அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மக்கள் விரும்பாத திட்டத்திற்கு
அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்

சென்னை, ''மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு, தமிழக அரசு ஆதரவு அளிக்காது. துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை இயங்காமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுக்கும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

'மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அரசு ஆதரவு அளிக்காது: அமைச்சர் ஜெயக்குமார்


சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:'ஸ்டெர்லைட்' ஆலையின் இரண்டாம் கட்ட பணிக்கு, இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. மக்களுடைய உணர்வுகளை மதிக்கிற அரசாக, தமிழக அரசு உள்ளது

600 வாகனங்கள்


'மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கக் கூடாது' என, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்புகிற திட்டத்திற்கு, அரசு ஆதரவு அளிக்கும். மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு, அரசு ஆதரவு அளிக்காது.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும். தி.மு.க., ஆட்சியிலிருந்த, 10 ஆண்டுகளில், ஆலையை மூட, எந்த


முயற்சியும் எடுக்கவில்லை. ஜெ., அரசு, 2013ல், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என முடிவெடுத்தது; அந்த நிலையை தொடர்கிறோம்.இந்நிலையில், அ.தி.மு.க., அரசை, ஸ்டாலின் எப்படி குறை கூற முடியும்; பேரணிக்கு தலைமை வகித்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., கீதாஜீவன் சார்பில், 600 வாகனங்கள், அந்தஆலைக்காக ஓடுவதாக தகவல். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மருமகன், அங்கு, 'கான்ட்ராக்ட்' எடுப்பதாக தகவல்; ஆலையால் பயன்பெறும் கட்சிகள் இவை.நாங்கள், பொது மக்கள் உணர்வை மதித்து, ஆலை வேண்டாம் என்கிறோம். ஆலை இயங்காமல் தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுக்கும். அரசு சார்பில், 20 முறை பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆலையை நடத்த, அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆலையை மூடிய பின், போராட்டம் நடத்தியதில், உள்நோக்கம் உள்ளது.தவிர்க்க முடியாதது.

தவிர்க்க முடியாதது


எதற்கும் வன்முறை தீர்வாகாது. வன்முறையால் சாதிப்பதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியான போராட்டத்தை மட்டுமே, ஏற்க முடியும். துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதில், இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு முடிவு செய்யும். விசாரணை ஆணையம் அமைப்பது குறித்தும், அரசு தீர்மானிக்கும். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம், அறிக்கை

Advertisement

கேட்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.உயிர் காக்கும் பயிற்சி!சென்னையில், கடல் அலையில் சிக்குவோரை மீட்டு, முதலுதவி அளிப்பதற்காக, மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:கடலில், கரையிலிருந்து, 100 மீட்டர் தொலைவில், கடல் உள்ளே, 'அண்டர் கரன்ட்' இருக்கும். அதில் செல்லும்போது, சமாளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறு கடல் அலையில் சிக்கி, தவிப்போரை காப்பாற்ற, மீன்வளத்துறை சார்பில், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.அந்த நிறுவனம் சார்பில், 20 மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். கடலில் சிக்கி, உயிருக்கு போராடுவோருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கவும், பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழு நாட்கள் பயிற்சி முடித்த பின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் கடற்கரையில், ஆபத்தில் சிக்குவோரை மீட்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rama - johor,மலேஷியா
05-ஜூன்-201813:34:15 IST Report Abuse

ramaசுடுவதற்கு முன் ஆதரித்தோம் சுட்ட பிறகு மக்களுக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன், காங்கிரஸ், பாஜகா, திமுகா இப்போது ஆட்சி செய்யும் அதிமுக தமிழர்களின் துரோகிகள்

Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
28-மே-201810:11:02 IST Report Abuse

Amal Anandanபேச்சு மாறாமல் சொன்னதையே சொல்லுபவர்கள் அதிமுகவினர் ஆனால் செயல் முட்டை.

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
25-மே-201817:02:03 IST Report Abuse

Sundaramபொதுமக்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ஆலையையும் தமிழக அரசு அனுமதிக்காது

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X