வங்கி துறை விரைவாக சீரமைக்கப்படும்: பியுஷ் கோயல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்கி துறை விரைவாக சீரமைக்கப்படும்: பியுஷ் கோயல்

Added : மே 18, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வங்கி துறை சீரமைப்பு ,  பியுஷ் கோயல்,  ரிசர்வ் வங்கி , தற்காலிக நிதியமைச்சர் பியுஷ் கோயல்,  பிரதமர் மோடி, வங்கிகள் வாராக் கடன் பிரச்னை, பொதுத் துறை வங்கிகள், வங்கித் துறை வளர்ச்சி, 
Banking Reconstruction, Piyush Goyal, Banking Development, Reserve Bank, Temporary Finance Minister Piyush Goyal, Prime Minister Modi, Banks non performing assets , Public Sector Banks,

புதுடில்லி : ''வங்கித் துறை வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என, மத்திய நிதியமைச்சராக, தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள, பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

டில்லியில், பியுஷ் கோயல் தலைமையில், பொதுத் துறை வங்கி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, பொதுத் துறையைச் சேர்ந்த அனைத்து வங்கிகளும், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் ஒத்துழைப்பு மற்றும் நிதி சார்ந்த அமைப்புகளின் ஆதரவுடன், வங்கித் துறை விரைவில் சீரமைக்கப்படும் என, உறுதி கூறுகிறேன்.

வங்கித் துறை வளர்ச்சி காண்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும். பொதுத் துறை வங்கிகளில், உச்சபட்ச நேர்மை, பொறுப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல், ரிசர்வ் வங்கி, வங்கித் துறையை சீராக கண்காணித்து வருகிறது. கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முந்தைய ஆட்சியில், இது போன்ற தீவிரம் காட்டப்படவில்லை. கடந்த ஆட்சியில், பாரபட்ச முறையில், முறைகேடாக வழங்கப்பட்ட கடன்கள் தான், இன்று வங்கித் துறையின் சிக்கலுக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.


கெடு விதிக்க திட்டம் :

ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் உள்ள, 11 வங்கிகளுக்கு, வாராக் கடன் பிரச்னையில் இருந்து மீண்டு வர, கெடு விதிக்கவும்; குறித்த காலத்திற்குள் வங்கிகள் சீரமைக்கப்படும் என, அவற்றின் இயக்குனர் குழுக்களிடம் உறுதி பெறுவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
18-மே-201817:13:25 IST Report Abuse
MANI DELHI சிதம்பரம் ஒரு வக்கீல். எகானாமிஸ்ட் என்று புரளி பேசி நிதி துறையை தன் சுய நலம் சார்ந்து பணம்கொழித்த நடவடிக்கைகளின் விளைவு தான் இன்றைய வங்கியின் செயல்பட்டு நிலை. இவர் வகித்த துறை power மினிஸ்ட்ரி. இங்கு வந்து பார்த்தால் தெரியும். எத்தனை சேமிப்பு வழிகள் மூலம் செலவுகள் கட்டுப்படுத்தி அதில் மின்சார வசதிகளை கிராமங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
18-மே-201815:05:36 IST Report Abuse
yila இவர்கள் சீர்திருத்தம் என்றால், நாம் சீரழிவு என்று புரிந்து கொள்ள வேண்டும். அதிக கட்டணங்கள் வசூலிக்க தயாராகிறார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
18-மே-201814:50:15 IST Report Abuse
Ashanmugam முதலில் அரசு வங்கிகளை தனியார் மயமாக வேண்டும். இளைய தலையினர் வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றால், ஓய்வு பெறும் வயதை 58 ஆக மாத்தவேண்டும். இல்லாவிடில் வேலை இல்லா திண்டாட்டம் பெருகி கொண்டே போகும். வங்கிகளின் பொது லீவு களை பொதுத்துறை கம்பனிகள் போல குறைக்கவேண்டும். வங்கிகள் கட்டாயமாக 8 மணி நேரம் வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அதே போல் இந்தியாவில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு 58 உள்ளதுபோல், இந்தியாவில் உள்ள எல்லா துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஒட்டுமொத்த ஓய்வு வயதை இந்திய முழுவதும் 58 ஆக மாற்றவேண்டும். இல்லாவிடில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்டும். பிறகு, மத்திய அமைச்சர் கோழி கடை, காவாப் கடை, மீன் கடை, சமோசா கடை, டி கடை வைத்து பிழைத்துக்கொள்ள அறிவுரை சொல்லுவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X