அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு
அலட்சியம் காட்டும் தமிழக அரசு

தமிழகத்தில், மின் சிக்கன திட்டங்களில், 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு,
மத்திய மின் துறை முன்வந்துள்ள நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய, தமிழக அரசு, அலட்சியம் காட்டி வருகிறது.

தமிழக அரசு அலட்சியம், மத்திய மின் துறை , எனர்ஜி எபிஷியன்சி சர்வீஸ், எல்இடி பல்பு , தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, முதல்வர் பழனிசாமி, மின் சிக்கன திட்டம், தமிழக பட்ஜெட் 2018, 
Tamil Nadu Government Ignorance, Central Electricity, Energy Efficiency Service, LED Bulb, Tamil Nadu Energy Development Agency, Chief Minister Palanisamy, Electric austerity program, Tamil Nadu Budget 2018,


மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி சர்வீஸ்' நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும், எல்.இ.டி., பல்பு உள்ளிட்ட மின் சாதனங்களை, மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது.
'தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அடுத்த

மூன்று ஆண்டுகளுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்படும்' என, முதல்வர் பழனிசாமி, 2017 ஜூன், 29ல், சட்டசபையில் தெரிவித்தார்.


இதே அறிவிப்பு,மார்ச்சில் தாக்கல் செய்த, தமிழக பட்ஜெட்டிலும் இடம்பெற்றது. ஒப்பந்தம் வாயிலாக, எல்.இ.டி., தெரு விளக்கு கள்; அரசு அலுவலகங் களில், எல்.இ.டி., பல்பு, 'ஏசி' சாதனங்கள்; வீடுகளில், ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கு எடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் போன்றவற்றை, எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம் பணம் இல்லாமல் வழங்கும்.


பின், அதற்கான கட்டணத்தை, அரசு துறைகள், தவணை முறையில் செலுத்தினால் போதும்.
முதல்வர் அறிவித்து, அடுத்தமாதத்துடன், ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், எனர்ஜி எபிஷியன்சி உடன் ஒப்பந்தம் செய்ய, தமிழக அரசு, தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகை யில், 'பல மாநில அரசுகள், எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தரமான மின்

Advertisement

சாதனங்களை பயன் படுத்தி வருகின்றன. இதனால், அம்மாநிலங் களில், மின் சிக்கனம் கடை பிடிக்கப்படுகிறது.


'அந்நிறுவனத்திற்கு, தமிழகத்தில், அரசும், மின் வாரியமும், முழு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. இது தொடர்பாக, பிரதமரிடம் புகார் தெரிவிக்க, எனர்ஜி எபிஷியன்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது' என்றார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:24:59 IST Report Abuse

Mani . Vமுதலில் எங்கள் பங்கு எத்தனை ஆயிரம் கோடி என்று சொல்லுங்கள்?

Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
17-மே-201809:57:00 IST Report Abuse

Yezdi K Damoகொள்ளை அடிப்பதையே முழு நேர சிந்தனையோடு இருந்தால் தமிழ்நாடு எப்படி உருப்படும். த்ராவிஷ கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய கட்சி அவசியம் தேவைப்படுகிறது.

Rate this:
sam - Doha,கத்தார்
17-மே-201809:03:17 IST Report Abuse

samசரியான கமிஷன் இல்லாமல் எப்படி இவர்கள் ஒத்து கொள்ளுவார்கள். எப்படியும் அடுத்த தேர்தலில் எந்த மண்ணை கொள்ளை யடித்தார்களோ, அதை கவ்வுவது நிச்சயம். அதனால், எவ்வளவோ கிடைக்குமோ அதை எடுத்துக்கொண்டு ஓடி விடலாம்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X