திருவானைக்காவலில் அதி ருத்ரயாகம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவானைக்காவலில் அதி ருத்ரயாகம் துவக்கம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருவானைக்காவலில் அதி ருத்ரயாகம் துவக்கம்

திருச்சி, காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 125வது ஜெயந்தியை முன்னிட்டு, உலக நன்மைக்காக, 11 நாள் அதி ருத்ர, சதசண்டி, ருக்சம்ஹிதா பெருவேள்வி திருவானைக்காவல் காஞ்சி சங்கரமடத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது.முதல் நாளன்று கணபதி ஹோமத்துடன் துவங்கி, தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சண்டிபாராயணம் மற்றும்ருத்ர ஜபமும் நடந்தன.தினமும் காலை கணபதி, ஆவஹந்தி ஹோமங்கள், மகன்யாச பூர்வக ருத்ர ஜபம், ஸ்ரீசண்டி பாராயணம், ருக்சம்ஹிதா ஹோமமும் நடக்கவுள்ளன.மதியம், வித்வசதஸ் எனப்படும் வேதவிற்பன்னர்கள் கூட்டம் மற்றும் விவாதம், நாமசங்கீர்த்தனமும், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ருத்ர கர்மார்ச்சனை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, அவதாரிகையுடன் மகா தீபாராதனை நடக்கிறது.வரும்,26ம் தேதி அதிருத்ர சதசண்டி, மற்றும் ருக்சம்ஹிதா ஹோமம் பூர்த்தி நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. பெருவேள்வி நடக்கும் அனைத்து நாட்களிலும், அன்னதானம் வழங்கப்படுகிறது.இதற்கு நன்கொடைகள்அளிக்க விரும்புவோர், SCSSSK Trust என்றபெயரில் காசோலைகள், வங்கி வரைவோலைகள் அனுப்பலாம்.ஸ்ரீரங்கம் சிட்டியூனியன் வங்கி, S.B.,A/c. No. 115001000358340, IFS Code: CIUB 0000115 என்ற கணக்கிற்கும் பணம் அனுப்பலாம்.கலந்து கொள்ள விரும்புவோர், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைங்கர்ய டிரஸ்ட், டிஏஎப்/4-பாரத் பிளாசா, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி-6, என்ற முகவரியிலோ, 0431-2434553 ; 94437 33573 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X