'இங்கு தகவல் விற்பனைக்கு உள்ளது':வசூலில் சீறிப்பாயும் 'காளை' டிவிஷன் போலீசார்!

Added : மே 22, 2018
Share
Advertisement
அக்னி நட்சத்திரம் கொளுத்தினாலும், அவ்வப்போது பெய்த கோடை மழை திருப்பூரை குளிர்வித்து கொண்டிருந்த ஒரு மாலை வேளை. மழைக்காற்றை ரசித்து கொண்டே, சித்ரா, மித்ராவும், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ''கோடை மழை பெய்யுதோ இல்லையோ. நம்ம 'சவுத்' பிரதிநிதி காட்டிலோ 'செம' மழையாம்,'' என சித்ரா சொன்னதும், ''அக்கா, கொஞ்சம் புரியற மாதிரி
 'இங்கு தகவல் விற்பனைக்கு உள்ளது':வசூலில் சீறிப்பாயும் 'காளை' டிவிஷன் போலீசார்!

அக்னி நட்சத்திரம் கொளுத்தினாலும், அவ்வப்போது பெய்த கோடை மழை திருப்பூரை குளிர்வித்து கொண்டிருந்த ஒரு மாலை வேளை. மழைக்காற்றை ரசித்து கொண்டே, சித்ரா, மித்ராவும், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். ''கோடை மழை பெய்யுதோ இல்லையோ. நம்ம 'சவுத்' பிரதிநிதி காட்டிலோ 'செம' மழையாம்,'' என சித்ரா சொன்னதும், ''அக்கா, கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.''திருப்பூர் முழுசும் குப்பை அள்ளுகிற, தனியார் கம்பெனி தொழி லாளர்களுக்கு சம்பளம் வழங்க 'லேட்' ஆகுதாம். இதை தெரிஞ்சுகிட்ட, 'குண'மான 'சவுத்', அவரது பினாமி பைனான்ஸில் இருந்து, தனியார் கம்பெனிக்கு பணத்தை கொடுக்க, அவ்வப்போது ஏற்பாடு செய்கிறார். கார்ப்ரேஷன் பில் சாங்ஷன் ஆனதும், வட்டியும், முதலுமாக வாங்கிடறாராம்,'' என்றாள் சித்ரா.''அப்ப.. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்ன்னு சொல்லுங்க. தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்தோம்னு ஆச்சு. இன்னொரு, பக்கம் வட்டியும் வந்துருதில்ல,'' என்று கூறி சிரித்த மித்ரா, ''ஆமா... அதெப்படி ஒரே ஊர்ல, ரெண்டு லேடி ஆபீஸரை, மியூட்சுவல்'டிரான்ஸ்பர் செஞ்சாங்க?''என கேள்வி எழுப்பினாள்.''அதில, நிறைய அரசியல் தலையீடு இருக்குன்னு, போலீசார் மத்தியில் ஒரு பட்டிமன்றமே நடக்குது. கடந்த ரெண்டு மூணு மாசமா, 'டிசி' ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் மூலம், எஸ்.பி., போஸ்ட்டாக டிரான்ஸ்பர் வாங்கிட்டாங்க. அதேபோல், எஸ்.பி., 'டிசி'யாக மாறிட்டாங்க. ஆக மொத்தத்தில், 'டாலர்' சிட்டியை விட்டு போறதுக்கு, ரெண்டு 'லேடி' ஆபீசர்களுக்கும் மனசு வரலை போல,'' சித்ரா விளக்கினாள். ''ஆமாக்கா... இந்த 'சவுத்' அதிகாரியால்தான், பிரச்னை பெரிசாகுதுன்னு, ஒரு குரூப், 'சீறும்' அதிகாரிகிட்ட பத்த வச்சுட்டாங்களாம். உங்களுக்கு மேட்டர் தெரியுமா?'' என, மித்ரா கேட்பதற்கும், பெரியபாளையம் கோவில் வருவதற்கும் சரியாக இருந்தது. வண்டியை நிறுத்திய சித்ரா, 'பார்க்கிங்' டோக்கன் வாங்கி விட்டு வந்தாள். இருவரும், கோவிலுக்குள் நுழைந்தனர். