பதிவு செய்த நாள் :
'ஆபரேஷன் - 2'
பெரும்பான்மையை நிரூபிக்க துவக்கியது பா.ஜ.,
காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சியினர் கடும் கலக்கம்

பெங்களூரு:கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகளில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, 104 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை ஆட்சி அமைக்கும்படி, கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிக்க,'ஆபரேஷன் லோட்டஸ் - 2'என்ற நடவடிக்கையை, பா.ஜ., துவக்கியுள்ளது. இதனால், ம.ஜ.த., - காங்கிரஸ் கட்சியினர், கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆபரேஷன்-2,பெரும்பான்மை,நிரூபிக்க,துவக்கியது,பா.ஜ.,


கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், 15ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின. தேர்தல் நடந்த, 222 தொகுதிகளில், 104ல்,பா.ஜ.,வும், 78ல் காங்கிரசும், 37ல் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றன. மூன்றில், பிற கட்சிகள் வென்றன.


ஆட்சி அமைக்க, 112 எம்.எல்.ஏ., ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு பொறுப்பேற்பதில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, பா.ஜ., ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் கோரிக்கை விடுத்தன.

மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள, குமாரசாமி முதல்வராக பதவியேற்க, முழு ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் மேலிடமும் தெரிவித்துள்ளது. எனினும், காங்., கட்சியின் சட்டசபை தலைவர், இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை.


காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ், எம்.எல்.ஏ.,க்கள் என, மொத்தம், 116 உறுப்பினர்களின் பலம் இருப்பதாக, கவர்னரிடம், குமாரசாமி கடிதம் அளித்தார். அதே சமயம், 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள, பா.ஜ., அதன் சட்டசபை தலைவ ராக, எடியூரப்பாவை தேர்ந்தெடுத்தது.


தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ., எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரியது. எனினும், இரு தரப்பினருக்கும், உடனடியாக எந்த பதிலும் அளிக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கவர்னர் வஜுபாய் வாலா தீவிரமாக ஆலோசித்து வந்தார்.இந்நிலையில்,

அரசு அமைக்கும்படி, பா.ஜ., சட்டசபை கட்சி தலைவர், எடியூரப்பாவுக்கு, நேற்றிரவு, கவர்னர் அழைப்பு விடுத்தார்.


இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிப்பதற் காக, 'ஆபரேஷன் லோட்டஸ் - 2' என்ற நடவடிக்கையை, பா.ஜ., துவக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, 2008ல், கர்நாடகா வில், பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைய, வெறும், மூன்று, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது, 'ஆபரேஷன் லோட்டஸ்' என்ற பெயரில், பா.ஜ., அமைத்த வியூகத்தின் படி, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரை பதவி விலக செய்தது.
இதன் வாயிலாக, மீதமுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில், பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., ஆட்சி அமைத்தது.


அந்த வகையில், தற்போது, மாநிலத்தில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, இன்னும், எட்டு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை.எதிர் தரப்பை சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்களை பதவி விலகச் செய்வது அல்லது நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, 'ஆப்சென்ட்' ஆக செய்தால், பெரும்பான்மை எண்ணிக்கையை எளிதில் எட்ட முடியும்.இரண்டாவதாக, 1996ல், பெரும்பான்மைக்கு தேவையான, எம்.பி.,க்கள் ஆதரவு இல்லாமல், மத்தியில், வாஜ்பாய் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைத்தது.


பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், உருக்கமான உரையாற்றினார். அதன் பின் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பா.ஜ., தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது.இதையடுத்து, வாஜ்பாய், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம், நாட்டு மக்கள் மத்தியில், பா.ஜ., மீது அனுதாப அலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், பா.ஜ., மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.


வாஜ்பாயை பின்பற்றி, எடியூரப்பாவும், முதல்வராக பதவியேற்று, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்து, மாநில மக்கள் மத்தியில் மிகப் பெரிய அனுதாப அலையை பெறுவதன் மூலம், வரும் லோக்சபா தேர்தலில், அதிக இடங்களை கைப் பற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.பா.ஜ., வின் இந்த வியூகங்களை, அந்த கட்சியினர், 'ஆபரேஷன் லோட்டஸ் - 2' என, அழைக்கின்றனர். இந்த வியூகத்தால், காங்., மற்றும் ம.ஜ.த., ஆகிய இரு கட்சியினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.


இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சியினர், கூட்டணி சேர்ந்து, வெற்றிகரமாக ஆட்சி அமைத்து விட்டால், அதன் தாக்கம் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, பா.ஜ., மேலிடம் நினைக்கிறது. கர்நாடகாவைப் போல், மற்ற மாநிலங்களிலும், எதிரெதிர் அணியில் உள்ள கட்சிகள் கூட்டணி சேர்ந்து, லோக்சபா தேர்தலை சந்தித்தால், தங்களுக்கு பாதிப்புஏற்படும் என, பா.ஜ., தலைவர் கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே, 'ஆபரேஷன் லோட்டஸ் - 2' நடவடிக்கையை

Advertisement

துவக்கியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையிலான, எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருந்தும், எங்கள் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காத, கவர்னரின் செயல் தவறானது. குதிரை பேரம் நடத்த முயற்சிக்கும், பா.ஜ.,வுக்கு இது சாதகமாக அமையும்.இந்த குதிரை பேரத்தை, பிரதமர் மோடி பகிரங்கமாக ஆதரிக்கிறார். காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஒற்றுமை இல்லை என்பதில் உண்மை யில்லை.நாங்கள் அனை வரும் ஒருமித்த கருத்துடன், ஒற்றுமையாக இருக்கிறோம்.

-சித்தராமையா, மூத்த தலைவர், காங்.,


கூவத்துார் பார்முலா!

பெரும்பான்மைக்கு வெறும், எட்டு எம்.எல்.ஏ., க்களின் பலம் மட்டுமே தேவைப்படுவதால், பா.ஜ., தரப்பினர், குதிரை பேரத்திற்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பா.ஜ.,வின் அதிரடி ஆபரேஷனிலிருந்து தப்பவும், எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறுவதை தடுக்கவும், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், பிரபல சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த, 'கூவத்துார் பார்முலா'வை பின்பற்றி, நீச்சல் குளம், பார் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசு விடுதிகளுக்கு, காங்., மற்றும் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், சொகுசு பஸ்களில் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.கடும் விமர்சனம்!


பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு குறித்த கடிதம் அளித்த பின்னும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்காத கவர்னரின் செயல்பாட்டை, குமாரசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.இது குறித்து, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்., - ம.ஜ.த., கூட்டணியில், 116 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது.


கவர்னர் எடுத்துள்ள முடிவு, குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும். ஏற்கனவே, எங்கள், எம்.எல்.ஏ.,க் களுக்கு, அமைச்சர் பதவி, 100 கோடி ரூபாய் தருவதாக பேரம் நடக்கிறது. பா.ஜ.,விடம் போதுமான எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையில், அவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


இந்நிலையில், குமாரசாமியின் குற்ற சாட்டை, பா.ஜ.,வைசேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்து உள்ளார். குமாரசாமியின் கற்பனைக்கு அளவில்லாமல் போய் விட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
17-மே-201816:14:57 IST Report Abuse

விருமாண்டிவெற்றிநடை போடுகிறது பாஜக

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-மே-201816:10:41 IST Report Abuse

Natarajan Ramanathanமதப்பற்றே இல்லாமல் இருந்த என்னை இன்று ஒரு தீவிர இந்துமத வெறியன் என்று சொல்லிக்கொள்ளும் அளவு மாற்றியது கிருத்துவ கூலிகளே.

Rate this:
Endless - Chennai,இந்தியா
17-மே-201819:42:10 IST Report Abuse

Endlessஉண்மை.......

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
18-மே-201809:48:54 IST Report Abuse

Chowkidar NandaIndiaமிகவும் சரி...

Rate this:
PraJan - Trichy/Chennai,இந்தியா
17-மே-201812:25:57 IST Report Abuse

PraJanHDK has accepted the biggest "OFFER" of his life. How can he expect his MLAs to refrain from accepting small "offers". Yatha Raja, Tatha Praja. If DG and HDK are role models by themselves, they will have a moral authority to command their flock. HDK was called a "DISGRACE" by his dad DG on an earlier occassion. Alas, morality and politics do not co-exist. BJP must be the most stupid party in the world to play with EVM and yet give themselves less seats so that people like can accuse them of horse trading. Is Congress also not trying to do it from back door? All are same. They can stoop any level so don't fret over either.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X