பதிவு செய்த நாள் :
முதல்வர், நாற்காலி, நம்பிக்கை ஓட்டெடுப்பு, கர்நாடகா, எடியூரப்பா, ராஜினாமா

பெங்களூரு; கர்நாடகாவில் எடியூரப்பா இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் முன்னதாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மெஜாரிட்டியை நிரூபிக்க போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததால் தோல்வி என காட்டி கொள்ள விரும்பாத எடியூரப்பா இந்த முடிவை எடுத்ததாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

முதல்வர், நாற்காலி, நம்பிக்கை ஓட்டெடுப்பு, கர்நாடகா, எடியூரப்பா, ராஜினாமா



சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. காலையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு முடிந்தது. மீண்டும் அவை 3. 30 மணிக்கு கூடியது. இதற்கிடையில் இன்று மதியம் எடியூரப்பா பேரம் பேசியதாக காங்., தரப்பில் மற்றொரு ஆடியே வெளியிடப்பட்டது. இதில் எடியூரப்பாவே நேரடியாக ஒரு காங்., எம்.எல்.ஏ.,விடம் , அமைச்சர் பதவி தருவதாகவும், 15 கோடி முதல் தவணையாக தருவதாகவும், மேலும் 2 பேரை தனக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி பேரம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.



நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் முன்னதாக எடியூரப்பா சபையில் இன்று மாலை 3. 45 மணியளவில் உரையாற்றினார்.


எனது உயிர் உள்ளவரை .,


இந்த உரையில்; சமீபத்திய தேர்தல் முடிவு மூலம் எனக்கு 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்கியுள்ளனர். பிரசாரத்தின் போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது மக்கள் காட்டிய அன்பும், ஆதரவும் மறக்க முடியாது. எங்கள் கட்சியை தனி பெரும் கட்சியாக உருவாக்கிய மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சமீபத்திய முடிவுகள் காங்கிரசையும், ம.ஜ.த.,வையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். தோல்வியை தழுவியும் இங்குள்ள கட்சிகள் நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல் கண்டிக்கத்தக்கது. மக்களை மதிக்க வேண்டும். மக்கள் நீதியை நோக்கி காத்திருக்கின்றனர். ஏழைகள், விவசாயிகள் வளர்ச்சிக்காக

Advertisement

பாடுபடவே ஆட்சி அமைக்க விரும்பினேன். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். தற்போதைய சூழலில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனது உயிர் உள்ளவரை நான் கர்நாடக மக்களுக்காக போராடுவேன். மக்களுக்காக உழைக்கவே விரும்புகிறேன். மாநில வளர்ச்சிக்காக உழைப்பேன். வரும் லோக்சபா தேர்தலில் முழு அளவில் வெற்றி பெறுவோம். என உருக்கமாக பேசினார்.



அடுத்தது என்ன நடக்கும் ?

பதவியேற்ற 56 மணி நேரத்தில் எடியூரப்பா பதவி விலகியதால் கர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு கவர்னர் அடுத்து என்ன முடிவு எடுப்பார். யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல்வராவாரா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையாவுக்கு ஏதும் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
20-மே-201812:55:33 IST Report Abuse

pradeesh parthasarathyஅப்படி மலர்ந்த தாமரை மலந்து விட்டது ...வந்த வேகத்திலேயே கருகி விட்டது ....

Rate this:
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201819:08:26 IST Report Abuse

Jeyaseelanகைப்புள்ள கைப்புள்ள என்று ஒரு மானஸ்தன் இங்கே சுற்றிக்கொண்டிருந்தான், யாராவது அவனை பார்த்தால் சொல்லுங்கள்

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
19-மே-201818:27:43 IST Report Abuse

மஸ்தான் கனிஎட்டி மெஜாரிட்டி இல்லாத நிலையில் கவர்னரை கையில் வைத்துக்கொண்டு அதிகார துஸ்பிரயோகம் செய்து முதலமைச்சர் ஆகி பல பேரங்களை நடத்தி எதுயுமே முடியாத நிலையில் ராஜினாமா செய்துள்ளார் ஆனால் சட்ட மன்றத்தில் அவருடைய கடைசி உருக்கமான உரையோ ஏதோ இவர் தியாகம் செய்த தியாகி போல் உள்ளது மக்கள் இன்னுமா ஏமாறுவார்கள்?

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X