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில், பிரதோஷ கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. இருவரும் வரிசையில் நின்றனர். ''ஏண்டி, போலீஸ் மேட்டர் எனக்கு தெரியாதா என்ன? சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து, பி.ஜே.பி.,க் காரங்க ஆர்ப்பாட்டம் செய்யப்போறதா, ஒரு நாளைக்கு முன்னாடியே சொன்னாங்களாம். ஆனா, 'தங்க'மான அதிகாரி, மற்ற 'வேலை'களை பார்த்துட்டு, அசால்ட்டா விட்டுட்டார். அடுத்த நாள் ஆர்ப்பாட்டத்துக்கு, 150 பேர் திரண்டதும்தான், விஷயம் 'சீரியஸ்'ன்னு அதிகாரிக்கு தெரிஞ்சுது. ஓடோடி போய், சமாதானம் செஞ்சாராம். இதுக்கு முன்னாடி கூட, ரெண்டு சம்பவங்களில், இவரால்தான் பிரச்னை வந்ததுன்னு, பெரிய அதிகாரி, 'சீறி'கடிச்சு குதறிட்டாராம். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை'ன்னு வள்ளுவர் சும்மாவா சொல்லியிருக்கார்,''''என்னக்கா, கோவிலுக்குள் வந்ததும், திருக்குறள் அதுஇதுன்னு சும்மா, வெளுத்து வாங்கறீங்களே,'' மித்ரா, மெதுவாக சொன்னதும், ''ஏய்.. கம்முன்னு வா. சன்னதி வந்துருச்சு,'என்ற சித்ரா, பவ்யமாக, சுக்ரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.இருவரும், கோவிலை சுற்றி வந்து ஓரமாக அமர்ந்து கொண்டனர். ''மித்து... பக்கத்தில இருக்கிற, 'காளைக்கு' பெயர் போன சப்-டிவிஷனில், ''தகவல்களை விற்பனை செய்றாங்கன்னு, கேள்விப்பட்டேன். உண்மையா?,'' என்று பிரசாதத்தை சாப்பிட்டவாறே கேட்டாள் சித்ரா.'நுாத்துக்கு நுாறு உண்மைங்க்கா. அந்த சப்-டிவிஷனுக்கு உட்பட்ட எல்லா ஸ்டேஷனிலும், 'சரக்கு', 'லாட்டரி', 'கஞ்சா' இப்படி எந்த 'கேஸ்' போட்டாலும், அதுபத்திய தகவல்களை, வக்கீல்களுக்கு விற்கிறாங்களாம். அப்பதான், ஜாமின் வாங்கவும், 'கிளையன்ட்' பிடிக்கவும், வக்கீல்களுக்கு வசதியாக இருக்குதாம். போலீசே இப்படி பண்ணுனா, என்னான்னு சொல்றது. புது எஸ்.பி., யாவது இதனை கண்டிப்பாங்களான்னு தெரியலே,''என்று புலம்பினாள் மித்ரா. ''இப்பதானே, வந்திருக்காங்க. போகப்போக பார்த்துக்கலாம்,'' என்ற சித்ரா, ''இந்த, அவிநாசியில தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில், ஏகப்பட்ட சொதப்பலாமே,'' என்றாள்.''எனக்கு தெரிய லைங்க்கா... நீங்களே சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.''