பதிவு செய்த நாள் :
எடியூரப்பா...சோதனை கடந்து சாதனை!

அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட எடியூரப்பா, 75, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர். தென் இந்தியாவில் பா.ஜ., வின் முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர். தற்போது மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

 எடியூரப்பா, சோதனை கடந்து,சாதனை


இவரது அரசியல் பின்னணி


பிப்., 27, 1943 : கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள புக்கனகரே கிராமத்தில் பிறந்தார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்.

1970: ஷிகரிபுரா பகுதியின் ஆர்.எஸ்.எஸ்., செயலராக நியமிக்கப்பட்டார்.

1972: பாரதிய ஜன சங் அமைப்பின் தாலுகா தலைவராக பதவியேற்றார்.

1975: ஷிகரிபுரா நகராட்சி தலைவராக தேர்வானார்.

1975, 1977: நாட்டின் நெருக்கடி நிலை இருந்த போது, சிறையில் அடைக்கப்பட்டார்.

1983: முதல்முறை யாக எம்.எல்.ஏ., வாக பதவியேற்றார்.

1988: பா.ஜ., மாநில தலைவராக பதவியேற்றார்.

1994: சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.

நவ. 12, 2007 : மாநில முதல்வரானார்.நவ., 19: பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் பதவியில் இருந்து விலகல்.

மே 30, 2008: சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மை பெற்றது. எடியூரப்பா முதல்வரானார். 2008: அமெரிக்க பல்கலைக் கழகம்,கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

2010: அடுத்தடுத்து இரண்டு முறை இவரது அரசு, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உள்ளானது.

2010 நவ.: அரசு நிலத்தை மகனுக்கு ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2011 பிப். 5: சொத்துக்கணக்கை வெளியிட்டார்.

ஜூலை 28: சட்ட விரோதமாக கட்சியினருக்கு நிலக்கரி உரிமம் வழங்கியதாக இவர் மீது 'லோக் ஆயுக்தா' அறிக்கை குற்றம்சாட்டியது.

ஜூலை 31: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அக்., 15: கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

மே 8: ஜாமினில் வெளியே வந்தார்.

டிச., 9, 2012 : பா.ஜ.,வில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா பக் ஷா கட்சியை துவக்கினார்.

மே 2013: சட்டசபை தேர்தலில் இவரது கட்சி 6 இடங்களில் வென்றது.

ஜன., 2 2014: பா.ஜ., வுடன் கட்சியை இணைத்தார்.

2016: கர்நாடக பா.ஜ., தலைவராக நியமனம்.

மே 15, 2018: சட்டசபை தேர்தலில் ஷிகரிபுரா தொகுதியில் வெற்றி.

மே 17: முதல்வராக பதவியேற்கிறார்.

ஓட்டு அதிகம் 'சீட்' குறைவு


கர்நாடக சட்டசபை தேர்தலில் 38 சதவீத ஓட்டுக்களை பெற்ற காங்., 78 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் 36.2 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜ., 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்., 78 இடங்களில் முதலிடம், 112 இடங்களில் இரண்டாவது இடம் என 190 தொகுதிகளில் முதல்

Advertisement

இரண்டு இடங்களுக்குள் வந்தது.ஆனால் பா.ஜ, 104 தொகுதிகளில் முதலிடம், 67இடங்களில் இரண்டாவது இடம் என 171 இடங்களில் மட்டும் தான் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்தது. பா.ஜ., வேட்பாளர்கள் பலர் 3, 4வது இடங்களுக்கு தள்ளப்பட்டனர். இதனால் தான் ஓட்டு சதவீதத்தில் பா.ஜ., பின்தங்கியது.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!


கடந்த 1995ல் 121 இடங்களில் வெற்றி பெற்று குஜராத்தில் பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வ ராக கேசுபாய் படேல் இருந்தார். இந்நிலையில் 1995 அக்டோபரில் பா.ஜ., வில் இருந்த சங்கர்சிங் வகேலா, காங்., துாண்டுதலின்படி 47 எம்.எல்.ஏ.,க்களுடன் தனி அணியை உருவாக் கினார். இதனால் கேசுபாய் படேல் பதவி விலக நேரிட்டது. பின், வகேலா ஆதரவாளரான பா.ஜ., வின் சுரேஷ் மேத்தா முதல்வராக்கப்பட்டார். ஆனால் வகேலா, பா.ஜ.,வில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.

அப்போது காங்., ஆதரவுடன் மைனாரிட்டி பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அப்போதைய குஜராத் மாநில பா.ஜ., தலைவ ராக இருந்தவர் வஜூபாய் வாலா (தற்போது கர்நாடகா கவர்னர்). 'பா.ஜ., ஆட்சியை கலைக்கக் கூடாது' என கவர்னரை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், 1996 செப்., 19ல் சுரேஷ் மேத்தாவின் ஆட்சி கலைக்கப் பட்டுஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.ஒருமாதத்திற்கு பின் காங்., ஆதரவுடன் வகேலா முதல்வரானார்.

தற்போது 22 ஆண்டுகளுக்குப்பின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வர் ஆவாரா என்பதை தீர்மானிப்பவராக உள்ளார் கவர்னர் வஜூபாய் வாலா.'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற சாமானியனின் குரல் எப்போதும் கேட்கத்தான் செய்கிறது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-மே-201815:08:11 IST Report Abuse

Malick Rajaவினை விதைத்த எடியூரப்பா வினையை அறுவடை செய்வதே சரியாகும் .. 75 வயதிலும் பதவி வெறி .. மண்ணுக்கு போகும் வரை தீய மனிதனுக்கு ஆசை விடாதோ

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201814:59:07 IST Report Abuse

Endrum Indianஇதைத்தான் நான் அப்போவே சொல்லிட்டேனே ஆகவே ராவுல் வின்சிக்கு தலையாய Iron Leg பட்டம் ஜனாதிபதி வழங்க முடிவு. கால் வைத்த இடம் விளங்காது.

Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
17-மே-201814:08:10 IST Report Abuse

JIVANபுரியலையா அங்கெல்லாம் அவங்களுக்கு அவசர அரிப்பு, பதவி பேராசை அதனாலதான்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X