பொது செய்தி

தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மோசடி; புகார் மனு

Added : மே 22, 2018
Share
Advertisement

திருவண்ணாமலை: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த, 'டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட்' என்ற நிதி நிறுவனம், வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகை, 63வது மாதத்தில், இரட்டிப்பாக வழங்கப்படுவதாகக் கூறி, நாடு முழுவதும் பல கோடி வசூல் செய்தது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர், ஏஜன்டுகளாக செயல்பட்டு, பணம் வசூலித்தனர். இந்நிறுவனம், திடீரென மூடப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க, கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதற்கான, நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்நிதி நிறுவனத்தில் ஏஜன்டாக பணிபுரிந்தவர்கள், கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X