எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடை விதிக்க மறுப்பு சுப்ரீம் கோர்ட்டில் விடிய விடிய நடந்த விசாரணை Dinamalar
பதிவு செய்த நாள் :
எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடை விதிக்க மறுப்பு
சுப்ரீம் கோர்ட்டில் விடிய விடிய நடந்த விசாரணை

புதுடில்லி: கர்நாடக முதல்வராக பதவியேற்க, பா.ஜ.,வைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு, கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவியேற்க தடை விதிக்கக் கோரியும், காங்., - ம.ஜ.த., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எடியூரப்பா, பதவி ,ஏற்புக்கு, தடை விதிக்க, மறுப்பு ,சுப்ரீம் கோர்ட்டில், விடிய விடிய, நடந்த விசாரணை


விடிய விடிய நடந்த இந்த விசாரணையின் முடிவில், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க, நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.கர்நாடகாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, 104 இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளதால், அந்த கட்சியைச் சேர்ந்த, எடியூரப்பாவை, முதல்வராக பதவியேற்கும் படி, கவர்னர் வஜுபாய் வாலா, நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.

கவர்னரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., நேற்று முன்தினம் இரவு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளில், அரிதிலும் அரிதான நிகழ்வாக, நேற்று இரவு 2:11 மணிக்கு இந்த வழக்கை, நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ. போப்டே மற்றும் அசோக் பூஷண் அடங்கிய சிறப்பு அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு வந்தது.

காங்., - ம.ஜ.த., சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், அபிஷேக் சிங்கி வாதிட்டதாவது: எந்த அடிப்படையில், கவர்னர் வஜுபாய், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார் எனத் தெரியவில்லை.

காங்., - ம.ஜ.த., கூட்டணிக்கு, 117 எம்.எல்.ஏ.,க்களின் பலம் உள்ளது. ஆனால், பா.ஜ.,விடம், வெறும், 104 எம்.எல்.ஏ.,க்களே உள்ளனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க, 112 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவைப்படும்போது, கவர்னரின் இந்த செயல் சரியானதாக தெரியவில்லை. எனவே, எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும்.

அதே போல், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, எடியூரப்பா, எத்தனை நாட்கள் அவகாசம் கோரினார் எனத் தெரியவில்லை. அவர்களின் கட்சியினர் கூற்றுப்படி, அவர், ஏழு நாட்கள் அவகாசம் கோரியதாக கூறப்படுகிறது.

ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க, எடியூரப்பாவுக்கு, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; இது, குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. கவர்னரின் இந்த செயலால், எம்.எல்.ஏ.,க்கள், விலைக்கு வாங்கப்படக் கூடிய அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது: எடியூரப்பாவும், கவர்னரும் என்ன பேசினர் எனத் தெரியாது. எடியூரப்பா, கவர்னரிடம் கொடுத்த கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்ற விபரங் களும் தற்போது இல்லை. கவர்னர், எந்த அடிப்படை யில் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார் எனத் தெரியாமல், எதுவும் கூற முடியாது.

இப்படி இருக்கையில், இந்த வழக்கு ஒருபுறம் நடக்கட்டும். எடியூரப்பாவும் பதவியேற்று, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்கட்டும். அதன் பின் வருவதை பார்க்கலாம். அதே சமயம், காங்., - ம.ஜ.த., சார்பில் அளிக்கப் பட்ட, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தில் இடம் பெற்றுள்ள கையெழுத்தின் உண்மை தன்மையில் சந்தேகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி வாதிட்ட தாவது: ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்ற உரிமை, கவர்னருக்கு உண்டு. அவரது அதிகாரத்தில் யாரும் தலையிடுவது நியாயம் ஆகாது. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள, பா.ஜ.,வை, ஆட்சி அமைக்க அழைத்ததில் தவறேதும் இல்லை.எடியூரப்பா பதவியேற்க

Advertisement

தடை கோரி, இவ்வளவு அவசர அவசரமாக மனு தாக்கல்செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. ஒருவரது பதவியேற்பால், வானம்இடிந்து விழவா போகிறது. இது ஒன்றும் யாருடைய வாழ்வா, சாவா போராட்டம் அல்ல. கவர்னரின் அதிகாரத்தில் தலையிடுவது, ஒருபோதும் நியாயம் ஆகாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.

முத்தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், எடியூரப்பா முதல்வர் பதவியேற்க தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதே சமயம், எடியூரப்பா, கவர்னரிடம் கொடுத்த கடிதம் மற்றும் எடியூரப்பாவுக்கு கவர்னர் அனுப்பிய கடிதம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.

எடியூரப்பா முதல்வராக பதவியேற்றாலும், அது, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதே என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மனு மீதான விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கவுள்ளது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நேற்று இரவு 2:11 முதல், 5:28 மணி வரை நடந் தது. இக்கட்டான சூழலில், தங்கள் மனுவை ஏற்று, அதை விசாரித்த, நீதிபதி களுக்கு, அபிஷேக் சிங்கி நன்றி தெரிவித்தார். மனுவை, நீதிபதிகள் உடனடியாக விசாரணைக்கு ஏற்றதன் மூலம், ஜனநாயகம் வென்றுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தில் விடிய விடிய நடந்த இந்த விசாரணை யால், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஏராளமான பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் அங்கு திரண்டதால், நீதிமன்ற வளாகம், திருவிழா நடந்த இடம் போல் காணப்பட்டது.

ராம்ஜெத் மலானி மனு தாக்கல்


கர்நாடக முதல்வராக பதவியேற்கும் படி, எடியூரப்பாவுக்கு, அந்த மாநில கவர்னர், வஜுபாய் வாலா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூத்த வழக்கறிஞர், ராம்ஜெத் மலானி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று அவர் தாக்கல் செய்த மனுவில், கவர்னரின் செயலால், அரசியல் சாசனம் கேள்விக்குறி ஆகியுள்ளதாக கூறினார். இந்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை, இன்று நடக்கவுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilselvan - chennai,இந்தியா
18-மே-201816:27:15 IST Report Abuse

tamilselvanபா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி வாதிட்ட தாவது: ஆட்சி அமைக்க யாரை அழைக்க வேண்டும் என்ற உரிமை, கவர்னருக்கு உண்டு. அவரது அதிகாரத்தில் யாரும் தலையிடுவது நியாயம் ஆகாது. தனிப் பெரும் கட்சியாக திரு முகுல் ரோஹத்கி கவர்னர் என்று பதவி எப்படி வந்து தெரியும் இந்தியா சுதந்திரம் அடையாத போது ஆங்கிலேயர் உருவாக்கிய பதவி இன்னம் இந்தியாவில் அந்த பதவி வைத்து கொண்டுருக்கிறோம் கவர்னர் என்பவர் மக்களை தேர்ந்து எடுக்கவில்லை மத்திய அரசு கைப்பாவை அவர் அதிகாரத்தில் தலையிடலாம்

Rate this:
Rajan - singapore,சிங்கப்பூர்
18-மே-201810:12:23 IST Report Abuse

Rajanஇப்போதெல்லாம் நீதியை எதிர் பார்க்கமுடியாது

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
18-மே-201806:48:30 IST Report Abuse

K.   Shanmugasundararajஎடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்கவில்லை . ஆனால் அதே நேரத்தில் அவர் தனியாகத்தான் பதவி ஏற்க வேண்டும் . பிற அமைச்சர்களை நியமனம் செய்யக்கூடாது.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X