பதிவு செய்த நாள் :
அரசியலுக்கு அப்பாற்பட்டு
முடிவெடுப்பாரா வஜுபாய்

புதுடில்லி : கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்ற முக்கிய முடிவை எடுப்பது தொடர்பாக, கவர்னர் வஜுபாய் வாலா, 79, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அரசியல்,அப்பாற்பட்டு,முடிவெடுப்பாரா,வஜுபாய்

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த, குஜராத் மாநிலத்தில், 1985ல், பா.ஜ., தலைமையிலான ஆட்சி மலர்ந்தது. குறிப்பாக, ராஜ்கோட் சட்டசபை தொகுதியில், 1984 வரை, காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கூட தோல்வி அடையாத நிலையில், பா.ஜ., சார்பில் அங்கு போட்டியிட்ட, வஜுபாய் வாலா, அமோக வெற்றி பெற்றார்.

அப்போது முதல், 2002 வரை, அந்த தொகுதியில், வஜுபாய் வாலாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அங்கு நடந்த அனைத்து தேர்தல்களிலும், அவரே வெற்றி பெற்றார். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார். 2002ல் நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி

போட்டியிடுவதற்காக, வஜுபாய், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அந்த தேர்தலில், நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.

அதன் பின் நடந்த பொது தேர்தலில், நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில் போட்டியிட்டதை தொடர்ந்து, ராஜ்கோட்டில், வஜுபாய் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2007 மற்றும் 2012 தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, மோடி தலைமையிலான மாநில அமைச்சரவையில், முக்கிய இலாகாவான, நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.

குஜராத் சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்து உள்ள வஜுபாய், 2014ல், மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்ததும், கர்நாடகா மாநில கவர்னராக பொறுப்பேற்றார். குஜராத் மாநில பா.ஜ., தலைவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக அவர் திகழ்ந்தார்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரியுள்ளது.

அதே சமயம், இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ள, காங்., - மதசார்பற்ற

Advertisement

ஜனதாதளம் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்ட விதிகளின் படி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காங்., - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோடிக்கு மிக நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாக திகழ்ந்த, வஜுபாய், தற்போது, கவர்னர் பதவி வகிப்பதால், அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளார். வஜுபாய் எந்த மாதிரியான முடிவை எடுக்கவுள்ளார் என, அரசியல் தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
16-மே-201820:22:19 IST Report Abuse

ManiSIf there is a situation like this, At that time only you people were recalling the word Democracy?

Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-மே-201819:59:16 IST Report Abuse

Rafi ஒரு சுக்கும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு முடிவு எடுக்கமாட்டார் என்பதை இந்த கட்டுரை மிக விரிவாக புலப்படுத்துகின்றது .

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
16-மே-201819:49:02 IST Report Abuse

மஸ்தான் கனிவோட்டு மெஷின் கைகொடுக்கும்போது வஜுபாய் கைகொடுக்க மாட்டாரா? தேர்தல் முடிவு வருவதற்கு முன் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க., பணநாயகத்தை காக்க அவகாச நாடகம்., அப்பாவுக்கு முதல்வர் பதவி - சாமி அய்யா கணக்கு போட்டு என்னப்பயன்?

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X