மீண்டும் தேர்தல்: அமித்ஷா ஆசை

Updated : மே 21, 2018 | Added : மே 21, 2018 | கருத்துகள் (86)
Advertisement
அமித்ஷா, கர்நாடக தேர்தல் 2018,மதசார்பற்ற ஜனதா தளம் ,கர்நாடகாவில் மீண்டும் தேர்தல், காங்கிரஸ், கர்நாடக தேர்தல் முடிவுகள்,  கர்நாடக அரசியல் பரபரப்பு, பாஜக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,  அமித்ஷா ஆசை, 
Amit Shah , Karnataka Election 2018, Secular Janata Dal, Election Again in Karnataka, Congress, Karnataka Election Results, Carnatic Political Fervor, BJP, BJP National Leader Amit Shah, Amit Shah Desire,

புதுடில்லி : கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும், கர்நாடகாவில் நடந்த அரசியல் பரபரப்புக்களின் போதும் மவுனம் காத்து வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, இன்று மவுனம் கலைத்துள்ளார்.

டில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், கர்நாடக மக்கள் பா.ஜ.,விற்கு தான் ஓட்டளித்தனர். தற்போது மக்களிடம் பா.ஜ.,வின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பா.ஜ., தான் தனிப்பெரும் கட்சி. ஆட்சி அமைக்கும் உரிமை பா.ஜ.,வுக்கு தான் உண்டு. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்., ஆட்சி அமைக்க உள்ளது மக்களை ஏமாற்றும் செயல்.

காங்., அமைச்சர்கள் தேர்தலில் தோற்றுவிட்டனர். இந்த தோல்வியை காங்., ஏன் கொண்டாடுகிறது ? காங்., உண்மையில் எதை கொண்டாடுகிறது என்றே தெரியவில்லை. மக்கள் காங்.,ஐ விரும்வில்லை. முதல்வராக இருந்த சித்தராமைய்யாவே ஒரு தொகுதியில் தோற்றுள்ளார். இதனை காங்., கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 37 தொகுதிகளில் மட்டுமே வென்ற மஜத.,வும் கொண்டாட என்ன இருக்கிறது. கர்நாடக தேர்தலில் பா.ஜ., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்.

யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி. பா.ஜ.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Roopa Malikasd - Trichy,இந்தியா
21-மே-201821:16:50 IST Report Abuse
Roopa Malikasd எனக்கு கூடத்தான் குஜராத் படுகொலை வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது...அப்போது தெரியும் உண்மையான குற்றவாளி யார் என
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
21-மே-201820:39:51 IST Report Abuse
John Shiva   U.K அமிர்ஸா பிஜேபி யின் ஒரு ஊதுகுழல் .ஊழல் பணத்தின்மூலம் மக்கள்சபை உறுப்பினரை வாங்க என்ன துணிச்சல் பாரத ஜனதா கட்சிக்கு கெட்டகாலம் தொடக்கி இருக்கிறது.இந்த மத்திய அரசு எல்லா துறைகளிலும் தலையீடு .நீதி மறுக்கப் படுகிறது ஊழல் வளர்க்கப்படுகிறது ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
21-மே-201819:39:13 IST Report Abuse
Rahim அய்யா அமித் ஷா உங்களுக்கு சந்தர்ப்பவாத இரட்டை நாக்கு அல்லது நியாபக மறதி என நினைக்கிறேன் , பிஹார் என்று ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்தது நினைவு இருக்கா அங்கு நீங்கள் நிதிஷையும் அவர் உங்களையும் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டு தான் பிரச்சாரம் செய்தீர்கள் ஆனால் பாருங்கள் வெட்கம் சூடு சொரணை இல்லமல் இப்போ நிதிஷ் அரசாங்கத்தில் அட்டையை போல ஒட்டிக்கொண்டு ஆட்சி நடத்துகிறீர்கள் ,இரண்டு சீட் ஜெயித்துவிட்டு மேகாலயாவில் பாஜக ஆட்சி என்கிறீர் , தேர்தல் தோல்வியில் சித்தம் கலங்கி விட்டது போல ,உங்க தலைவர் மாதிரி எங்காச்சும் குளு குளு பாரின் டூர் அடிங்க போங்க.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X