விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?| Dinamalar

விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?

Added : மே 18, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Air India flight delay, Public sector company, International flights,ஏர் - இந்தியா விமானம் தாமதம், ஏர் - இந்தியாவிற்கு அபராதம், ஏர் - இந்தியா விமான நிறுவனம், பொதுத் துறை நிறுவனம்,  சர்வதேச விமானங்கள், விமானம் தாமதம்,
 Air India fines,
Air-India airlines, aircraft delays,

புதுடில்லி: விமானம் தாமதமாக சென்றதால், 'ஏர் - இந்தியா' விமான நிறுவனம், பயணியருக்கு, 57 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானம், மே, 9ல், 323 பயணியருடன், தலைநகர் டில்லியிலிருந்து, அமெரிக்காவின், சிகாகோவுக்கு சென்றது. மோசமான வானிலை காரணமாக, விமானம் தாமதமாக சென்றது.

மேலும், அமெரிக்காவின் மில்வாக்கியில் தரையிறங்கியது. அங்கிருந்து சிகாகோவுக்கு செல்ல, 19 நிமிடங்கள் ஆகும். ஆனால், அங்கிருந்து தாமதமாக சென்றது. விமானத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அமெரிக்க சட்டப்படி, சர்வதேச விமானங்களில், நான்கு மணி நேரத்திற்கும் மேல் பயணியர் காத்திருந்தால், அதற்கு, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், பயணியருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதி. இதன்படி, டில்லி - சிகாகோ விமானத்தில் பயணம் செய்த, 323 பயணியருக்கு, 57 கோடி ரூபாய், ஏர் - இந்தியா அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran - Hosur,இந்தியா
18-மே-201813:06:29 IST Report Abuse
Ramachandran விமானம் தாமதம் பண்ணுவாங்க. நம்ம 5 நிமிடம் லேட்டா போனா உள்ள விடாம 7000 வேஸ்ட் ஆகும். இவங்க சும்மா விட கூடாது
Rate this:
Share this comment
Cancel
18-மே-201811:24:08 IST Report Abuse
nanthiji,thailand !!..ஏற்கனவே , இங்கு நிறைய ஆதங்கப் பட்டு உள்ளார்கள்.. உண்மையே.. தாமதத்திற்கு எடுத்துகாட்டாக உள்ளது நமது விமான சேவை.. மத்திய அமைச்சகத்திற்கு இப்படி அபராத போட்டால் தான் திருந்துவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
18-மே-201810:25:45 IST Report Abuse
பிரபு இந்தியாவிலும் இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X