பா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (167)
Share
Advertisement
குமாரசாமி, பா.ஜ., பேரம், மஜத

பெங்களூரு : பா.ஜ., சார்பில் தன்னிடம் 100 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.


மகிழ்ச்சியில்லை


மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை கட்சி தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, என்னை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்த கட்சியினருக்கு நன்றி. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எங்கள் கட்சியின் ஓட்டுக்கள் பிரிந்ததாலேயே பா.ஜ.,வால் 104 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.


அவசியமான ஒன்று

மஜத கட்சியை உடைக்க பா.ஜ., தீவிர முயற்சி செய்து வருகிறது. போதிய எண்ணிக்கை இல்லாததால் எடியூரப்பாவால் ஆட்சி அமைக்க முடியாது. மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அவசியமான ஒன்று. இந்த கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்காக இல்லை. நாட்டு நலனுக்காக பிரதமர் பதவியை உதறி விட்டு வந்தது எங்கள் குடும்பம். மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது.


குதிரை பேரம்


ரூ.100 கோடி தருகிறேன். அமைச்சர் பதவி தருகிறேன் என எங்கள் எம்எல்ஏ.,க்களுக்கு பா.ஜ., ஆசை காட்டி, பேரம் பேசி வருகிறது. இந்த கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? குதிரை பேரத்தில் பா.ஜ., ஈடுபட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது. பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்தி வருகிறார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்., உடன் மட்டும் தான் கூட்டணி. மஜத எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பார்க்கிறது. எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவை தூக்கினால், பா.ஜ., எம்எல்ஏக்கள் 4 மடங்கு பேரை நாங்கள் இழுப்போம். கவர்னர் எங்களுக்கு சாதகமாக முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanbaenda - chennai,இந்தியா
17-மே-201801:00:27 IST Report Abuse
nanbaenda ஏன் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தும் உனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து உன் ஆட்சியின் கீழ் இருப்பதற்கு ஒப்புக்கொண்டது 100 கோடிக்கு சமம் இல்லையா. இது குதிரை பேரம் அல்லாமல் வேறு என்ன சொல்லுவது. கர்நாடகத்து மக்களை முட்டாள் ஆக்குகிறாயே. அதற்கு சந்தர்ப்பவாத காங்கிரசும் துணை போகிறது. ஆட்சி கலைந்து மீண்டும் தேர்தல் நடந்தால் பி ஜே பி தனி மெஜாரிட்டி பெறுவது நிச்சயம்.
Rate this:
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
16-மே-201820:41:18 IST Report Abuse
மணிமாறன் யாரோ ஒரு மகானுபாவர் கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் என்று மேடைக்கு மேடை கூவினாரே.. அவர் எங்கே?? எல்லா கருப்பு பணமும் எங்கே இருக்கிறது என்று இப்போது தெரிகிறது...
Rate this:
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
16-மே-201820:36:15 IST Report Abuse
ramanathan பொய்யன் உளறுகிறான் .இவன் கடந்த காலங்களில் பாஜக விடம் முதல் 30 மாதங்கள் முதல்வராக இருந்து கொள்வதாகவம். அடுத்த 30 மாதங்கள் முதல்வர் பதவியை பாஜக விற்க்கு விட்டுகொடுப்பதாக வாக்களித்துவிட்டு பதவிஆசையில் பதவியை விட்டுக்கொடுக்காத நிலையில் ஆட்சியை இழந்தார். MLC பதவி கோடிகளுக்கு விலைபேசி விற்றவர். மஜதகட்சியம் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் நீடிக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X