'கனவுலகில் சஞ்சரிக்கிறார் ஸ்டாலின்' அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'கனவுலகில் சஞ்சரிக்கிறார் ஸ்டாலின்'
அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

சென்னை, ''தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கனவுலகில் சஞ்சரிக்கிறார்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

காவிரி விவகாரம்,  ஸ்டாலின், அமைச்சர் ஜெயகுமார் கிண்டல், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் , அனைத்து கட்சி கூட்டம்,  காவிரி பிரச்னை,  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, 
Stalin, Minister Jayakumar , DMK Chief executive Stalin, Fisheries Minister Jayakumar, All Party Meeting, Cauvery Affairs, Cauvery Issue, Supreme Court Judgment,

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்து, தினமும், அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார்.
காவிரி விவகாரத்தில், சட்டப் போராட்டம் நடத்தி, நம் உரிமையை நிலை நாட்டி உள்ளோம்; இதை, அவரால் பொறுத்துக்கொள்ள


முடியவில்லை.காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பாயத்தில் கூறப்பட்ட தீர்ப்பு, அப்படியே செயல்படுத்தப்பட்டு உள்ளது.பெங்களூரில் ஆணைய அலுவலகம் இருக்கக்கூடாது என்றோம்; அதையேற்று, டில்லியில், ஆணைய அலுவலகத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.

ரஜினிக்கு காலம் கடந்த ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த கட்சி, அ.தி.மு.க., தான். உள்ளாட்சி அமைப்புகளில், 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, ஜெ., சட்டம் இயற்றினார். எங்கள் கட்சி அரசமரம் போன்றது; 24 மணிநேரமும் ஆக்சிஜன் கொடுக்கும். உற்ற தோழன் யார்; வேண்டாதவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.மாநிலங்களுக்கு, பெட்ரோல் மற்றும் மதுபானம் வாயிலாக, அதிக வருவாய் கிடைக்கிறது

Advertisement

. அவற்றை, ஜி.எஸ்.டி.,வரம்பில் கொண்டு வந்தால், மாநில வருவாய் பாதிக்கும்; எனவே, அதை ஏற்க மாட்டோம்.கட்சியில் மோதல் என, தவறான கருத்து பரப்பப்படுகிறது. நாரதர் போல, சிண்டு முடியும் வேலை வேண்டாம். என்ன செய்தாலும், ஒற்றுமையை சீர் குலைக்க முடியாது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேட்டில், யார் ஈடுபட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JANANI - chennai,இந்தியா
22-மே-201817:08:50 IST Report Abuse

JANANIStalin kanavu eppavum thamilagathil palikaathu

Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
22-மே-201817:08:43 IST Report Abuse

S.AJINSஸ்டாலினை குறை சொல்வதை விட்டுவிட்டு ஒழுங்கா ஆட்சி நடத்தும் வழியை பாருங்கள்

Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
22-மே-201817:07:34 IST Report Abuse

S.AJINSஇந்த ஆட்சியின் லட்சணத்துக்கு ஸ்டாலின் கனவு காண்பது எவ்வளவோ மேல்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X