தேர்வில் மகன் தோல்வி: இனிப்பு வழங்கிய தந்தை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேர்வில் மகன் தோல்வி: இனிப்பு வழங்கிய தந்தை

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மத்திய பிரதேசம்,  10ம் வகுப்பு பொதுத் தேர்வு,மாணவர்கள் தற்கொலை, 10ம் வகுப்பு தேர்வில் சுரேந்திரா மகன் தோல்வி, இனிப்பு வழங்கிய தந்தை, பொது தேர்வு முடிவுகள்,  சுரேந்திரா மகன் கொண்டாட்டம், 
Surendra son failed in the 10th class examination,
Madhya Pradesh, 10th standard public exam, public exam results, students suicide, Surendra son celebration,

போபால்:மத்திய பிரதேசத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மகன் தோல்வி அடைந்ததை, அவனது தந்தை, இனிப்பு வழங்கி, உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.

மத்திய பிரதேசத்தில், 10வது மற்றும் பிளஸ் ௨ பொது தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இதில், 10ம் வகுப்பில், 34 சதவீத மாணவர்களும், பிளஸ் ௨வில், 32 சதவீத மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.

இதனால், மனமுடைந்து, 11 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ம.பி., யின் சாகர் என்ற பகுதியை சேர்ந்த, சுரேந்திரா என்பவரின் மகன், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தான். இதை கேள்விப்பட்ட சுரேந்திரா, இனிப்புகள் வாங்கி, சொந்தக்காரர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.மேள தாளங்களை வரவழைத்து, அப்பகுதியில் நடனமாடியபடி ஊர்வலம் சென்று, தன் மகனின் தோல்வியை கொண்டாடினார்.

இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். முதலில், அதிர்ச்சி அடைந்த சுரேந்திராவின் மகன், பின்னர் மெல்ல, கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டான்.
'மகனின் தோல்வியை ஏன் கொண்டாடுகிறீர்கள்' என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:

தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைக்கின்றனர்; அது தவறு. ஒரு பாதை மூடிவிட்டால், வேறு பாதைகள் திறக்கும் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும்.இதற்காக மனமுடைந்து தவறான முடிவுகளை தேடிச் செல்லக் கூடாது. எனவே, அந்த மனநிலையை மாற்றவே, இதை கொண்டாடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BoochiMarunthu - Paradise papers,பனாமா
17-மே-201814:54:32 IST Report Abuse
BoochiMarunthu தோற்றது மாணவன் அல்ல இந்தியா . மனப்பாட கல்வி முறை ஒழிந்தால் தான் உண்மையான திறமை உள்ளவர்கள் மேல வர முடியும் , அது வரி ஈ அடிச்சான் காப்பிகள் தான் திறமை என்று பீத்திக்கொள்வார்கள் . 12 வது fail ஆனவன் திறமை இல்லாமல் எப்படி MLA ஆகமுடியும் ? ஒரு BJP MLA கல்வி தகுதி: X std , சொத்து: 537 கோடிகள், தொழில் :politics
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-201813:26:51 IST Report Abuse
mindum vasantham Ulaithum sambarithu kollalaam prechanai illai...
Rate this:
Share this comment
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
17-மே-201810:51:21 IST Report Abuse
R.MURALIKRISHNAN இச்செயல் மாணவனை (மகனை)வெற்றியாளனாக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X