கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி: மோடி பெருமிதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கர்நாடகத்தில் இணையற்ற வெற்றி
மோடி பெருமிதம்

புதுடில்லி : ''கர்நாடக மக்கள் பா.ஜ.,வுக்கு முன் எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றியை கொடுத்து உள்ளனர். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் சிதைக்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்,'' என பிரதமர் மோடி பேசினார்.

கர்நாடகா,இணையற்ற வெற்றி,மோடி,பெருமிதம்கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.,வின் பாராளுமன்ற குழு கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடந்தது. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடியை, அமித்ஷா வரவேற்றார்.

இதில் மோடி பேசியதாவது: கர்நாடக மக்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். தேர்தல் முடிவுகளால் அம்மாநிலத்தின் வளர்ச்சி பயணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. மாநிலம் பின் தங்குவதை அனுமதிக்க மாட்டோம்.

பா.ஜ., இந்தி பேசும் வடமாநிலங்களுக்கான கட்சி என்ற பொய் தோற்றத்தை சிலர் உருவாக்க முயன்றனர். ஆனால் எங்களுக்கு வெற்றி அளித்து, அது போன்ற சிதைந்த சிந்தனை கொண்டவர்களுக்கு சரியான பதில் அளித்துள்ளனர் கர்நாடக மக்கள். இது எப்போதும் இல்லாத, இணையற்ற வெற்றி.

நம் நாட்டை பல ஆண்டுகளாக ஆண்ட ஒரு கட்சி வடமாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் பகையை ஏற்படுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியும் அரசியலமைப்பையும், ஜனநாயக நெறிமுறைகளையும் சிதைத்து விட்டது.

Advertisement

பல மாநில மொழி தெரியாததால் தகவல்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்ற தயக்கம் இருந்தது. ஆனால் கர்நாடக மக்கள் மிகப் பெரிய அன்பை பகிர்ந்து, மொழி ஒரு பிச்னை இல்லை என்பதை உறுதி செய்து விட்டனர்.

கட்சி தலைவர் அமித்ஷாவின் நுணுக்கமான அணுகுமுறையால் நமக்கு அடுத்து அடுத்து வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பின் மூலம் கட்சித்தொண்டர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-மே-201820:13:20 IST Report Abuse

Rafi இந்த வெற்றியை பெறுவதற்காக காவேரி நீதியை குழி தோண்டி புதைத்ததை சொல்வதா? பணம் பாதாளம் வரை பாய்ந்ததை சொல்வதா? மத துவேஷங்களை பரப்பியதை சொல்வதா? அனைத்திற்கு மேலாக ஆட்சி அமைப்பதற்காக மாற்று கட்சி MLA க்களை வளைப்பதற்காக குறுக்கு வழியை கையிலெடுத்து பம்பரமாக வேலை செய்வதை சொல்வதா?

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-மே-201819:53:00 IST Report Abuse

வந்தியதேவன்கலியுகம் எப்போது முடிமென கண்ணனிடம் கேட்டதற்கு “தருமநெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்... தடியுடைய முரடர்களும், படையுடைய தலைவர்களும் தலைதூக்கி நிற்கும் நேரம்.... தர்மவினை பொய்யாகி, காலநிலை தவறாகி, கருணை பறிபோகும் நேரம்... கண்ணனவன் சொன்னபடி, கண்ணெதிரில் வந்துவிடும் “கலியுகம்” முடியும் நேரம்....” என பகவத்கீதை கண்ணன் சொன்னபடி... “கலியுகம்” முடியும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... மேலே சொன்னதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது... அதனால் கண்ணனவன் சொன்னபடி, கலியுகம் முடியும் நேரம் வந்து... உலகத்துல இருக்குற அத்தனை மனிதப் பதர்களும்... திடீரென ஒருசில நொடிகளில் பூமி பிளந்து... நல்லவன்,கெட்டவன், அறிவாளி, முட்டாள், பணக்காரன், பிச்சைக்காரன் எல்லாருமே மண்ணுக்குள் புதையும் நேரம் வந்துவிட்டது... சர்வம் கிருஷ்ணார்ப்பணம்....

Rate this:
amuthan - kanyakumari,இந்தியா
16-மே-201816:17:32 IST Report Abuse

amuthanஓட்டு எந்திரம் கூட எதிரா வேலை செய்யுது. 70 % ஓட்டு தாமரைக்கு செட் பண்ணி வச்சா 50 % கூட பதியாம விட்டுடிச்சி.

Rate this:
sankar - Nellai,இந்தியா
17-மே-201816:55:40 IST Report Abuse

sankarஇதையே - ஓட்ட ரிக்கார்ட் மாதிரி சொல்லிகிட்டே இருங்க...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X