10 லட்சம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை! Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, பொதுத்தேர்வு முடிவுகள், தமிழக பள்ளி கல்வித்துறை , மாணவர்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் ,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு,பத்தாம் வகுப்பு மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு,தேர்வு முடிவுகள் மாணவர்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் ,
Tomorrow Tenth public exam result, Public exam Results, Students SMS for Mobile Phone,
 Tamilnadu School Education, 10th Std public exam, Tenth Class Students, Tenth Class exam Result, Exam results students SMS to mobile phone,

சென்னை,: பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. மாணவர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தியாக, மதிப்பெண் பட்டியல் வரும்.

 நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, பொதுத்தேர்வு முடிவுகள், தமிழக பள்ளி கல்வித்துறை , மாணவர்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் ,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு,பத்தாம் வகுப்பு மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு,தேர்வு முடிவுகள் மாணவர்கள் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ் ,
Tomorrow Tenth public exam result, Public exam Results, Students SMS for Mobile Phone,
 Tamilnadu School Education, 10th Std public exam, Tenth Class Students, Tenth Class exam Result, Exam results students SMS to mobile phone,

சில தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியுமா என்ற கலக்கத்தில், மாணவர்கள் உள்ளனர். ஆனாலும், 'யார் அதிக மார்க்' என்ற, 'ரேங்கிங்' முறை ஒழிந்ததால், நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 16ல் துவங்கி, ஏப்ரல், 20ல் முடிந்தது. இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் பாடத்துடன் விருப்ப மொழியாக, பிறமொழி பாடத்திலும், தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது.

மதிப்பெண் பட்டியல்


இதை தொடர்ந்து, மாவட்ட வாரியாக விடை திருத்தும் மையங்களில் இருந்து, மதிப்பெண்

பட்டியல் வரவழைக்கப்பட்டு, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள், இரு தினங்களுக்கு முன், முழுமையாக முடிந்தன.

இதையடுத்து, நாளை காலை, 9:30 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் சார்பில், பள்ளிகளில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள, மொபைல் போன்எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தியாக, மதிப்பெண் விபரங்கள் அனுப்பப்படும்.

மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய தேர்வுகளில், வினாக்கள் கடினமாக இருந்தன. அந்த தேர்வுகளில், தேர்ச்சி சதவீதமும், மதிப்பெண் அளவும் கடுமையாக சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தேர்ச்சி பெற முடியுமா; மதிப்பெண் குறையுமா என, மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

நம்பிக்கை


ஆனால், மாணவர்கள் எந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், அவர்களின் தேர்ச்சிக்கு பிரச்னை இருக்காது என, தேர்வுத்துறை வட்டாரங்கள், நம்பிக்கை

Advertisement

தெரிவித்துள்ளன. மாநில மற்றும் மாவட்ட அளவிலான, முதல் மூன்று இடங்களில் மாணவர்களை நிர்ணயிப்பதற்கான, 'ரேங்கிங்' முறை, கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், 'யார் அதிக மார்க் வாங்குவது, கேக் ஊட்டுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது' போன்ற சம்பிரதாயங்கள் இல்லாததால், மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 சான்றிதழ் வினியோகம் துவக்கம்


பிளஸ் 2 தேர்வர்களுக்கான, மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் முதல் ஏப்., வரை நடந்தது. இதில், 8.60 லட்சம் மாணவர்களும், 40 ஆயிரம் தனித்தேர்வர்களும் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே, 16ல், வெளியாகின. தேர்வர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்கள், உயர் கல்வி படிக்க வசதியாக, அவர்களுக்கு முதற்கட்டமாக, தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், தற்காலிக சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. பள்ளிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், www.dge.tn.nic.in என்ற, இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
22-மே-201811:49:04 IST Report Abuse

balakrishnanதேச நலன் கருதி, இனி, எதிர் காலத்தில் இந்த முடிவுகளும் டெல்லியிலிருந்து வரக்கூடும்,

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-மே-201810:32:37 IST Report Abuse

இந்தியன் kumarநல்ல மதிப்பெண் பெறுவது எப்படி முக்கியமோ , நல்ல மாணவனாக , பின்பு நல்ல மனிதனாக வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Rate this:
suresh - chennai,இந்தியா
22-மே-201809:21:36 IST Report Abuse

sureshஇந்தியாவிலேயே தமிழக பள்ளி குழந்தைகளுக்கு தான் இலவச சைக்கிள்... இலவச பஸ் பாஸ்.. இலவச மத்திய உணவு... இலவச மடிக்கணினி.. இலவச நோட்டு... புத்தகங்கள்... எழுது பொருட்கள்...புத்தக பை....நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை...மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுவோருக்கு வெளி நாட்டில் படிக்க கல்வி உதவி தொகை...என அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது...மாணவ மாணவிய செல்வங்கள் இதனை பயன்படுத்தி முன்னேற வாழ்த்துக்கள்....பிள்ளைகளின் வருமானம் பெற்றோர்க்கு அவமானம் என விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலமாக தமிழக அரசு மாற்றி வருகிறது.....பெற்றோர்கள் தங்கள் இல்ல செலவீனங்களில் குழந்தைகளின் கல்விக்கென ஒரு தொகையை ஒதுக்கும் அளவிற்கு கல்வியின் அவசியத்தை தற்போது அனைவரும் உணர்ந்துள்ளனர்...தமிழகம் தற்போது கல்வியில் சிறந்து விளங்குகிறது...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X