கர்நாடக தற்காலிக சபாநாயகர் நியமனம்

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (45)
Advertisement
கர்நாடகா, சட்டசபை, பா.ஜ., எம்.எல்.ஏ., போபையா, எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக பா.ஜ., எம்எல்ஏ போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகரை நியமிக்க ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, விராஜ்பேட்டை தொகுதி பா.ஜ., எம்எல்ஏ கே.ஜி. போபையா தற்காலிக சபாநாயகராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இவர், கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் ஆவார்.


சட்டசபை தொடர்

இதனை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையை நாளை காலை 11 மணிக்கு கூட்ட கவர்னர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் பதவியேற்பு மற்றும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கூடவுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
19-மே-201800:38:06 IST Report Abuse
Ananthakrishnan நாளை காலை 10.30 மணிக்கு போபையா நியமனம் குறித்து காங்கிரஸ் கொடுத்த புகார் உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதி மன்றம் கூட களைத்துப் போகும் அளவுக்கு கர்நாடக ஆளுநரும், எடியூரப்பாவும் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் இந்த 4 நாட்களில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் விலை போயிருப்பார்கள் என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும். இவ்வளவும் மேலிடத்தின் ஆதரவில் நடக்கிறது என்பதுதான் கொடுமை. இவர்களை நம்பித்தான் இந்திய ஜனநாயகம் இருக்கிறது. எல்லா ஊழல்வாதிகளையும் கையில் வைத்துக்கொண்டு, ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது பார் என்று வேறு ஜம்பம் பேசுகிறார்கள். கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Remedios Villavarayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201800:03:58 IST Report Abuse
Remedios Villavarayen ஒரு தற்குறி - கடவுளின் பெயரால் செய்யும் அட்டகாசம்
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
18-மே-201820:29:29 IST Report Abuse
மணிமாறன் நீதி மன்றம் சொன்னது..மூத்த உறுப்பினரை சபாநாயகராக நியமிக்க வேண்டும் என்று..8 முறை MLA ஆன ஒருவர் இருக்கிறார்..அவரை ஒதுக்கி விட்டார்கள்...இந்த மனிதர் அப்பட்டமாக சட்ட விதிகளையும் மரபுகளையும் காற்றில் பறக்க விட்டார் என்று உச்ச நீதி மன்றம் கேவலமாக சொல்லி இருக்கிறது..இவர் நடு நிலையாக செயல் படவில்லை என்றும் சொல்லியிருக்கிறது..பிஜேபியும் திருந்த போவதில்லை..அவர்களின் ஆளுநரும் திருந்த போவதில்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X