நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு| Dinamalar

நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு

Added : மே 18, 2018 | கருத்துகள் (78)
Advertisement
நம்பிக்கை ஓட்டெடுப்பு, கர்நாடகா, எடியூரப்பா, காங்கிரஸ், சிங்வி, கபில் சிபல்

புதுடில்லி: கர்நாடக சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


வீடியோ பதிவு

அப்போது காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர எங்களுக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். காலதாமதமின்றி, ஓட்டெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சட்டசபையில் நாளையே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது. எம்எல்ஏக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தது தன்னிச்சையான முடிவு. யாரை அழைக்க வேண்டும் என முடிவு செய்ய கவர்னருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்ற வேண்டும். தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என்றார்.


உத்தரவு

பா.ஜ., சார்பில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஒரு வார அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நாளை மாலை 4 மணிக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி, எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கைப்புள்ள - nj,இந்தியா
18-மே-201819:49:05 IST Report Abuse
கைப்புள்ள பச்ச புள்ளைங்க மாறி சந்தோசப்பட்டுகிறானுக, ம்ம்ம்ம், இவனுகளை எல்லாம் என்ன சொல்றது? தேர்தல் முடிவுகள் வெளில வந்தப்போவும், காங்கிரசின் சதியை முறியடிச்சு சொன்ன நேரத்துல போயி முதல்வராக பதவி ஏற்ற அப்போவும் ஒரு பயலை கூட காணோம் இந்த பக்கம். ஓடியே போய்ட்டானுக. மூஞ்சி பூரா சாணியை கரைச்சு ஊதின மாறி அசிங்கம். கேவலப்பட்டு ஓடி ஒளிஞ்சிட்டானுக. இன்னிக்கு வந்து ஓ அவனை காணோம் ஓ இவனை காணோம்ன்னு சின்ன புள்ளைங்கமாரி கை கொட்டி சிரிச்சுக்கிட்டு. ஹையோ இவனுகளை எல்லாம் நெனச்சா சிரிப்பாதான் வருது. இம்பாக்ட் நான் அதற்காகத்தான் இங்க வரதே.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-மே-201818:18:23 IST Report Abuse
elakkumanan அய்யா கனவான்களே, என்னமோ மோடி அவரு பாக்கெட்டுக்குள்ளாற judje எல்லாரையும் அள்ளி போட்டுக்கிட்டு திருயுறாருன்னு சொன்ன கனவான்களே, மொதல்ல நீதித்துறையை மோடி அரசு எதுவும் பண்ணலுன்னு ஒத்துக்குங்க . அப்பொறம், இருபத்தி ஒம்போது mp சீட்ட லட்டு மாதிரி மோடி அள்ளப்போர்ர்ருன்றதாயும் ஒத்துக்கங்க. ஏன்னா, இப்பயும், நாங்க ஒங்க ஆட்சி மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கோம். ஏன்னா, கும்சு , நீங்க ரெண்டு பேருமே பயங்கர ஒழுக்கமா ஆட்சி செஞ்சதுக்கான சாட்சிதான் நூத்தி இருபத்தியிரண்டு எழுபத்தெட்டு ஆனது. சனநாயகம் ஒன்னும் ஆகாது. ஏன்னா, அறுபது வருசமா ஒங்க கூத்த தாண்டி அது இன்னும் உயிரோட இருக்கு. இனிமேலும் இருக்கும். நீங்க இருப்பீர்களா ? எப்பிடி, இருபத்து மூணு ஸ்டேட் மூணு ஸ்டேட் ஆனது மாதிரியா இருப்பீங்க? ஆனால், இந்த மூணு ஸ்டேட்டுக்கே எல்லா மானமும் போச்சு. கும்சுக்கு பாத பூஜை செஞ்சு உசிர மட்டும் காப்பாத்துங்க. மோடியை நம்பி கெட்டவனும் இல்லை. புற்று கட்சியை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. சாட்சி சாட்சாத் குமஸ்தான். மோடியை நம்பாம கெட்டவங்க நெறய பேரு. சாட்சி இனிமே கும்சுதான் அதுக்கும் சாட்சி. ஊரு பய காச திருடுன, திருடுற, த்ருடப்போற புற்றும் குமசும்தான் இனி மோடிக்கு விலையில்லா விளம்பர தூதர்கள். எந்த காலத்துலயும், கும்சும் புற்றும் மக்களுக்கு நல்லது செய்யவே செய்யாதுக. அப்போ, இருபத்தொன்பது mp ஸீட் கிடைச்சாச்சு. ரொம்ப நல் வாழ்த்து, உங்களோட பயங்கரமான ஆட்சிக்கு. கர்நாடக மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இப்போ, தண்ணி விடச்சொல்லி, ஒரு கோஷ்டி நேர மோடி வீட்டு வாசல்ல போயி நின்னு கத்துங்க பாரேன். என்ன ஜீவராசிகளோ? தன்னோட கோமணம் அவுந்து விழுந்தது தெரியாம , அடுத்தவன் சட்டையில் உள்ள ஓட்டைய பாத்து சிரிக்குற அதி புத்திசாலிகளுக்கும், காவேரி நீர் போராட்ட வீரர்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்கள். எங்க செயலு இனி எங்க போயி போராட்டத்தை நடத்துவாரோ தெரியல. இந்த ஒரு ஆட்சியை பிடிக்க ஒங்க பப்புவுக்கு பதிலா நீங்க நடு ராத்திரி கூட தூங்காம உங்களுக்கு உழைச்ச ஜுட்ஜயே நம்பலாம். பப்புவை நம்புனா நடுத்தெருதான்னு புருஞ்சுதுல்ல. போயி, புத்தியோட பொழைக்க பாருங்க. இனி, உங்க கும்ஸ்- புற்று சண்டதான்ய எங்களுக்கு பொழுதுபோக்கு.
Rate this:
Share this comment
Cancel
vatican arul - Banglore ,இந்தியா
18-மே-201817:36:31 IST Report Abuse
vatican arul மணிமாறன் சார் , இத்தாலிய நேஷனல் காங்கிரஸ் ( INC ) தலைவர் ராகுல் பப்பு எலெக்ஷனுக்கு முன்பு JD (U ) பிஜேபி இன் B டீம் என்றார். எலெக்ஷனுக்கு பிறகு JD (U ) காங்கிரஸ்ஸின் A டீம் என்கிறார். ஸ்தாரமான சிந்தனை இல்லாததால் தான் இவரை பப்பு என்கிறார்கள். ஒரு வேளை எது கரெக்ட் என்று அவருக்கு உங்கள் இத்தாலிய பாவாடைகள் சொல்லவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X