எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி: குமாரசாமி குற்றச்சாட்டு| Dinamalar

எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி: குமாரசாமி குற்றச்சாட்டு

Added : மே 17, 2018 | கருத்துகள் (33)
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 ,குமாரசாமி குற்றச்சாட்டு, காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் , பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள், மோடி அரசு நெருக்கடி , தேவகவுடா, குமாரசாமி, எம்எல்ஏக்களுக்கு பாஜக நெருக்கடி, மஜத,கர்நாடகா தேர்தல், சுப்ரீம் கோர்ட் ,
Karnataka polls 2018, Congress MLA Anand Singh, BJP, Congress, secular Janata Dal MLAs, Modi government crisis, Deve Gowda, Kumaraswamy, BJP crisis for MLAs, Karnataka election, Supreme Court

பெங்களூரு: காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு பா.ஜ., நெருக்கடி அளித்து வருவதாக குமாரசாமி கூறியுள்ளார்.


கேலிக்கூத்து

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா பதவியேற்றுள்ளார். அரசியல் சாசனத்தை மீறி கவர்னர் செயல்படுகிறார். காங்., மஜத எம்எல்ஏக்களுக்கு பா.ஜ., நெருக்கடி அளித்து வருகிறது.மத்திய பா.ஜ., அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது.ஜனநாயகத்தை பா.ஜ., கேலிக்கூத்தாக்கியுள்ளது. பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம்.


ஒன்று சேர வேண்டும்

அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி எம்எல்ஏக்களை மிரட்டுவது பா.ஜ.,வின் வாடிக்கை. மோடி அரசு நெருக்கடி கொடுப்பதாக ஆனந்த் சிங் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ கூறியதாக மற்றொருவர் ஏன்னிடம் கூறினார். எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாப்போம். பா.ஜ., எவ்வாறு ஜனநாயக அமைப்புகளை சீரழக்கிறது என்பது குறித்து, அனைத்து கட்சிகளிடமும் பேச வேண்டும் என எனது தந்தை தேவகவுடாவை கேட்டு கொள்வேன். நாட்டு நலனை பாதுகாக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். சட்டசபையிலிருந்து கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்கிறோம். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
18-மே-201808:52:00 IST Report Abuse
ரத்தினம் கன்னட கார்கள் எல்லோருமே காவிரி விஷயத்தில் தமிழ் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் கொடுக்க சிறிதளவாவது வாய்ப்பு உண்டு. ஆனால் காங்கிரஸோ குமாரசாமியோ வந்தால் நாம் தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே, தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் கண்டிப்ப்பாக கிடையாது. காவிரி விஷயத்தை ஊத்தி மூட வேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
17-மே-201816:53:53 IST Report Abuse
S.BASKARAN தனக்கு முதல்வர் பதவி என்பதால் தான் காங் உடன் சேருகிறார் இது ஒருவகையில் எண்ணத்தை சொல்வது .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201815:33:54 IST Report Abuse
Endrum Indian "மதசார்பற்ற ஜனதா தள" நாசமாகப்போன கட்சி வார்த்தை இது. அது என்ன மத சார்பற்ற? அப்போ அதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் இருப்பார்கள் அப்படித்தானே. அப்படி என்றால் அது "சர்வ மத ஜனதா தளம்" என்று பெயரிடப்படவேண்டும் மத சார்பற்ற அல்லவே அல்ல. நம்மூரில் ஸ்டாலின் மத சார்பற்ற என்று சொல்லி முஸ்லீம் கட்சிகளையும், கிறித்துவ கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக்கொள்வார். அது மத சார்பற்ற அல்லவே அல்ல அது சர்வ மத ........கட்சி ஆகும்.
Rate this:
Share this comment
Ramalingam - kolkata,இந்தியா
20-மே-201812:43:41 IST Report Abuse
Ramalingamமக்கு பயலே / என்றும் இந்தியன் கருத்துக்கு பதில் மத சார்பற்றது என்றால் குறிப்பிட்ட மதம் இல்லாமல் அணைத்து மதமும் சேர்ந்தது தான் நீ புரிந்து கொள்ளவில்லையா நீ என்ன இந்து தீவிரவாதியா முட்டாள் நாரதன் இந்து மக்களை கேவலப்படுத்தாதே சிறுபான்மையினர் நமது சகோதரர்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் விதண்டாம் பண்ணாத.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X