சாணார்பட்டியில் 'சரக்கு' கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாணார்பட்டியில் 'சரக்கு' கொள்ளை

Added : மே 18, 2018
Advertisement

சாணார்பட்டி, சாணார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மதுபான பெட்டிகளை கொள்ளையடித்து சென்றனர்.திருச்சி ரோடு தாமரைப்பாடி பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை சில நாட்களுக்கு முன்பு சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி பகுதிக்கு மாற்றப்பட்டது. பூசாரிபட்டி அருகே காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். மாலைப்பட்டியை சேர்ந்த முருகன்,50, என்பவர் இரவு காப்பாளராக இருந்தார்.இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கிவிட்டு கடையின் பூட்டை உடைத்து மதுபான பெட்டிகளை மினிவேனில் ஏற்றிச் சென்றதாக நேற்று அதிகாலை டாஸ்மாக் ஊழியர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். மேற்பார்வையாளர் முருகன் சாணார்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். டி.எஸ்.பி., கோபால், இன்ஸ்பெக்டர் ராம்ராயணன் உள்ளிட்ட போலீசார் கடையை பார்வையிட்டனர். இதில் பீர் மற்றும் பிராந்தி உட்பட ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பெட்டிகளை காணவில்லை. தடயவியல் டி.எஸ்.பி., சீனியம்மாள் தடயங்களை சேகரித்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X