சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச்சூட்டுக்கு பலி 11

Updated : மே 22, 2018 | Added : மே 22, 2018 | கருத்துகள் (532)
Advertisement
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் , போலீஸ் மீது கல்வீச்சு , போலீஸ் தடியடி,ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை, ஸ்டெர்லைட் ஆலை,   நாட்டுப்படகு மீனவர்கள், போலீஸ், தூத்துக்குடி போராட்டம், ,  ஸ்டெர்லைட் போராட்டம், 
Thoothukudi Sterlite Struggle, Police Tear gas,  Violence in Sterlite protest,

Sterlite plant, Thoothukudi MLA Geetha Jeevan, fishermen , police, Thoothukudi struggle, sterile protest

தூத்துக்குடி; தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்து சிகிச்சைபெற்றுவந்த கார்த்திக், பங்குதந்தை லியோ ஜெயசீலன் ஆகியோர் உயிரிழந்ததை அடுத்து பலி 11 ஆக உயர்ந்தது.


போர்க்களமாக காட்சி


கலெக்டர் அலுவலகத்தின் வாயில் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கலவரத்தை தொடர்ந்து, ஊழியர்கள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார், தடியடி நடத்தி கலவர கும்பலை வெளியேற்றியது. தொடர்ந்து கலவரம் நடந்ததால், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 11 பேர் பலியானார்கள். கிங்ஸ்டன், வினிதா, தமிழரசன், மாரிச்சாமி ஆகியோர் உயிரிழந்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலியானவர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விவரம் வருமாறு:கந்தையா, கிளாஸ்டன், தமிழரசன், சண்முகம், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித் குமார், ஸ்னோவ்லின், வினிதா, கார்த்திக், லியோ ஜெயசீலன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர், திண்டுக்கல், மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு 10 கம்பெனி போலீசார் விரைந்துள்ளனர்.


100 வது நாள்ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் சில மாதங்களாக பல்வேறு போராட்டம் நடந்து வருகிறது. இன்று 100 வது நாள் போரட்டம். மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர்.


துப்பாக்கிச்சூடு:வன்முறை கும்பலை சமாளிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இன்று நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மாவட்டம் முழுதும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (532)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumaran - chennai,இந்தியா
25-மே-201806:46:36 IST Report Abuse
sugumaran ஸ்டெர்லிட் 1993 அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஒப்புத்தல் அளிக்கப்பட்டு 1996 கருணாநிதியால் துவங்கப்பட்டது. மக்கள் மேல் அக்கறை உள்ள மாநிலமான, குஜராத், மகாராஷ்டிரா இந்த தொழிச்சாலை சுற்று சூழலுக்கு தீங்கு வரும் என்று கணக்கிட்டது. ஆனால் நம் முதல்வர்களும் கணக்கிட்டார்கள், அது என்ன வென்று உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Mahadevan Sankaranarayanan - Bangalore,இந்தியா
24-மே-201807:34:15 IST Report Abuse
Mahadevan Sankaranarayanan திரு.வரதராஜன், திருச்சி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இழப்பீடு மற்றும் அரசு வேலை தீர்வு ஆகாது. இவர்களுக்கு தெரிந்த ஒரே தீர்வு இதுதான் போல. பிரச்சினைகளை சரியாக ஆராய்ந்து முடிவெடுக்கக் கூடிய முதலமைச்சர்கள் காமராஜருக்கு பிறகு யாரும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
N.G.RAMAN - MADURAI,இந்தியா
23-மே-201812:34:18 IST Report Abuse
N.G.RAMAN பெண்களையும் சிறுவர்களையும் கேடயமாகப் பயன்படுத்தி போராட்டம் நடத்துவது மிகக் கேவலமான செயல். உலகின் பெரும்பாலான வன்முறைக் குழுக்கள் இந்த போராட்ட முறையைத்தான் பின்பற்றி வருகின்றன. இவர்களின் நோக்கம் அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதுதான். சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டும் என்று எந்த அரசும் நினைக்காது. போராட்டக்கார்கள் பொது சொத்துகளை நாசப்படுத்தினால் போலீஸார் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். காவலர்களைத் தாக்கினால் காவல்துறையினர் அமைதி காக்க வேண்டும். இது போராட்டத்தை தூண்டி விடுவோரின் எண்ணமாக இருக்கிறது. இலங்கையை பாழ் படுத்திய கூட்டம் தமிழகத்தை நாசமாக்க பார்க்கிறது. தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X