சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது இன்று போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியாயினர். இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்ககப்படும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், துப்பாக்கிச்சூடு சமப்வம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பபட்டுள்ளது.
கவர்னர் இரங்கல்
துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட சம்வத்தில் உயிரிழந்த 11 பேர் குடும்பத்தினருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டிட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE