7 நாட்களில் ஓட்டெடுப்புக்கு தயார்: பா.ஜ., வாதம்| Dinamalar

7 நாட்களில் ஓட்டெடுப்புக்கு தயார்: பா.ஜ., வாதம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (18)
Advertisement
BJP lawyer Mukul Rohatgi, congress senior advocate Ashok Singhvi,Supreme Court judges,7 நாட்களில் ஓட்டெடுப்பு தயார், பாஜக வாதம், மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால், பாஜக வக்கீல் முகுல் ரோகத்கி, காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி, எடியூரப்பா ,சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,  BJP, Bharatiya Janata Party , BJP argument, Central Government chief lawyer Venugopal, Yeddyurappa,

புதுடில்லி: 7 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் மற்றும் பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி தெரிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வியின் வாதத்தை தொடர்ந்து பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி 'அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவு வாதம் தேவையா? எடியூரப்பா முதல்வராக பதவியேற்பால் வானம் இடிந்து விழுந்துவிடுமா?' என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் வாதங்களை துவக்கினார். பதவியேற்புக்கு முன்னர் கட்சி தாவல் தடை சட்டம் செயல்பாட்டுக்கு வராது என்ற அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

நீதிபதிகள்: கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்தது ஏன்?

தலைமை வக்கீல்: இது கவர்னரின் முடிவு. அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

நீதிபதிகள்: எந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோரினார்.

தலைமை வக்கீல்: ஒரு கட்சிக்கு வாய்ப்பளிக்க கவர்னர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது.

நீதிபதிகள்: 15 நாட்கள் அவகாசம் அளித்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுவார்களே?

இதற்கு '7 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என பா.ஜ., மற்றும் தலைமை வக்கீல் இருவரும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் நீண்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
17-மே-201815:41:02 IST Report Abuse
K. V. Ramani Rockfort காங்கிரஸ் (UPA) ஒரு காலத்தில் கர்மாவாக ஆடிய ஆட்டம் திரும்ப வந்து அவர்களையே தாக்குகிறது. இதுதான் நைட்ரஜன் சைக்கிள் என்பதோ ?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
17-மே-201812:43:37 IST Report Abuse
சுந்தரம் 7 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் கூறுவது சரியா? இவர் அரசின் வக்கீலா பாஜக கட்சியின் வக்கீலா? இவருக்கு ஊதியம் அரசின் கருவூலத்தில் இருந்து அளிக்கப்படுகிறதா அல்லது கட்சி நிதியில் இருந்து அளிக்கப்படுகிறதா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201810:27:25 IST Report Abuse
Pugazh V அடுத்து சட்ட சபையில் கூச்சல் அமளி பிஜேபி தவிர பிற கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு. ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி என சபாநாயகர் அறிவிப்பு. சபை அடுத்த3 மாதங்கள் ஒத்திவைப்பு. கதம்... கதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X