சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் : மதுரையில் வருவாய் ஆய்வாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் : மதுரையில் வருவாய் ஆய்வாளர் கைது

Added : மே 17, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் : மதுரையில் வருவாய் ஆய்வாளர் கைது

மதுரை: மதுரையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, 12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரகுராமன்,35, கைது செய்யப்பட்டார். மதுரை ஜவஹர்புரம் நீதி மகன் ரகுராமன், மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். பைபாஸ் ரோடு செங்கோல் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு, வருவாய் துறையின் மதிப்பு சான்றிதழ் வாங்க, நேற்று முன்தினம் விண்ணப்பித்தார். அவரிடம் ரகுராமன், உடனடியாக சான்று கிடைக்க வேண்டுமானால் 12 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றார்.இதனால் ஆத்திரமுற்ற முருகேசன், நேராக லஞ்சஒழிப்பு அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். போலீசார் அறிவுரைபடி நேற்று மதியம் 2:00 மணிக்கு, ரகுராமனிடம் முருகேசன் பணத்தை கொடுத்தார். இதைதொடர்ந்து வெளியே காத்திருந்த டி.எஸ்.பி., பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், ரகுராமனை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.தொடரும் லஞ்ச ஒழிப்பு சோதனைகடந்த 3 ஆண்டுகளாக மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் லஞ்சஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்து வருகிறது.* 2015 பிப்.,9ல் பரமசிவம் என்பவரிடம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய முதுநிலை வரைவாளர் அந்தோணிசாமி,56, கைது.* 2015 மார்ச் 27 ல் அடகு கடை உரிமத்திற்காக 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உதவியாளர் கண்ணகி கைதானார்.* 2016 அக்.,20ல் மாவட்ட வருவாய் அலுவலர் உதவியாளர் அன்புசெல்வன், 30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

* தற்போது ரகுராமன் கைதாகி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201800:54:18 IST Report Abuse
Mani . V தமிழக அரசியல்வாதிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் லட்சம், கோடி என்று வாங்காமல் வெறும் பன்னிரெண்டாயிரம் ரூபாய் மட்டும் லஞ்சம் பெற்ற இவரை போன்ற அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-மே-201816:31:43 IST Report Abuse
g.s,rajan In India Politicians can never be trapped red Handed.It is quite Amazing . g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
17-மே-201816:20:48 IST Report Abuse
kalyanasundaram WHY TO PUNISH SUCH PERSONS WHEN MINISTERS WHO HAVE AMASSED WEALTH BEYOND KNOWN SOURCE OF INCOME ARE LEFT UNTOUCHED.THIS IS NOT REAL JUSTICE. PUNISH OTHERS KNOWN FOR ACCEPTED BRIBE.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X