கவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்| Dinamalar

கவர்னரின் முடிவு ஜனநாயக விரோதம்: காங்., வாதம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (22)
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா , சுப்ரீம் கோர்ட், இரவில் காரசார வாதம், ஜனநாயக விரோதம், பாஜக, காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி , வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, துஷார் மேத்தா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கர்நாடகா தேர்தல், Karnataka Election 2018, Eudhyarappa, Supreme Court, Democracy,
Senior Congress Advocate Ashok Singhvi, Advocate Mukul Rohatgi, Tushar Mehta, Supreme Court Judges, Karnataka Elections,

புதுடில்லி : '104எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே வைத்துள்ள எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்திருப்பது ஜனநாயக விரோதம்' என காங்., தரப்பு வக்கீல் அசோக் சிங்வி வாதாடினார்.

கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்., தாக்கல் செய்த மனு, அவசர வழக்காக எடுக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணி முதல் வாதம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி ஆஜரானார். காங்., மனுவுக்கு எதிராக வாதாட மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும் ஆஜராகினர். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சுப்ரீம் கோர்ட் வந்துள்ளார். நீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடக்கிறது.


காரசார விவாதம்:

காங்., மனுவை பா.ஜ., வக்கீல் முகுல் ரோகத்கி கடுமையாக எதிர்த்தார். கவர்னர் யாரை வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க அழைக்கலாம். கவர்னரின் முடிவில் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது எனவும் தனது வாதத்தை வைத்தார்.

காங்., தரப்பில் ஆஜராகிய சிங்வியின் வாதம்: பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் தந்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. கோவாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை சுப்ரீம் கோர்ட் ஏற்றுள்ளது. கோவா, ஜார்கண்டில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு 48 மணி நேரமே அவகாசம் கொடுக்கப்பட்டது. நாங்கள் கவர்னரை எதிர்க்கவில்லை. கவர்னர் எடுத்த முடிவையே எதிர்க்கிறோம். குறுகிய காலத்தில் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தது முன் எப்போதும் இல்லாதது.

நீதிபதிகள்: கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது எப்படி தெரியும்? எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை கவர்னரிடம் எடியூரப்பா கொடுத்தாரா என்பது தெரியுமா? எடியூரப்பாவை கவர்னர் அழைத்தது எப்படி தெரியும்?

சிங்வி: எடியூரப்பாவுக்கு 104 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். பா.ஜ., அரசு அமைக்க எதிராக 116 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நீதிபதிகள்: ம.ஜ.த., காங்., கவர்னருக்கு அனுப்பிய ஆதரவு கடிதம் எங்கே?

சிங்வி: கடிதத்தின் நகல் என்னிடம் இல்லை.

நீதிபதி பாப்டே: கவர்னரின் முடிவுக்கு தடை விதித்தால் மாநிலத்தில் வெற்றிடம் உருவாகாதா?

சிங்வி: கர்நாடகாவில் காபந்து அரசு நடைபெற்று வருகிறது. எனவே பதவியேற்பை தள்ளி வைத்தால் மாநிலத்தில் வெற்றிடம் ஏற்படாது.

நீதிபதிகள்: சட்டசபை தேர்தலுக்கு முன்பே காங்., கூட்டணி அமைக்கவில்லை ஏன்?

சிங்வி: டில்லியில் பா.ஜ., அதிக இடங்களை கைபற்றிய போதும், ஆம் ஆத்மி-காங்., கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. சமீப காலத்தில் 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியே ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

நீதிபதிகள்: கடந்த காலங்களில் கவர்னரின் முடிவை எதிர்ப்பதில்லை என்பதே நீதிமன்ற மரபு. கவர்னரின் முடிவில் சட்டரீதியான அம்சங்கள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம்.

சிங்வி: அரசியலமைப்பு பிரிவு 356ன் படி ஜனாதிபதியின் முடிவில் கூட நீதிமன்றம் தலையிடலாம். ஜனாதிபதியின் முடிவில் தலையிடும் போது கவர்னரின் முடிவிலும் நீதிமன்றம் தலையிடலாம். கவர்னரின் முடிவை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். இங்கும் உட்படுத்தலாம். எடியூரப்பாவின் பதவி ஏற்பை தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடைபெற்றது. காங்., சார்பில் சிங்வி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதங்களை முன் வைத்தார். தொடர்ந்து பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தை தொடர்ந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
sankar - Nellai,இந்தியா
17-மே-201811:41:31 IST Report Abuse
sankar என்னது - காங்கிரசுக்கு பக்கவாதமா
Rate this:
Share this comment
Cancel
Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா
17-மே-201811:27:22 IST Report Abuse
Madhavarao Neelamegam முற்பகல் செய்தது (காங்கிரஸ்) பிற்பகல் விளையும். பிஜேபிக்கு கற்றுக்கொடுத்தது காங்கிரஸ்... காங்கிரஸ் செய்தால் நியாயம் பிஜேபி செய்தால் அநியாயம். இதுதான் காங்கிரஸ் 60 வருடம் நமக்கு கற்றுக்கொடுத்த தர்மம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201809:02:27 IST Report Abuse
Pugazh V பிஜேபி வாசகர்கள் தூங்கவே மாட்டீங்களா.. அதிகாலை 4 மணிக்கு கருத்து போடறீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X