அட.. அந்த விழாவுக்காக, ஊர் பூராவும், பிளக்ஸ் பேனர் வச்சிருந்தாங்களாம். ஜெ., படம் மட்டும் இருந்திச்சாம். இப்போதைய முதல்வர் படம் இல்லையாம். இதைப்பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி அடைஞ்சு, சபாநாயகர்கிட்ட 'கம்ப்ளைன்ட்' பண்ணாங்களாம்,'' என்று சித்ரா கூறியதும், ''பரவாயில்லையே, ஜெ., வை மறக்காம இருக்கறாங்களே,'' என்ற மித்ரா, தண்ணீர் குடித்தாள்.''அதே விழாவில், மானிய ஸ்கூட்டர் வாங்கினவங்கள்ல, 90 சதவீதம் பேர், வசதி படைச்சவங்களாம். ஆளுங்கட்சியினரின் மகள், மனைவின்னு, பலரும் வண்டி வாங்கினாங்களாம். அவங்க மனசு வைச்சா, நாலு பேத்துக்கு, வாங்கி தரலாம். ஆனா, அதை விட்டுவிட்டு, கவர்மென்ட் மானியம்னு சொல்லி, நல்லாவே வாங்குறாங்க,'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.அப்போது, இருவரின் பேச்சும், ரெவின்யூ டிபார்ட்மென்ட் பக்கம் திரும்பியது. ''டெபுடி பி.டி.ஓ., டிரான்ஸ்பர் விவகாரத்தில், கலெக்டர் ரொம்ப 'டோஸ்' விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''என்னக்கா சொல்றீங்க. சத்தமே இல்லாம 'டிரான்ஸ்பர்' நடந்திருக்குது போல,'' என்று மித்ரா ஆர்வமானதும், ''அரசுத்துறையில், லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதுன்னு, எல்லாருமே சொல்றாங்க. இந்த நேரத்தில், ஊரக வளர்ச்சித்துறையில், 'டிரான்ஸ்பர்' மேட்டரில், 'வைட்டமின் ப' புகுந்து விளையாடுச்சாம்,''''அந்தந்த யூனியனில், பணியிடம் காலியா இருக்கறப்ப, 'கவனிக்காத' நபர்களை, வேற யூனியனுக்கு மாத்திட்டு, அங்கிருந்த ஆளுக்கு நெருக்கடி கொடுக்கற மாதிரி, அந்த யூனியனுக்கு மாத்திட்டாங்க. குறிப்பா, காங்கயம், திருப்பூர் யூனியனில் இப்படி நடந்திருக்குது. இதை தெரிஞ்சுகிட்ட, கலெக்டர், 'இது தேவையான்னு,' கேட்டு, 'செம' டோஸ் விட்டாராம். கடைசி வரைக்கும் விசாரிச்சு பார்த்தும், எவ்வளவு தொகை கைமாறுச்சுனு யாராலும் கண்டுபிடிக்கவே முடியலைன்னு, அந்தத்துறை அதிகாரிகளே புலம்பறாங்களாம்,'' என, விளக்கினாள் சித்ரா.''எவ்வளவு சொல்லுங்க. அதிகாரிங்க மட்டுமே திருந்தவே மாட்டாங்க போல. இதே மாதிரிதான், வருவாய்த்துறையில், ஒரே 'வசூல்' வேட்டையாம்,'' என்றாள் மித்ரா.''ஜமாபந்தி வந்ததால், ஒவ்வொரு நாளும், 50 பேர் வரை, தாலுகா ஆபீசுல இருப்பாங்க. 