எடியூரப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி| Dinamalar

எடியூரப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா, உச்சநீதிமன்றம், நாளை ஓட்டெடுப்பு , சுப்ரீம் கோர்ட் கேள்வி, பாஜக, வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, கர்நாடக சட்டசபை,காங்கிரஸ் வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு, நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த எடியூரப்பா தயாரா?, நீதிபதிகள் கேள்வி, கர்நாடகா தேர்தல் முடிவுகள் ,   கர்நாடகா தேர்தல்,  Karnataka election 2018, Supreme Court, tomorrow pending, Supreme Court question, BJP, lawyer Mukul Rohathi, Karnataka assembly, Congress attorney Abhishek Singhvi, trust vote, judges question, Karnataka election results, Karnataka election , no confidence motion

புதுடில்லி: கர்நாடகாவில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடலாமா? பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பா தயாராக உள்ளாரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.


கடிதம் தாக்கல்

எடியூரப்பா பதவியேற்றதை எதிர்ப்பு காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது பா.ஜ., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ஆட்சியமைக்க உரிமை கோரி மே 15 மற்றும் 16 ம் தேதிகளில் கவர்னரிடம் எடியூரப்பா அளித்த கடிதங்களை தாக்கல் செய்தார்.அதில், பெரும்பான்மை அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ரோத்தஹி வாதாடுகையில், காங்கிரஸ் மஜத எம்எல்ஏ.,க்கள் மிரட்டி, சிறைபிடித்து வைத்துள்ளனர். சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடிதங்களில் எம்எல்ஏக்கள் கையெழுத்து குறித்து கவலைபட தேவையில்லை. காங்கிரஸ் அளித்த கடிதத்திலும், சிலரது கையெழுத்துகள் இடம்பெறவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிடலாம். காங்., மஜத எம்எல்ஏக்கள் சிலர் எடியூரப்பாவிற்கு ஆதரவு அளிக்கலாம் என்ற அவர் எம்எல்ஏக்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.


கேள்வி

தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் தங்களுக்கு ஆதரவு உள்ளதாக கூறிய நிலையில் பா.ஜ.,வை மட்டும் அழைத்தது ஏன்? யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பது குறித்து கவர்னர் முடிவு செய்யலாம். வாக்காளர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் கூட்டணி குறித்து மக்களுக்கு தெரியாது. தற்போதைய சூழலில், கவர்னர் முடிவு குறித்து விரிவாக விசாரணை நடத்துவது அல்லது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், கர்நாடக சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது சரியாக இருக்கும். என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு தான் முதலில் வாய்ப்பு தர வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமாறன் - trichy,இந்தியா
19-மே-201808:43:07 IST Report Abuse
மணிமாறன் ஆடியோ வை நம்ப மாட்டோம்..வீடியோ வை நம்ப மாட்டோம்..ரேடியோவை நம்ப மாட்டோம்..எங்களை கையும் களவுமாக பி டித்தால் மட்டுமே நம்ப முடியும்..அதுதான் முடியாதே
Rate this:
Share this comment
Cancel
G.Rameshchandran - Tamil nadu,இந்தியா
19-மே-201807:20:03 IST Report Abuse
G.Rameshchandran ஜாதி எங்கே வந்தது பதவிக்காக வந்ததா? தேர்தல் அன்று தெரியாதா ஜாதி? தயவு செய்து சிந்தியுங்கள் மெக்காலே.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-மே-201807:07:59 IST Report Abuse
Darmavan இக்கால ஒட்டு வங்கிகள் எதை வைத்து செயல்படுகின்றன .முஸ்லீம் ஓட்டுக்காக PFI போற மதவெறியர்களை வளர்த்துவிடுவதும்,இந்துக்களை ஒரே தெய்வ வழிபாடானாலும் லிங்காயத் என்ற பெயரில் பிரிப்பதும்.பெரோஸ்கன் பேரன் /இத்தாலிய கிருஸ்துவ மைனோ தன்னுடைய மதத்தை பரப்ப ஜட்ஜுகளிலும் பல பேரை தாண்டி கிருஸ்துவனை கொண்டுவர அரசியல் செய்வதும், நம் எதிரியான பாகிஸ்தானில் போய் நாட்டுக்கு எதிராக கலகம் செய்யும் மணி சங்கர் ஐயர் போன்ற துரோகிகளை வளரவிடுவதும் கேவலமான கீழ்த்தரமான அரசியல் ..இதை பார்க்கும் போது இப்பத்து நடப்பது சரியே.இந்த காங்கிரஸ் என்ற தீய சக்தி எப்படியாவது ஒழிக்கப்படவேண்டும் .அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X