பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நவீன வசதிகளுடன் 2,000 பஸ்கள்
ஜி.பி.எஸ்., கருவியுடன் அறிமுகம்

சென்னை:''ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட, படுக்கை வசதியுடைய நவீன பஸ்கள், இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 Monitoring Camera, Minister MR Vijayabhaskar,CM Palanisamy, நவீன வசதிகளுடன் பஸ்கள் , ஜிபிஎஸ் கருவி அறிமுகம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், அரசு போக்குவரத்து கழக,  ஏஐஎஸ் - 052 , முதல்வர் பழனிசாமி, கண்காணிப்பு கேமரா, With the modern facilities, introduction of GPS equipment, Transport Minister MR Vijayabhaskar, Government Transport Corporation, AIS-052, Chief Minister Palanisamy,


'அரசு போக்குவரத்து கழகத்தில், 2016 --- 17ல், 2,000 புதிய பஸ்கள் இயக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.'புதிதாக, ஏ.ஐ.எஸ்., - 052 என்ற தரச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே, பஸ் பாடி கட்ட முடியும்' என, மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்தது.


இந்நிலையில், ஏ.ஐ.எஸ்., - 052 என்ற தரச் சான்றிதழ் படி, புதிய பஸ் மற்றும் மினி பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னை, தலைமை செயலகத்தில், இந்த பஸ்களை, முதல்வர் பழனிசாமியும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பார்வையிட்டனர். பஸ் கட்டுமானம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து, முதல்வருக்கு அமைச்சர் விளக்கினார்.


பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:


புதிதாக கூண்டு கட்டப்பட்ட, முதல் பஸ் மற்றும் ஒரு மினி பஸ்சை, முதல்வர்

பழனிசாமி பார்வையிட்டார். 'வடிவமைப்பு நன்றாக உள்ளது' என பாராட்டினார். புதிதாக வாங்கப்படும், 2,000 பஸ்களும், இதே வடிவமைப்பில் இருக்கும்.இருப்பிடத்தை அறியக்கூடிய, ஜி.பி.எஸ்., வசதி கொண்ட நவீன வகை புறநகர் பஸ்கள், படுக்கை வசதி உடைய பஸ்கள் மற்றும் நகர பஸ்கள் என, 500 புதிய பஸ்கள், இரண்டு மாதங்களில் இயக்கப்படும். பழைய பஸ்கள், படிப்படியாக நீக்கப்படும்.


சென்னையில், 200 மினி பஸ்கள் இயங்கி வருகின்றன; மேலும், 100 மினி பஸ்கள் இயக்கப் படும். இந்த நிதியாண்டில், 3,000 பஸ்கள் வாங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில், அரசு போக்குவரத்துக் கழகங்களில், 5,000 புதிய பஸ்கள் இயக்கப்படும்.


புதிய பஸ்களில், தரமான வேக கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதனால், பஸ், எந்த நேரத்திற்கு வரும் என்பதை, 'மொபைல் ஆப்' வழியாக தெரிந்து கொள்ளலாம்.


பயணியர் இருக்கை சாய்வு, 105 டிகிரியாக இருந்ததை, 115 டிகிரியாக மாற்றி உள்ளோம். பயணியர் அமர வசதியாக இருக்கும். அவசர கால வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பஸ்களில், 'வை - பை' வசதி ஏற்படுத்தப்படும். அடுத்த நிறுத்தத்தின் பெயரை அறிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


என்னென்ன வசதி?* ஜி.பி.எஸ்., வசதி, பஸ்சுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா

Advertisement


* 'டிஜிட்டல்' பெயர் பலகை


* டிரைவர் மது அருந்தினால், பஸ்சை, 'ஸ்டார்ட்' செய்ய முடியாத தொழில்நுட்பம்


* டிரைவருக்கு மின் விசிறி


* முன் செல்லும் வாகனத்தில் மோதுவதை தவிர்க்கும் தானியங்கி, 'பிரேக் சிஸ்டம்'


* ஒரே நேர்க்கோட்டில் பஸ் செல்லவில்லை எனில் எச்சரிக்கை செய்யும், 'அலாரம்'


* பயணியர் பாதுகாப்புக்கு, தானியங்கி கதவுகள்


* 'ரிவர்ஸ் கேமரா'


* சொகுசு சாய்வு மற்றும் வசதியான இருக்கை


* 'டயரில்' காற்று குறைந்தால் எச்சரிக்கும் கருவி


* பொத்தானை அழுத்தினால் திறக்கும் அவசரகால வழி


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
18-மே-201812:03:20 IST Report Abuse

Gopiபயணியர் தயவு செய்து குடித்துவிட்டு இந்த மாதிரி அதி தொழில்நுட்பம் பொருந்திய பேருந்தில் ஏறாதீர்கள். அப்படி ஏறினாலும் பின் சீட்டுக்கு போய்விடுங்கள் இல்லையெனில் பேருந்து கிளம்பாது

Rate this:
skv - Bangalore,இந்தியா
18-மே-201809:36:29 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ம்ம்ம்ம்ம்ம் எல்லாம் சரிங்க நாட்டுப்போறாங்கல்லே ஓடும் தகரடப்பா பஸ்களுக்கு வோசனம் உண்டா மூணுருவா பஸ்லே ஏறுவந்தார்க்கு முடியார்களால் முடியலீங்க தரிலேந்து அவ்ளோனுசரமாயிருக்குரும் படி எறங்குவதுக்குள்ளே நடத்துனர் லபோதிபோன்னுகதறுவாரு இதுக்கு பயந்த எப்போதாச்சும் வெளியேபோனால் கால் டேக்சி அல்லது ஆட்டோல போறோமுங்கோ பஸ்லே போவும்போது மூணுரூப டிஸ்டேன்ஸ் க்கு ஆட்டோல அம்பதி ரூவா தரவேண்டிருக்கு கால் டக்சிலே நூறு ரூவாய்ங்க எதுடா சுகம் வீட்டுலே குந்துவதுதான் இருபாலரும் இருக்கோமுங்கோ , எங்கள் வீட்டுலேந்து தொண்டாமுத்தூர் மாரியம்மா கோயிலு முஸ்தாபித்தானுங்க நடந்தும் போயிருக்கேன் இப்போ முதுமை நடக்கவேமுடியலீங்க வேறு எங்கும் போறது இல்லீங்க ஆசையும் இல்லீங்க

Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
17-மே-201820:21:50 IST Report Abuse

SENTHILநல்ல திட்டம். ஆயினும் டிஜிட்டல் பெயர் பலகை வேண்டாமே... அது ஓடி முடியும் வரை பார்த்து கொண்டிருந்தால் பஸ் கிளம்பி விடுகிறது... இது சாதாரண பொது மக்களுக்கு வசதியாக இல்லை... அதே போல புதிதாக வாங்குவது என்பது சுலபம். பராமரிப்பது என்பது அன்றாட வேலை. அதை சரியாக செய்வது என்பது கிடையவே கிடையாது... ஆள் பற்றாக்குறை, அது இல்லை இது இல்லை என நொண்டி சாக்கு வேற... மொத்தத்தில் இப்ப ஓடுறது எல்லாம் பஸ்ஸே இல்லை. நாங்க அதுல உக்காந்து போறது வேற வழி இல்லாமல்... இனிமேலாவது பஸ்ஸ நல்ல ஓட்டுங்கப்பா.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X