பதிவு செய்த நாள் :
தாக்கம்!
கர்நாடகா தேர்தல் முடிவால் தேசிய அரசியலில்...
அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்த மோடி

'கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும்' என, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். கடைசி கட்ட அதிரடி பிரசாரங்களால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்த, பிரதமர் நரேந்திர மோடி, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார்.

கர்நாடகா தேர்தல்,தேசிய அரசியல்,தாக்கம்,அசைக்க முடியாத தலைவர்,உருவெடுத்த,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

கர்நாடகா மாநில சட்ட சபைத் தேர்தலில், சித்தராமையா தலைமையிலான, காங்., 78 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்து உள்ளது. மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தல், தேசிய அரசியலில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் மூலம், கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சிக்கு மூடுவிழா நடத்தப்பட்டு உள்ளது.

மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தி அலைகளை ஒடுக்க, சித்தராமையாவால் முடியாமல் போனது, இத்தேர்தலில் அம்பலமாகி உள்ளது. கர்நாடகாவில், ஒரு முறை ஆட்சி அமைத்த கட்சி, தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்காது என்ற வரலாறு, மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது தலைவர் :


இருப்பினும், கர்நாடகாவில், ஐந்தாண்டு முழுமையான ஆட்சியை வழங்கிய இரண்டாவது தலைவர் என்ற சாதனையை, சித்தராமையா படைத்துள்ளார். இதற்கு முன், காங்.,கைச் சேர்ந்த, தேவராஜ் அர்ஸ் மட்டுமே, இந்த பெருமையை பெற்றுள்ளார். மற்ற அனைத்து முதல்வர்களும், ஆட்சி கவிழ்ந்தோ, வேறு ஒருவர் அப்பதவியை பிடித்தோ, முழு ஆட்சியை வழங்க முடியாமல் போனவர்கள்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில், 20 நாட்களுக்கு முன் வரை, எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் இடைவிடாமல் சூறாவளி பிரசாரம் செய்து, காங்.,கை மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினார்.

முதலில், 15 கூட்டங்களில், பிரதமர் மோடி பேசுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில், இது, 21 கூட்டங்களாக அதிகரிக்கப்பட்டன. மோடி பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மக்களை கவரும் தலைவராக, மோடி, ஜொலித்தார்.

தனிப்பெருங்கட்சி :


இந்த தேர்தலில், பா.ஜ., தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்ததன் மூலம், அசைக்க முடியாத மாபெரும் தலைவர், மோடி என்பது உறுதியாகி உள்ளது. வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன், நடந்த பெரிய போர்க்களமாக, கர்நாடகா தேர்தல் பார்க்கப்பட்டது.

Advertisement

இதில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து உள்ளதால், மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு சிறந்த ஊக்கம் கிடைத்து உள்ளதாக கருதப்படுகிறது. அடுத்து, ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற முடிந்தால், சிறந்த எழுச்சியை அக்கட்சி தொண்டர்கள் பெறுவர் எனக் கூறப்படுகிறது.

பா.ஜ.,வினர் உற்சாகம் :

கர்நாடகா தேர்தல் முடிவை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா ஆகியோரின் ஆளுமையை, பா.ஜ., தேசிய பொதுச் செயலர், ராம் மாதவ் வெகுவாக புகழ்ந்துள்ளார். இந்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள, பா.ஜ., தலைவர்கள், லோக்சபா தேர்தலை, 2019, மே மாதத்துக்கு முன் நடத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும், இதே போன்ற வெற்றியை, பிற தென் மாநிலங்களான, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகியவற்றில் பெற முடியுமா... என்பதற்கும், காலமே பதில் சொல்ல வேண்டும்.


ராகுலுக்கு தோல்வி!

காங்., தலைவராக பொறுப்பேற்ற, ராகுலுக்கு, கர்நாடக சட்டசபைத் தேர்தல், அவர் சந்தித்த பெரிய தேர்தலாக அமைந்தது. தன் கட்சியை வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்வதில், ராகுல் தோல்வியை தழுவியுள்ளார். 2014, மே மாதத்தில், மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த பின், காங்., ஆட்சியில் இருந்த மாநிலங்களில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்று வருகிறது. 'காங்., கட்சியின் நலனில் ராகுலுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தலைவர் பதவியில் இருந்து விலகி, திறமைமிக்க வேறு ஒரு தலைவருக்கு அப்பதவியை அளிக்க வேண்டும்' என, அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
16-மே-201820:48:12 IST Report Abuse

கைப்புள்ளஹாஹாஹா எனக்கு நல்லா செம ஜோக்கா இருக்குது இங்க. டெய்லியும் வந்து இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வயிறு எரிஞ்சு எரிஞ்சு கத்துவதை பார்க்கும் போது செம ஆனந்தமா இருக்கு. அது, இது, எது ன்னு எந்த ஒரு உண்மையும் இல்லாத கருத்துக்களை சொல்லி சொல்லி மாஞ்சு போவதை பார்க்கும் போது, அடடா இவனுகளுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது, இப்புடி வீணா போறானுகளேன்னு நினைக்கிறப்போ கொஞ்சம் வேதனையாவும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன பண்றது? உலகத்துல எல்லோரையும் நாம திருத்த முடியாதே. ஒரு நாலு முட்டாள், நாலு வயித்தெரிச்ச புடிச்சவன் இருக்கத்தானே செய்வான்? அதுக்கு நாம என்ன பண்றது? என்ன நான் சொல்றது?

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-மே-201819:52:11 IST Report Abuse

வந்தியதேவன்கலியுகம் எப்போது முடிமென கண்ணனிடம் கேட்டதற்கு “தருமநெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்... தடியுடைய முரடர்களும், படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம்.... தர்மவினை பொய்யாகி, காலநிலை தவறாகி, கருணை பறிபோகும் நேரம்... கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும் “கலியுகம்” முடியும் நேரம்....” என பகவத்கீதை கண்ணன் சொன்னபடி... “கலியுகம்” முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... மேலே சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது... அதனால் கண்ணனவன் சொன்னபடி, கலியுகம் முடியும் நேரம் வந்து... உலகத்துல இருக்குற அத்தனை மனிதப் பதர்களும்... திடீரென ஒருசில நொடிகளில் பூமி பிளந்து... நல்லவன்,கெட்டவன், அறிவாளி, முட்டாள், பணக்காரன், பிச்சைக்காரன் எல்லாருமே மண்ணுக்குள் புதையும் நேரம் வந்துவிட்டது... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

Rate this:
edwin -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-201818:01:51 IST Report Abuse

edwinha ha ha ha

Rate this:
மேலும் 88 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X