பெங்களூரு: மெஜாரிட்டி நிருபிக்க முடியாமல் பா.ஜ.,வின் எடியூரப்பா அதிக எம்.எல்.ஏக்களை வைத்திருந்த போதிலும் ராஜினாமா செய்து விட்டார். ஆனால் குறைவான 37 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள மஜத குமாரசாமி முதல்வராக ஆட்சி பொறுப் பேற்க உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் மஜத கட்சியும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளன. பா.ஜ., ஆட்சி அமைக்க கூடாது என்பதே இவர்களின் நோக்கம் . அதே நேரத்தில் குறைவான 37 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள மஜத குமாரசாமி முதல்வராக ஆட்சி பொறுப் பேற்க உள்ளது அரசியல் நிபுணர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், காங்கிரசுக்கும் எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர். பா.ஜ.,வுக்கும் எதிராக மக்கள் ஓட்டளித்துள்ளனர். எந்த சூழ்நிலையிலும் மஜத ஆட்சி க்கு வர கூடாது என மக்கள் ஓட்டளித்து உள்ளனர். அதே நேரத்தில் மஜத பெற்ற வெற்றியானது காங்கிரசை எதிர்த்து பெற்ற வெற்றியாகும்.
மக்கள் அதிருப்தி
இந்நிலையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து இருப்பது சந்தர்ப்ப வாதத்தின் வெளிப்பாடாகும். இந்த கூட்டணியை கர்நாடக மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் கூட்டணி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE