு வந்ததும், மண்டபத்தை கோவிலுக்கு ஒப்படைக்குமாறு கேட்க சென்ற அறநிலையத்துறை அதிகாரியை, முக்கிய பொறுப்பிலுள்ள 'ரெவின்யூ' அதிகாரி, ரொம்பவே பேசிட்டாராம். இருந்தாலும், எப்படியும் மண்டபங்களை கோவிலுக்கு சேர்த்தியே தீருவோம்னு, ஒரு அணி ரொம்ப 'தீயாய் வேலை செய்து, ஒருவழியாய் மீட்டுட்டாங்க. கோர்ட் உத்தரவு வந்தப்ப 'சாவி'ய கொடுத்திருந்தா இவ்ளோ 'லேட்' ஆகியிருக்காது,'' என்று சித்ரா சொன்னதும், ''நீங்க சொல்றது, நுாத்துக்கு நுாறு சரிதான்,''என்றாள் மித்ரா.இடி, மின்னல், காற்றுடன் மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. மழை நீரில் கைகளை நனைத்தவாறு, குஷியானாள் மித்ரா. ''என்ன... மித்து. மழையை நல்ல 'என்ஜாய்' பண்றே போல,'' என்று சித்ரா சொன்னதும், ''வராது வந்த மழை அல்லவா?'' என்றாள் மித்ரா.''ஏது, போற போக்கில கவிஞி ஆகிடுவாய் போலிருக்கு,'' என்று சொல்லி சிரித்த சித்ரா, ''இளம் பெண் கடத்தல் முயற்சி வழக்கில், சம்பந்தமில்லாத நபரை சிக்க வைச்சுட்டாங்களாமே,'' என்றாள்.''ஆமாம். பக்கத்தில், வெண்ணெய்க்கு பேர் போன ஊரிலுள்ள ஒரு மில்லில் வேலை செய்த வட மாநிலப்பெண்ணை கடத்த முயற்சி செய்த விவகாரத்தில், அதே மில்லில் வேலை செய்யும், இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரை சந் தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடமிருந்து மொபைல் போன், கடுக்கன் எல்லாத்தையும் வாங்கி வெச்சுட்டாங்களாம். விசாரணை முடிவில், அவருக்கு தொடர்பும் இல்லை என்று அனுப்பினாலும், பொருட்களை திரும்ப கொடுக்கலையாம்,'' என்றாள் மித்ரா. ''ஏன்தான் இப்படி பண்றாங்களோ?''என்று சலித்து கொண்ட சித்ரா, எத்தனை வாகனம் இருந்தும் கலெக்டர் ஆபீசில், ஒப்பந்த அடிப்படையில், சில கார்கள் உள்ளதாம். சில அதிகாரிகள் இவற்றை, தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தறாங்களாம். இதையெல்லாம் யார் கேட்பதுமித்து?''ஆவேசப்பட்டாள்.மழை கொஞ்சம் ஓய்வெடுக்க ஆரம்பித்தது. அருகில், ஒரு பேக்கரி தென்படவே, இருவரும் பேக்கரிக்குள் சென்று, லெமன் டீ ஆர்டர் கொடுத்தனர்.''இன்னைக்கு மழை வந்தங்காட்டி கொஞ்சம் பரவாயில்லை. வெயில் கொடுமைக்கு எங்காவது டூர் போயிட்டு வந்தா நல்லாயிருக்கும்,'' என்றாள் மித்ரா.''நீ எந்த தேர்தல்ல ஜெயிச்சிருக்க, டூர் போலாங்கறதுக்கு'' என்று கேள்வி கேட்டாள் சித்ரா.'என்னக்கா, ஏதோ 'மேட்டர்' சொல்ல வர்றீங்க போல,''என்று ஆர்வமாக கேட்டாள் மித்ரா.''