'டிபன்', 'லஞ்ச்', இடையே போண்டா, வடை, காபினு பல செலவு செய்ய வேண்டியிருக்கும். வேற எந்த நிதியும் இருக்காது என்பதால், ஒவ்வொரு செலவுக்கும் 'ஸ்பான்ஸர்' பிடிக்க வேண்டியிருக்கு. அதனால, போன ஒரு வாரமாவே, தாலுகா அளவுல 'வசூல்' வேட்டையை ஆரம்பிச்சுட் டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''வசூல் வேட்டைன்னு சொன்னதும், ஞாபகத்துக்கு ஒரு விஷயம் வருதுங்க்கா. வெள்ளியங்காட்டில், கூடுதல் கட்டணம் வசூல் பண்றாங்கன்னு வடக்கு ஆர்.டி.ஓ., மினி பஸ்களை பறிமுதல் செஞ்சாருல்ல. பஸ் உரிமையாளர்கள், ஆர்.டி.ஓ., வை 'கரெக்ட்' பண்ணி, பஸ்சை எடுக்க போனாங்களாம்,''''நொய்யல்ல பாலம் கட்டற வேலை நடக்குது. அதுக்கு, ஆளுக்கு 10 ஆயிரம் கொடுங்க. இல்லைன்னா, பஸ்சை வெளியே எடுக்க முடியாதுன்னு,' 'சவுத்'தோட ஆட்கள் 'கெடுபிடி' செஞ்சிருக்காங்க. 'எல்லாம் நேரக்கொடுமை' என்று கலங்கியபடி, கப்பம் கட்டிட்டு பஸ்சை எடுத்தாங்களாம்,'' என்று மித்ரா சொன்னதும், ''எப்படியோ, 'டப்பு' வந்தா சரிதான்ங்கிற மாதிரிதான், ஒவ்வொரு நாளும் ஓடுது,'' என்றாள் சித்ரா.''அட... மித்து, இந்த வசூல் மேட்டரையும் கேளு. கோழி பண்ணையூரில், உள்ள கவர்மென்ட் ஸ்கூல் அட்மிஷனுக்கு, எக்கச்சக்கமா, 'பீஸ்' வாங்கி தள்ளறாங்களாம். இத்தனைக்கும், அது, 'எய்டட்' ஸ்கூலாக இருந்தும், இப்படி பண்றாங்களேன்னு, மக்கள் 'கரடி'யாக கத்தினாலும், கண்டுக்க வேண்டிய கல்வி அதிகாரிகள், வழக்கம் போல, 'வாவ்'ன்னு கொட்டாவி விடறாங்கப்பா...'' என்றாள் சித்ரா.அதற்குள் மழை வருவது போல், கருமேங்கள் சூழ, இருவரும் புறப்பட்டனர். அதே ரோட்டில், நார்த் போலீஸ் ஜீப், வேகமாக சென்றது. அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா.. இந்த கூத்தை கேளுங்க. ராத்திரி, 11 மணிக்கு மேல், திறந்திருக்கிற டீக்கடைகளை அடைக்கச் சொல்லி, லேடி எஸ்.ஐ,. மைக்கில் சொல்றாங்க. உடனே, ஜீப்பில் இருந்து குதிச்சு, ஸ்பீடா போற மாதிரி 'பாவ்லா' பண்ற போலீஸ்காரங்க, கடை ஓனர்கிட்ட, அமுக்கமாக 'ப'வை வாங்கிட்டு, 'சரி...சரி.. சீக்ரம் பூட்டுங்க. மேடம் சத்தம் போடுவாங்க,' என்று சொல்லி, 'நல்லாவே' ரோந்து டியூட்டி பார்க்கிறாங்க,'' என்றாள்.''சரி.. எஸ்.ஐ., இதை கண்டுக்க மாட்டாங்களா?'' என்று சித்ரா கேட்டதும், ''அடப்போங்க்கா... அவங்க, எப்போதும் மொபைல் போனை, பார்த்துக்கிட்டே இருந்தா, போலீஸ்காரங்க வசூல் பண்றது எப்படி தெரியும்,'' என்று மித்ரா கூறி முடிக்கவும், மழைத்துளி விழவும் சரியாக இருந்தது. ''பெரிசா, வர்றதுக்குள், வீட்டுக்கு போயிடணும்,'' என்ற சித்ரா, எக்ஸலேட்டரை முறுக்கினாள். அப்போது, வானத்தில், 'பளீர்' என மின்னல் வெட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X