'தனியார் பள்ளிகள் விளம்பரம் வெளியிட தடையில்லை' Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தடையில்லை!
'தனியார் பள்ளிகள் விளம்பரம்
வெளியிட தடையில்லை'

'பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட பள்ளிகளுக்கு தடையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

'தனியார் பள்ளிகள் விளம்பரம் வெளியிட தடையில்லை'


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இவை, இணையதளத்தில் வெளியிடப்படுவதோடு, மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆகவும் அனுப்பப்படுகிறது. தேர்வு முடிவில், மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள்; பள்ளிஅளவில் முன் வரிசை பட்டியலில் இடம் பிடித்தவர்களின் பெயர், புகைப்பட விபரங்கள் வெளியிடப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, ரேங்கிங் முறை வைத்து, பள்ளிகள், அமைப்புகள், பத்திரிகைகள், குறிப்பிட்ட மாணவர்களின்

பெயர், புகைப்படத்தை வெளியிடக் கூடாது என, பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகள் தரப்பில் விளம்பரங்கள் செய்யலாமா என, அதன் நிர்வாகத்தினர், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, பள்ளிக்கல்வி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முடிவுகள் குறித்து, விளம்பரங்கள் வெளியிட பள்ளிகளுக்கு, எந்த தடையும் இல்லை. அதேநேரம், எந்தவொரு மாணவ, மாணவியின் மதிப்பெண்ணை குறிப்பிட்டு, அவர்களின் பெயர், புகைப்படம் விளம்பரத்தில் இடம் பெறக்கூடாது. 'டாப்பர்' என, 'ரேங்கிங்' செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில், ஏற்றத்தாழ்வு, மன அழுத்தம், விரக்தி ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களை மதிப்பெண் ரீதியாக ஒப்பிடுவதும், தடுக்கப்பட்டு உள்ளது.

Advertisement

ஒவ்வொரு பள்ளியும், தங்கள் பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்று முறை, ஆய்வக, நுாலக, தொழில்நுட்ப வசதிகள், தேர்வு முடிவில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றை வெளியிட தடையில்லை.எத்தனை மாணவர்கள், அதிக மதிப்பெண்; சென்டம் பெற்றனர்; ஒவ்வொரு பாடத்தில் மதிப்பெண் அளவில் சாதனை படைத்த மாணவர்கள் எத்தனை பேர் என்பதை, மாணவ, மாணவியரின் பெயர், புகைப்படம் இன்றி, எண்ணிக்கையாக குறிப்பிடலாம்.

பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் குழு போன்ற புகைப்படங்கள், பெயர் விபரங்களை வெளியிட எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


-நமது நிருபர்-

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-மே-201809:46:10 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கல்வி வியாபாரிகளுக்கு தடை இல்லை.

Rate this:
16-மே-201807:50:47 IST Report Abuse

ஆப்புரேங்கிங் முறை வேண்டாம் சரி...பொறகு எதுக்கு பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஹெட் ஆப் தெ டிபார்ட்மெண்ட் எல்லாம்? மத்தவங்க, அதாவது பியூன், சத்துணவு ஆயா மனசெல்லாம் புண்படுமில்லே... அதே மாதிரி கல்வித்துறை இயக்குனர், கல்வி மந்திரி, துணை முதல்வர், முதல்வர் போன்ற பதவிகளயும் தூக்கிருங்க... எல்லோரும் சமம் நினைக்கணும். மந்திரியாயில்லாத எம்.எல்.ஏ மனசு எப்பிடி புண்பஉம்? நினச்சுப் பாருங்கய்யா...

Rate this:
JIGMONEY - Chennai,இந்தியா
16-மே-201802:58:40 IST Report Abuse

JIGMONEYஅறிவான குழந்தைகளை சிறைக்குள் வைத்து பெற்றோர்கள் செலவு செய்து முட்டாளாக்கி இந்த சமூகத்திற்கு ஒப்படைக்கு ஒரு நிறுவனம்தான் பள்ளிகூடங்களும் கல்லூரிகளும் நம் மண்ணும் வாழ்வியலையும் கலை கலாச்சாரம் மற்றும் நம் முன்னோர் வகுத்த வானவியல் சாஸ்திரங்களும் எப்போது நமது பாடத்திட்டம்மாக்க படுகிறதோ அப்போது தான் இந்தியா உலகரங்கில் மேலோங்கி நிற்கும் We are the people made the blue print for schools colleges and University before 1000 tears. Now we are learning British syllabus. Its a shame for India.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X