திருப்பூர் அர்பன் பாங்க் 'சவுத்'துக்கு ஒதுக்கினதால, அவரோட 'ரைட் ேஹண்ட்டுக்கு' தலைவர் பதவிய கொடுத்திருக்காரு. ஆனா, 'மாஜி' நின்ற சங்க தேர்தல் சொதப்பியதாலயும், 'அர்பன்' பாங்க்ல வெற்றிகரமா தேர்தல முடிச்சுட்டாங்க. அந்த வெற்றிய கொண்டாடத்தான் சிங்கப்பூர் போயிருக்காங்களாம்.'சவுத்', அவரோட நிழல் 'சாமி பேர கொண்ட அப்பனும்', சிங்கப்பூர் போயிருக்காங்களாம்.'' என்று விளக்கினாள் சித்ரா.''லாட்டரி, கந்துவட்டிய ஒழிச்சு கட்டினதா சொன்னாலும், ஆளுங்கட்சி ஆதரவோட திருப்பூர்ல இவையெல்லாம், அமோகமாக போயிட்டு இருக்காம். உங்களுக்கு தெரியுங்களா,?'' என்றாள் மித்ரா.''ம்... ம்... எம்.எல்.ஏ.,க்களுக்கு வேண்டியவங்கன்னு சொல்லிட்டு, '3' நம்பர் லாட்டரி விற்பனை ஜோரா போகுதாம். 'டாஸ்மாக்' வருமானத்தை 'மாஜி' பார்த்துக்கிறார். அதேபோல், கிளை பொறுப்பாளர்கள், '3' நம்பர் லாட்டரி நடத்தறோம்னு சொல்லிகிட்டே, சக்கப்போடு போட்டுட்டு இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, லெமன் டீ வரவே, இருவரும் சுவாரசியமாக குடிக்க ஆரம்பித்தனர். உடனே, 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது,' என சித்ராவின் மொபைல் போனில், டி.எம்.எஸ்., குரல் ஒலித்தது.போனில் பேசி விட்டு, பர்சுக்குள் பத்திரமாக வைக்கவும், டீ குடித்து முடிக்கவும் சரியாக இருந்தது. ''திருப்பூர்ல தீக்குளிக்க முயற்சிக்கறது ரொம்ப அதிகமாயிருச்சே. கண்ணுல விளக்கெண்ணெய விட்டுட்டு பார்த்தாலும், போலீச ஏமாத்திட்டு, கலெக்டர் ஆபீசுக்குள்ளயே மண்ணெண்ணெய எடுத்துட்டு போயிடறாங்களாம்,'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா. நானும் கேள்விப்பட்டேன். தீக்குளிச்சா தான், கோரிக்கை நிறைவேறும் என்று, மக்கள் நினைச்சுக்கிறாங்க. அதற்கேற்றவாறு, அதிகாரிகள் ரொம்பவே 'மந்தமா'த்தான் இருக்காங்க. இதே மாதிரிதான், வளர்மதி சங்கத்துக்கு முன், 'மாஜி' ஊழியர் ஒருத்தர் தீக்குளிக்கறேன்னு, 'டிராமா' போட்டாரே நினைவிருக்கா?'' என்றாள் மித்ரா.''நல்லா ஞாபகம் இருக்கு. அதுல என்ன விஷயம்?'' என கேட்டாள் சித்ரா.''தீக்குளிக்க போறேன்னு, இரண்டு நாளைக்கு முன்னமே, ரேஷன் கடை சுவத்தில், எழுதி ஒட்டிட்டு வந்துட்டாரு. அரை மணி நேரத்துக்கு முன்னாடி, கால் லிட்டர் 'கெரசினை, அரை லிட்டர் தண்ணியில கலந்து, தனியா பாட்டில்ல வச்சுட்டாராம். தீப்பெட்டிய, தண்ணியில, 10 நிமிஷம் வச்சு எடுத்து வச்சுக்கிட்டாராம்,'' என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.''