அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஸ்டாலின் கண்டனம்

Added : மே 22, 2018 | கருத்துகள் (105)
Share
Advertisement
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் இன்று தலைமை செயலாளரை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி
 ஸ்டெர்லைட், துப்பாக்கிச்சூடு, ஸ்டாலின், கண்டனம்

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் இன்று தலைமை செயலாளரை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். மேலிடத்து உத்தரவு வராமல் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை. குருவியை சுடுவது போன்று நடத்திய போலீசாரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இந்த அரசு தலா ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டும்.
முன்னதாக நாளை கர்நாடகா முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்துவிட்டு, நாளை தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை பார்வையிட உள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-மே-201804:10:47 IST Report Abuse
meenakshisundaram வைகோ போன்றவர்களுக்கு இந்த துப்பாக்கி சூடு மிகவும் அருமையாக கிடைத்த வாய்ப்பு.சவங்களை வைத்து அரசியல் செய்யும் இவர் போன்றவர்களுக்கு ஒரு டெட் body இருந்தால் போதும் ,வசனங்கள் அருமையாக வரும்.உணர்ச்சிகளை கிளப்பி விட்டு ஊர் ஊராய் தற்கொலைகளை தூண்டி விட்டு அதில் சம்பாரிக்கும் கூட்டத்தை தமிழர்கள் என்று ஒதுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே அமைதி வரும்.எல்லா மொழிகளையும் குறிப்பாக ஹிந்தியையும் கற்று மற்ற மொழியினரின் கலாச்சாரத்தியும் மதிக்கத்தெரியாதவன் மனிதனா?இலவசம் ,இட ஒதுக்கீடு இவற்றை தவிர 'இனம் 'என்ற மூன்றினாலும் அவன் நொண்டியாகிவிட்டான்.அவனால் வசனம் பேச முடியுமே தவிர செயலில் ஒன்றையும் சாதிக்க இயலாதவனாகி விட்டான்.மேடை பேச்சுக்களை நம்பியே வாழும் இவனுக்கு தன மானமே இல்லை.நூறு மீட்டர் ஓடிஏ சொன்னால் ஒதுக்கீடு முறையில் என்பது மீட்டர் ஓடுகிறான்.69 % இவன் வாழ்வில் இப்போது டாஸ்மாக் போதையை இவன் வாழ்வில் ஏற்படுத்தி விட்டது.சம்மோக நீதி என்னும் சாராயம் அவனது இரத்தத்தில் ஓடுகிறது.இதிலிருந்து மீண்டு வருவானா?வேல் முருகன் போன்றோர் வேலேந்திய கடவுளாகவும் ஆகி விட்டனர்.இவனை கரை ஏற்றுவது யார்?
Rate this:
Cancel
senthil kumar - Dindigul,இந்தியா
23-மே-201813:40:39 IST Report Abuse
senthil kumar இதுக்கு மூல காரணமே தி மு க தான் ....ஸ்டாலின் மேல கல் எறிஞ்சா தெரியும் ...போலீஸ் மேல தான .
Rate this:
Cancel
Balaji - Bangalore,இந்தியா
23-மே-201809:59:43 IST Report Abuse
Balaji இதற்க்கு காரணமே வைகோவும் ஸ்டாலின் தான். இவர்களை கைது செய்யாமல் eps வேடிக்கை பார்க்கிறார். பாமரமக்களை தூண்டிவிடும் இவர்கள் தான் முதல் குற்றவாளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X