அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
  கர்நாடகா கோரிக்கை, சுப்ரீம் கோர்ட் மறுப்பு ,  காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடக சட்டசபை தேர்தல், நீதிபதி தீபக் மிஸ்ரா , திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், காவிரி நதிநீர் பங்கீடு,
Karnataka demand, Supreme Court denial, Cauvery water distribution, Cauvery management board, Karnataka assembly election, judge Deepak Mishra, amended draft action plan,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை, ஜூலை வரை தள்ளி வைக்கும்படி, கர்நாடகா விடுத்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

  கர்நாடகா கோரிக்கை, சுப்ரீம் கோர்ட் மறுப்பு ,  காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடக சட்டசபை தேர்தல், நீதிபதி தீபக் மிஸ்ரா , திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், காவிரி நதிநீர் பங்கீடு,
Karnataka demand, Supreme Court denial, Cauvery water distribution, Cauvery management board, Karnataka assembly election, judge Deepak Mishra, amended draft action plan,


காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்கும் அமைப்பிற்கு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என, பெயர் சூட்டுவதை ஏற்றுக் கொள்வதாக, நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை இன்று தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடக அரசு, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்.

இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில், 'மத்திய அரசு, மார்ச், 31க்குள், 'ஸ்கீம்' எனப்படும், செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, செயல் திட்டத்தை சமர்ப்பிக்காமல், மத்திய அரசு தாமதம் செய்து வந்தது. கடைசி வாய்ப்பாக, மே, 14க்குள் வரைவு செயல் திட்டம் சமர்ப்பிக்கும்படி, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தில்,14ல் விசாரணைக்கு வந்த போது, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் இடையே, காவிரி நீரை பங்கிட்டு கொள்வதற் கான வரைவு செயல் திட்டத்தை, மத்திய நீர் வளத்துறை செயலர், யு.பி.சிங் சமர்ப்பித்தார்.

சூட்டவில்லை


அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: காவிரி நீர் பங்கீடு விஷயத்தை கையாளுவதற்காக, வரைவு செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள, தலைவர் உட்பட, 10 உறுப்பினர்அடங்கிய அமைப்புக்கு, மத்திய அரசு, பெயர் எதையும் சூட்டவில்லை; அது, வாரியம், ஆணையம், குழு என, மூன்றில், ஏதாவது ஒன்றாக இருக்கலாம். இருப்பினும், இதன் கட்டமைப்பு, காவிரி நீர் கட்டுப்பாட்டு குழுவை அமைக்கக்கூடிய, காவிரி மேலாண்மை வாரியத்தை போன்றதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா கூறுகையில், 'மத்திய அரசு சமர்ப்பித்துள்ள வரைவு செயல் திட்டத்தில், சட்ட ரீதியிலான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தலையிடாது. 'பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு படி, மத்திய அரசின் செயல் திட்டம் உள்ளதா என்பது குறித்த, தங்கள் கருத்துக்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், 16ல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சேகர் நபாடே, ''மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அமைப்பிற்கு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என பெயர் சூட்டலாம்,'' என்று ஆலோசனை கூறினார்.

மத்திய அரசு சார்பில் இதற்கு பதில் அளித்த, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்கும் அமைப்பிற்கு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என, பெயர் சூட்டுவதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர், ஷியாம் திவான், ''கர்நாடகா வில் சட்ட சபை தேர்தல் முடிந்து, புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த வழக்கை, ஜூலை, முதல் வாரம் வரை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement

எதிர்ப்பு:


இதற்கு, தமிழக தரப்பு வழக்கறிஞர், சேகர் நபாடே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது: கர்நாடகாவில் தற்போது, எந்த அரசும் ஆட்சியில் இல்லை எனக் கூற முடியாது.காவிரியில் இருந்து, முதல் தவணை தண்ணீர், ஜூனில் திறந்து விடப்பட வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம், டில்லியில் அமைக்கப்பட வேண்டும்; பெங்களூரில் அமைக்கக் கூடாது. அதேசமயம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, அன்றாட பணிகளை கவனிக்கும், காவிரி நீர் கட்டுப்பாட்டு குழு, பெங்களூரில் இருந்தபடி செயல்படலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நம்பியார், ''காவிரி மேலாண்மை வாரியம் எடுக்கும் நடவடிக்கையில், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம், மத்திய அரசிடம் இருக்கக் கூடாது. ''அரசியல் ரீதியில், அது, பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் முழு அதிகாரத்துடன் கூடிய அமைப்பாக செயல்பட வேண்டும்; அதன் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும்,'' என, வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: மத்திய அரசு தாக்கல் செய்த, வரைவு செயல் திட்டத்தை, சட்ட ரீதியிலான கண்ணோட்டத் தில் பார்க்க மாட்டோம். இதில், மாநில அரசு களுக்கு பங்கு இருக்காது. பிப்., 16ல் அளிக்கப் பட்ட தீர்ப்பின் அடிப்படையில், வரைவு செயல் திட்டம் உள்ளதா என்பது பற்றிய கருத்தை தெரிவிக்கும்படி மட்டுமே, மாநில அரசுகளிடம் கூறினோம்.

நீதிமன்றத் தின் உத்தரவை, காவிரி மேலாண்மை வாரியம் நிறைவேற்றும். மத்திய அரசுக்கு, இதில் எந்த வேலையும் கிடையாது. இந்த வழக்கை தள்ளி வைக்க மாட்டோம்.

திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, மத்திய அரசு, இன்று சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின், இந்த வழக்கில் நீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்கும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, மத்திய அரசு தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ''செயல் திட்டத்தில் குறிப்பிட்டு உள்ளபடி, இன்ஜினியர் அல்லது ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், காவிரி மேலாண்மை வாரி யத்தின் தலைவராக இருக்கக் கூடாது. ''ஓய்வு பெற்ற நீதிபதியைப் போல், தனி நபராக இருக்க வேண்டும்,'' என, தமிழக அரசு தரப்பு வழக்கறி ஞர், சேகர் நபாடே கூறினார்; அதை, நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-மே-201817:32:04 IST Report Abuse

J.V. Iyerwell done ஊழல் கட்சிகள் கூண்டோடு ஒழிக்கப்படவேண்டும்... அழிக்கப்படவேண்டும்

Rate this:
BJP TEAM - மதுரை,இந்தியா
17-மே-201816:17:11 IST Report Abuse

BJP TEAMவாழ்க மோடி ஜி

Rate this:
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-மே-201812:30:29 IST Report Abuse

வல்வில் ஓரிஇங்கே கருத்து போடும் சில பக்கிகள் தலைமை நீதிபதியை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கழுவி ஊத்தினானுங்கோ...இப்போ வந்து அவரு சூப்பரு ன்னு போடுறானுங்கோ....தனக்கு லாபம் ன்னா ...நல்லது கெட்டது எதுவும் பார்க்கப்புடாது ன்னு ஒரு நியாயம் உள்ள பயலுக....நல்லா வருவீங்கடா...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X