இத்தனைக்கும் ரேஷன் கடை ஊழியர் மீது ஏகப்பட்ட புகார் போய், 'சஸ்பெண்ட்' ஆன நிலையில், 'டிராமா' போட்டாராம். சில பேர் இப்படி சுய விளம்பரத்துக்கு இப்படியெல்லாம் பண்றாங்க. என்ன செய்யறது மித்து?. நேரங்காலம் வரும் போது, இப்படிப்பட்ட சுய விளம்பர விரும்பிகளோட, முகத்திரையை நாமே கிழிக்கப்போறோம் பார்த்துக்கோ..!,'' என்றாள் சித்ரா கோபமாக.''அக்கா... 'டுபாக்கூர்'களை பத்தி பேசி, ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க. நேரம் வர்றப்ப 'வெச்சு செஞ்சுடலாம்,' என்ற மித்ரா, ''கலெக்டர் ஆபீசில் நடந்த கூட்டத்தில், பெருந்துறை எம்.எல்.ஏ., கலந்துக்கிட்டு, அதிகாரிகளிடம், கேள்விகளால் துளைச்சு எடுத்துட்டாராம். பதில் சொல்ல முடியாம, அதிகாரிகள் திணறிட்டாங்களாம்,'' என்றாள்.டீக்கு காசு கொடுத்து விட்டு இருவரும் புறப்பட்டனர். இப்போது, மழை ஓய்ந்திருந்தது. ''அதெப்படி, பெருந்துறை எம்.எல்.ஏ., திருப்பூர் கலெக்டர் ஆபீசுக்கு.....'' என்று சித்ரா இழுத்ததும், ''ஏன்க்கா வரக்கூடாதா? ஊத்துக்குளி ஒன்றியம், திருப்பூர் மாவட்டம். ஆனா, தொகுதி, பெருந்துறைக்கு வருது,'' என்று மித்ரா விளக்கியது, ''அட... ஆமாம்,'' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள் சித்ரா.ரோடு முழுவதும் தண்ணீர் மகிழ்ச்சியுடன், அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, மெதுவாக வண்டியை ஓட்டியபடி, சித்ரா, ''சிட்டி போலீசில், வசூல் ராஜாக்கள், ரொம்ப சந்தோஷமாக இருக்காங்களாம்,'' என்றாள்.''அப்படியாக்கா... என்ன விசேஷம். ஒரு வேளை 'சீறும் அதிகாரி' லீவில் உள்ளாரோ என்னவோ?'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்குள், ''அடடே, எப்படி கரெக்டா, கண்டுபிடிச்சே. அந்த அதிகாரி ஒரு மாசம் லீவாம். இதை தெரிஞ்சுகிட்ட, ஐ.எஸ்., முதல் ஸ்டேஷன் தனிக்காட்டு ராஜாக்கள்' வரை, மகிழ்ச்சி கடலில் மிதக்கின்றனராம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. இன்னொரு அதிகாரி, தன்னோட பொண்ணு கல்யாணத்துக்காக, வி.ஐ.பி.,க்களுக்கு காவிரி பிரச்னை மாநில தலைநகரில், சகல வசதிகள் உள்ள லாட்ஜில் ரூம் போட ஏற்பாடு பண்ணிட்டு இருக்கிறாராம்.
''தன்னோட வருங்கால மாப்பிள்ளைக்கு, லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்துல பல ஏக்கர் நிலத்தை சீதனமா கொடுத்து, பெரிய 'ஹாஸ்பிட்டல்' அல்லது மண்டபம் கட்டப்போறாராம்,'' ''ஓேஹா... விஷயம் அப்படிப்போகுதா? இங்க கல்யாணம் வெச்சா, வி.என்.டி.சி.,க்கு தெரிஞ்சுடும் நினைச்சு, அங்கு வைச்சிருப்பார் போல. ஏன், மித்து சரிதானே...!'' என்று சொல்லி சித்ரா சிரித்தாள். அதற்குள் மித்ரா வீடு வரவே, அவளை இறக்கி விட்டு, வண்டியில் சீறினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X