தமிழக முதல்வர் யாரு அறநிலையத்துறை நேர்காணலில் ‛'சூப்பர்' கேள்வி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வர் யாரு அறநிலையத்துறை நேர்காணலில் ‛'சூப்பர்' கேள்வி

Added : மே 17, 2018 | கருத்துகள் (3)
Advertisement

சோழவந்தான், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், பணியாளர்களுக்கான நேர்காணலில், அனைவரிடமும் ஒரே மாதிரியாக 'தமிழக முதல்வர் யாரு' என கேள்வி கேட்டது பங்கேற்றவர்களை ஆச்சரியப்பட வைத்தது.இக்கோயில் எழுத்தர், டிக்கெட் விற்பனையாளர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது. இதில் அறநிலையத்துறை மதுரை உதவி கமிஷனர் ராமசாமி, தக்கார் சுரேஷ்கண்ணன், செயல் அலுவலர் லதா உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.அரசு பணிகளுக்கு கடும் போட்டி உள்ள இன்றைய சூழலில், 3 பணியிடங்களுக்கு ரகசியமாக, போதிய விளம்பரம் செய்யாமல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. என்றாலும், தெரிந்தவர்கள் சொன்னதின் பேரிலும், அரசியல்வாதிகள் சிபாரிசு மூலமும் 95 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதிலும்சிலர் இரண்டு பணியிடங்களுக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்தனர். அரசு பணி கிடைக்க வேண்டும் என தினமும் இக்கோயிலுக்கு வழிபட வந்தவர்களுக்கு கூட, இங்குள்ளகாலி பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கலாம் என்ற தகவல் சென்றடையவில்லை.இந்நிலையில் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நேர்காணல் நடந்தது. எழுத்தர், டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு 10ம் வகுப்பும், இரவு காவலர் பணிக்கு 8ம் வகுப்பும் கல்வித்தகுதி என்ற நிலையில் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளில் 'தமிழக முதல்வர் யார் ?' என்ற கேள்வி கட்டாயமாக கேட்கப்பட்டது.ஏற்கனவே, அரசியல்வாதிகள் மூலம் இந்த மூன்று பணியிடங்களுக்கு,4 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வாங்கி தேர்வு செய்துவிட்டு கண்துடைப்பிற்காக நேர்காணல் நடத்துகின்றனர் என ஏமாற்றம் அடைந்த பட்டதாரி இளைஞர்கள் புலம்பிச்சென்றனர்.கோயில் செயல் அலுவலர் லதாவிடம் கேட்டபோது, 'அப்படி எல்லாம் இல்லை, காலி பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்தது, அவ்ளோதான்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
18-மே-201817:07:15 IST Report Abuse
JANANI Kanthudaippukkaaga ellam onnum nadakkala.. aatharam illaama kurai sollaathinga
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
18-மே-201813:11:12 IST Report Abuse
chinnamanibalan அறநிலையத்துறையில் உள்ள கோவில்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கு நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு நடைபெற வேண்டும். அர்ச்சகர் மற்றும் இதர பணியாளர் பதவிகளுக்கு பல லட்சம் கையூட்டு எனில், கோவில்களில் நேர்மையான நிர்வாகம் நடைபெறாது மாறாக கொள்ளைதான் நடக்கும். இதை ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201810:00:05 IST Report Abuse
Bhaskaran எந்த துணை ஆணையர் அதிக லஞ்சம் வாங்கியுள்ளார் யார்காலத்தில் பழனியில் மோசடிநடந்தது சங்கரன்கோவிலில் கொள்ளைபோன வெள்ளிபல்லக்கின் இன்றயமதிப்பு என்ன மீனாட்சிகோவிலில் ஒருநாள் கிடைக்கும் கொள்ளைப்பணம் எவ்வளவு முன்னாள் துணைஆணையர்தனபாலின்இன்ரயாசொத்துமதுப்பு எத்தனைகோடி இதைபோன்றகேள்விகளை அல்லவா கேட்டிருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X