காங்., பிரித்தாளும் சூழ்ச்சியை நிராகரித்த மக்கள்; நிர்மலா

Updated : மே 15, 2018 | Added : மே 15, 2018 | கருத்துகள் (112)
Advertisement
Karnataka election verdict, BJP, Congress, கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா ,  சித்தராமையா , தேவகவுடா,   காங்கிரஸ்  தலைவர்  ராகுல்  ,2019 மக்களவை தேர்தல்,  பிரதமர் நரேந்திர மோடி,  இன்று ஓட்டு எண்ணிக்கை ,  லோக்சபா தேர்தல் 2019 , தேவ கவுடா,  மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடகா தேர்தல் முடிவுகள் ,  யாருக்கு வெற்றி,  குமாரசாமி, அடுத்த முதல்வர் யார்,  காங்கிரஸ், பாஜக, மஜக, ராகுல் காந்தி,   கர்நாடகா தேர்தல்,  Siddaramaiah ,  Rahul Gandhi , Narendra Modi ,  Karnataka election result , Karnataka , HD Deve Gowda ,  kumaraswamy , Congress, Karnataka assembly election 2018, Karnataka election 2018,  Karnataka Assembly election,  Yeddyurappa , Karnataka election, vote counting today, Prime Minister Narendra Modi, Lok Sabha election 2019, DeveGowda, secular Janata Dal, Karnataka election results, Congress leader Rahul, HD Deve Gowda, Karnataka Election Result 2018, Karnataka Election Result,

பெங்களூரு: கர்நாடகாவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கி நடந்து வருகிறது. இதில் பா.ஜ., 119 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.


இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து:

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்:
பா.ஜ.,வுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள். காங்கிரசின் பிரித்தாளும் அரசியலை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. மோடி, அமித்ஷாவின் வாதங்களை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். காங்கிரசின் எதிர்மறை அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். வளர்ச்சி பாதைக்கு மேலும் உழைப்போம்.

பா.ஜ.,வின் ராம் மாதவ்: வெற்றியை அளித்த மக்களுக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதற்கான பெருமை, மோடி, அமித்ஷா, மாநில தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தொண்டர்களை சேரும். பா.ஜ.,வின் வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். கடலோர கர்நாடகா உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில், அவர்களின் உழைப்பு எங்களுக்கு பேருதவி புரிந்தது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தோற்றவர்கள் மீண்டும் போராட வேண்டும். மதசார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.


பிரகாஷ் ஜவ்டேகர் ; கர்நாடக மக்கள் நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை விரும்புகின்றனர். சமீப காலமாக காங்கிரஸ் தொடர்ந்து தோற்று வருகிறது. பா,ஜ., வெற்றி பெற்று வருகிறது.

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். 112 தொகுதிக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி தேவையில்லை.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். பா.ஜ., மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது. எல்லாவிதத்திலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. ராகுல், சோனியாவின் பிரசாரம் எடுபடவில்லை. இந்தியாவை பிரித்தாண்டது போல், மதத்தை பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சிக்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.


காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில்,
தேர்தல் முடிவு நிலவரம் நண்பகல் 11.30 மணிக்கு மேல் தான் தெரிய வரும். மதசார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி குறித்து குலாம் நபி ஆசாத் மற்றும் அசாக் கெலாட்டுடன் ஆலோசிக்க உள்ளேன்.


காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறுகையில்,
இது ஆரம்ப கட்ட முடிவு தான். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற வாய்ப்பு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் ஆராயப்படும். .இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-மே-201800:18:14 IST Report Abuse
Mani . V "உலகத்திலேயே எங்கள் கட்சியும் (பாஜக), எங்களின் அடிமை கட்சியான அதிமுக வும் மட்டுமே யோக்கியமான கட்சிகள். மற்ற அனைத்தும் தீவிரவாதத்தை தூண்டும் கட்சிகள்" ("இந்த பதவியை காப்பாற்றிக் கொள்ள தினம், தினம் ஏதாவது ஒரு மொக்கை அறிக்கையை வெளியிட வேண்டி இருப்பதை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது").
Rate this:
Share this comment
Cancel
15-மே-201819:40:05 IST Report Abuse
ஆப்பு அதான் உங்க கட்சி சூழ்ச்சிக்கு ஆப்பு வெச்சுருக்காங்களே அம்மா...எடியூரப்பா போன்ற ஊழல் பேர்வழியா முதல்வரா நிறுத்தி பிரச்சாரம் செஞ்சதே ஊழல்.
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
16-மே-201806:33:20 IST Report Abuse
vadiveluபலமுறை முதல்வராக இருந்து பெரும் ஊழல் செய்த தலை தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றது இல்லையா, வெளி மாநிலத்தில் ஒரு முறை முதல்வராய் இருந்தவரை பற்றி , என்ன ஊழல் என்று தெரியாத நீங்கள் புலம்புறீங்க....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-மே-201819:26:05 IST Report Abuse
D.Ambujavalli 150 இடங்களில் வென்று ஏகபோக ஆட்சியமைப்போம் என்று முழங்கினார்களே, இந்த தொட்டுக்கோ தொடைச்சுக்கோ வெற்றிக்குத்தான் இத்தனை பிரசாரம், அமித் ஷா, மோடிஜி என்றுநாள் கணக்கில் கூடாரம் போட்டார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X